காற்று
அன்புக் குழந்தைகளே!!
சோ ஹம் என்று சொல்லுங்கள். சோ என்று சொல்லும்பொழுது காற்றை உள்மூச்சு வாங்குகிறீர்கள். ஹம் என்று சொல்லும்பொழுது மூச்சுக்காற்றை வெளியேற்றுகிறீர்கள்.
காற்று
அன்புக் குழந்தைகளே!!
சோ ஹம் என்று சொல்லுங்கள். சோ என்று சொல்லும்பொழுது காற்றை உள்மூச்சு வாங்குகிறீர்கள். ஹம் என்று சொல்லும்பொழுது மூச்சுக்காற்றை வெளியேற்றுகிறீர்கள்.
இறைவனால் படைக்கப்பட்ட ஐம்பூதங்களில், காற்று மிகவும் இன்றியமையாதது. உயிரினங்கள் காற்று இல்லாமல் சிறிது நேரம் கூட வாழ இயலாது. நாம் காற்றை வாயுதேவன் என்று வணங்குகிறோம். இப்பொழுது மெதுவாக கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
நாம் இப்பொழுது நறுமணம் வீசும் அழகான மலர்களால் சூழப்பட்ட ஒரு அற்புதமான தோட்டத்துக்குள் செல்கிறோம். தோட்டத்தில் ஒருபக்கம் மல்லிகை மலர்கள் நிரம்பியிருக்க, நடைபாதையை அழகான ரோஜா மலர்கள் அலங்கரிக்கின்றன.
சில்லென்ற காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மலர்களின் நறுமணத்தை ஏற்று வருகிறது. நமது உடல் முழுவதும் இத்தகைய காற்றால் குளிர்ந்து புத்துணர்ச்சி பெறுகிறது. பறவைகள் மரங்களின் மேல் கீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டு நாம் அங்கு நடந்தவண்ணம் இருக்கிறோம்.
ஆஹா! யாரோ அருகினில் புல்லாங்குழலில் இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னிசை நம் காதில் விழுவதால் நாம் அமைதியாக ஆனந்தமாக இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு சக்தியை கொடுக்கிறது. நாம் அன்புக் கிரணங்களையும் ஆனந்தத்தையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம். நாம் காற்றைப் போன்று இருக்க வேண்டும். பணக்காரன் ஏழை, மனிதன் விலங்கு, மலர்கள் செடி கொடிகள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் காற்று அனைவருக்கும் கிடைக்கிறது.
குளிர்ந்த தெளிவான காற்றுப் போல் நமது புன்னகை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும்.
இறைவனது தாமரைப் பாதங்கள் நம் அருகில் எப்பொழுதும் இருக்கட்டும்.
இப்பொழுது கைகளை உரசி, கண்களை மெல்ல தேய்த்து, முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்களைத் திறக்கவும்.
வகுப்பறைக் கலந்துரையாடல்
1. காற்றின் மறு பெயர் என்ன??
2. காற்றின் முக்கியத்துவத்தை பற்றி விளக்குக.
[Source : Silence to Sai-lens – A Handbook for Children, Parents and Teachers by Chithra Narayan & Gayeetree Ramchurn Samboo MSK – A Institute of Sathya Sai Education – Mauritius Publications]
தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது