நிலம் 1
அன்பான குழந்தைகளே!
இயற்கை இறைவனது ஆடை. நமக்கு இவ்வுலகில் வாழ இடமளித்த பூமித்தாயை நம் மனக்கண் முன் நிறுத்துவோம். அவள் நம்மைத் தாங்குகிறாள். இப்பொழுது கண்களை மூடிக்கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சு விடுங்கள்.
நிலம் 1
அன்பான குழந்தைகளே!
இயற்கை இறைவனது ஆடை. நமக்கு இவ்வுலகில் வாழ இடமளித்த பூமித்தாயை நம் மனக்கண் முன் நிறுத்துவோம். அவள் நம்மைத் தாங்குகிறாள். இப்பொழுது கண்களை மூடிக்கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சு விடுங்கள்.
இறைவன் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்று ஐம்பூதங்களை அளித்துள்ளான். அவை இறைத் தன்மை உடையன என்று வேதங்கள் கூறுகின்றன. இந்த பூமியானது நாம் வாழ்வதற்கு வீடு கொடுக்கிறது. சுவாசிப்பதற்கு காற்றும், நம் பசியைப் போக்குவதற்கு நெருப்பும், தாகத்தைத் தணிக்க நீரும், நாம் நடந்து செல்வதற்கு விண்வெளியும் கிடைக்கப் பெற்றோம். ஒன்று இல்லாமல் மற்றொன்றை கற்பனை செய்து பாருங்கள். மனிதன் பூமியைச் சுரண்டி நாசப் படுத்துகிறான்; நீரையும் காற்றையும் மாசு படுத்துகிறான். தனது எதிர்மறையான எண்ணங்களால் சூழலைத் தூய்மையற்ற தாக்குகிறான். நாம் இப்பொழுது எவற்றை காண்கிறோம்? உலகம் வெப்பமயமாதல், பின்வாங்கும் பனிப்பாறைகள் மற்றும் சுருங்கும் ஆறுகள் போன்றவற்றை.
நாம் நமது “பூமித் தாய்”எனப்படும் நிலத்தை எவ்வாறு பாதுகாப்பது?
நல்லவர்களாக இருந்து நன்மையை செய்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், நீரையும் சக்தியையும் வீணடிக்காமல் இருத்தல், மரம் வளர்த்தல் போன்றவற்றால். வேத மந்திரங்கள் ஓதுதல், பஜனைப் பாடல்கள் பாடுவது மற்றும் நேர்மறை எண்ணங்களால் காற்றை நிரப்புதல் போன்ற நற்செயல்கள் மூலம் நாம் நன்மையைப் பரப்ப வேண்டும்.
இறைவா நாங்கள் ஒவ்வொருவரும் இயற்கையை அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவதற்கு நீங்கள் துணை புரிவீர்களாக. இப்பொழுது புன்முறுவலுடன் மெதுவாகக் கண்களைத் திறந்து நாம் இருக்கும் இடத்திற்கு வருவோமாக.
பொறுமை என்னும் பாதை – மலைகளும், மரங்களும் நிறைந்த இந்த பூமியிலிருந்து நாம் பெறும் பாடம்(பிரித்வி)
பூமி நமக்கு தர்மத்தின் பாதையைக் கற்றுத் தருகிறது. நாம் நிலத்தின் மேல் நடக்கிறோம் மற்றும் வேலை செய்கிறோம். நிலம் நம் செயல்களைப் பொறுமையாக சகித்துக் கொள்கிறது. மலைகளும், மரங்களும் எப்பொழுதும் நிலையாக நின்று, பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதனுக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னித்தல் ஆகிய மூன்றையும் பூமியின் மேல் நடந்து கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வகுப்பின் முடிவில், கீழ்க்காணும் வினாக்களை எழுப்பலாம்:
1.பஞ்ச பூதங்கள் யாவை?
2.பூமித்தாய் வருத்தப்படும் படியாக நாம் என்ன செய்கிறோம்?
3.நாம் பூமியை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
[Source : Silence to Sai-lens – A Handbook for Children, Parents and Teachers by Chithra Narayan & Gayeetree Ramchurn Samboo MSK – A Institute of Sathya Sai Education – Mauritius Publications](தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது)