ஆகாயம் (வெட்டவெளி) -1
அறிமுகம்
படைப்பின் தொடக்கத்தில் இறைவன் ஓம் என்ற ஓலியைக் கூறினார். அதனை வைத்திருக்க ஒரு இடம் தேவைப்பட்டது. வெட்டவெளி இதனால் உருவாகியது. எங்கும் வியாபித்திருக்கும் அளவற்ற ஆற்றல் அதற்கு உண்டு. அது எல்லாவிடத்திலும் இருக்கிறது. அது அனைத்தையும் தனக்குள் அடக்கி கொள்ளவல்லது. நமது முன்னோர்கள் வெட்டவெளி தன்னை இறைவனாகக் கருதி வழிபட்டனர். அதற்கு சப்தப்ரம்மன் (ஒலி வடிவிலான இறைவன் ) என்று பெயரிட்டனர்.
குணங்கள், இயல்புகள்
ஆகாயம் என்ற இந்த மூலக்கூறு (ELEMENT), ஒலியைத் தனது இயல்பாகக் கொண்டுள்ளது. இசையும் மற்ற எல்லா ஒலிகளும், அனைத்துப் பொருளுக்கும் (MATTER) ஆற்றலுக்கும் (ENERGY) ஆதாரமான ஓம் என்ற பேரண்ட ஒலியின் பலவித வெளிப்பாடுகளேயாகும். வெட்டவெளி எவ்வாறு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் தன்மை கொண்டதோ, அவ்வாறே நாமும் நமது இதயத்தை விரிவடையச் செய்து, அனைத்தையும் நமக்குள் ஏற்று, படைப்பு முழுவதையும் நேசிக்கும் பேரன்பு நிறைந்து இருக்க வேண்டும்.
பாடல்
As space accommodates everything
Let my heart encompass every being.
கதை
ஜப்பானில் ககாவா (KAGAWA) என்ற பண்புள்ளம் படைத்த உயர்ந்த மனிதர் இருந்தார். அவர் ஜப்பானிய மகாத்மா காந்தி என்று அழைக்கப்பட்டார். ஒரு சிறிய நகரத்தில் எளியவாழ்வு வாழ்ந்து வந்தார். அனைவரும் அவரை நேசித்தனர். அதே நகரத்தில் எல்லாரும் அறிந்த ஒரு மோசமானவன் இருந்தான். ஒவ்வொருவருடனும் தகராறு செய்து வந்தான். ஒருவரும் அவனை நேசிக்கவில்லை. அனைவரும் ககாவாவைப் புகழ்ந்தபோது அவன் பொறாமை மிகுந்து அவரை வெறுக்கத் தொடங்கினான். அவருக்கு துன்பம் இழைக்க விரும்பினான். ஒருநாள் இரவில் அவர் வீட்டுக்குச் சென்றான். ககாவா தனக்கு முன்னால், சிவந்த கண்ணுடன் அந்த மனிதன் தன்னைக் கொல்லத் தயாராக இருப்பதைக் கண்டார். ஆனால் அவர் அமைதியாக இருந்தார். கூப்பியகரங்களுடன் இறைவனைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். “இறைவா, அவனுக்கு நல்ல புத்தி கொடுங்கள். அவன் நலமாக நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார், தன்னைக் கொல்ல வந்த அந்த மனிதன் தனது நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வதுகண்டு ஆச்சரியமடைந்தான். ககாவா அன்பு நிறைந்த புன்சிரிப்புடன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அந்த மனிதன் கத்தியை கீழே எறிந்தான். ககாவாவின் கால்களில் விழுந்து அழத் தொடங்கினான். ககாவா அவனை எழுந்திருக்கச் செய்தார். தழுவிக்கொண்டார். கண்ணீரைத் துடைத்தார்.”அன்பரே,கவலைப் படாதீர். தவறுதல் மனிதகுணம். மன்னிப்பது தெய்வீகம்” என்று கூறினார். ககாவாவின் பிரார்த்தனையாலும் அன்பாலும் அம்மனிதனின் இயல்பு முழுமையாக மாறியது, அவன் தலைவனாக மாறினான்.
மௌனமாக உட்கார்ந்திருத்தல்
குழந்தைகள் மவுனமாக உட்கார்ந்து கண்களை மூடிகொண்டு கீழ்க்கண்டவாறு கற்பனை செய்து கொள்ள வேண்டும். “நான் ஒரு தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். அனைத்தும் அழகாக இருக்கிறது. பறவைகள் பாடிக்கொண்டு மிகவும் மகிழ்சியுடன் இருக்கின்றன. ஒரு குளிர்ந்த தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. நான் நீலவானத்தைக் காண்கிறேன். வெற்றிடம் அங்கே எவ்வளவு இருக்கிறது, நான் விரிந்து கொண்டே செல்கிறேன். வானம்போல பெரியவனாகிக் கொண்டே இருக்கிறேன். வானம், எல்லா ஜீவராசிகளையும், “மேலே மிதந்து வாருங்கள். அனுபவித்து மகிழுங்கள்” என்று கூறுகிறது. ஒளிக் கிரணங்களுடன் அன்பு நிறைந்து சூரியன் ஓளி வீசிக் கொண்டிருக்கிறது. எல்லா மனிதர்கள், விலங்குகள், பறவைகள், கிரகங்கள், மீன், பாறைகள் ஆகிய அனைத்தையும் நோக்கி “வாருங்கள், வாருங்கள். என்னிடம் வாருங்கள், எனது அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று, சொல்லி அனைத்தையும் அரவணைக்கும் பொருட்டு நான் என் கைகளை கைகளை நீட்டுகிறேன். நான் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக இருக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்”.
செயல்பாடு
கீழ்க்கண்டகட்டத்தில் உள்ள பஞ்சபூதங்களைக் கண்டுபிடி:
பிரார்த்தனை
“ஸமஸ்த லோகா: ஸுகினோ பவந்து”