காயத்ரி – வேதங்களின் தாய்
வேதங்களின் பிறப்பிடம் காயத்ரி மந்திரம்.காயத்ரி மந்திரத்தை அனைத்து வேதங்களின் தாய் என்று கூறுவர். எங்கெல்லாம் காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காயத்ரி இருக்கிறாள். காயத்ரி மிகவும் சக்தி உடையவள். அனைத்து உயிர்களையும் போஷிப்பவள் காயத்ரி. யாரெல்லாம் காயத்ரியை வணங்குகிரர்களோ அவர்களுக்கெல்லாம் தூய பரிசுத்தமான எண்ணங்களை த்தருகிறாள். அனனத்து தேவதைகளின் இருப்பிடமே காயத்ரி. நம்முடைய உயிர் மூச்சே காயத்ரி. நாம் இருப்பதற்கு உள்ள ஆதாரமும் நம்பிக்கையும் காயத்ரிதான். காயத்ரிக்கு ஐந்து முகங்கள் உள்ளது.அவை ஐந்து உயிர் தத்துவங்களாகும். அதாவது அன்னமயகோசம், மனோமயகோசம், பிராணமய கோசம், விக்ஞான மயகோசம், ஆனந்த மயகோசம் என்பதாகும். காயத்ரி ஒன்பது விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளா ள் அவை ஓம்.. பூர்.. புவஹா.. சுவஹா.. தத்.. சவிதுர்.. வரேண்யம்.. பர்கோ.. தேவஸ்ய என்பனவாகும். அனைத்து உயிர்களும் காயத்ரியால் பாதுகாக்கப்பட்டு போஷிக்கப்படுகின்றன. நம் புலன்களை சரியாக நேர் வழியில் செலுத்துகிறாள். “தீமஹி” என்பதற்கு த்யானம்என்று பொருள். நமக்கு சிறந்த அறிவை பெற காயத்ரியை பிரார்த்தனை செய்கிறோம். “தியோயோனப்ப்ரசோதயாத்” என்று நமக்கு தேவையான அனைத்தையும் தருமாறு மனமுருக இறுதியில் வேண்டுகிறோம். ஆகவே காயத்ரி மந்திரம் நம்மை பாதுகாக்கவும், போஷிக்கவும், ஞானம் பெற்று முக்தி அடையவும் ஒரு முழுமையான பிரார்த்தனையாக விளங்குகிறது.