நெருப்பு
அன்புக் குழந்தைகளே!
நிமிர்ந்து அமருங்கள். உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மெதுவாக உள் மூச்சு எடுங்கள். இப்பொழுது நாம் நெருப்பு எனப்படும் ஐம்பூதங்களில் ஒன்றான தீயைப் பற்றி கற்பனைக் காட்சி செய்யப்போகிறோம். அது ஒளியை குறிக்கிறது.
நெருப்பு
அன்புக் குழந்தைகளே!
நிமிர்ந்து அமருங்கள். உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மெதுவாக உள் மூச்சு எடுங்கள். இப்பொழுது நாம் நெருப்பு எனப்படும் ஐம்பூதங்களில் ஒன்றான தீயைப் பற்றி கற்பனைக் காட்சி செய்யப்போகிறோம். அது ஒளியை குறிக்கிறது.
நெருப்பு ‘அக்னி தேவன்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் நெருப்பை வணங்குகிறோம்; ஹோமங்கள் வளர்க்கிறோம்; இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் பொழுது அக்னி ஒளியை உபயோகிக்கிறோம்.. இப்பொழுது மெதுவாக கண்களை மூடிக் கொள்ளுங்கள். நாம் நெருப்பின் வெப்பத்தை உணரப் போகிறோம்.
பொழுது விடிகிறது, நீங்கள் படுக்கையில் இருந்து சீக்கிரம் எழுந்து காலைப் பிரார்த்தனைகள் செய்துவிட்டு, வெளியில் சென்று சூரியனைப் பார்க்கிறீர்கள். சூரிய ஒளி, இரவின் இருளை நீக்கி எங்கும் பரவுகிறது. காலைக் கதிரவனின் வெப்பத்தை நீங்கள் உணர்கிறீர்கள். பின் நீராடி துணிகளைத் துவைத்து வெயிலில் உணர்த்துகிறீர்கள்.
பின் உங்கள் அன்புத் தாயார் நெருப்பில் சமைத்த சிற்றுண்டியை சூடாக பரிமாறுகிறார். சூரியன் உச்சிப் பொழுதில் மேலே ஏறுகிறது. நீங்கள் நெருப்பின் உதவியால் சமைக்கப்பட்ட மதிய உணவை உண்கிறீர்கள். நாள் முழுவதும் சூரியன் ஒளியையும், வெப்பத்தையும், சக்தியையும் கொடுக்கிறது. மாலைப் பொழுதில் சந்திரன் ஒளி கொடுக்கிறது. உமது தாயார் பூஜை அறையில் பிரார்த்தனைக்காக விளக்கை ஏற்றுகிறார். நறுமணம் அளிக்க ஊதுபத்தியும் பற்ற வைக்கப்படுகிறது.
எங்கு ஒளி இருக்கிறதோ அங்கு இருள் இல்லை என்று கற்பனை செய்து கூறுங்கள். நெருப்பு அனைத்து பொருட்களையும் சுட்டு எரிப்பது போல், இறை ஞானமும் அனைத்து கெட்ட எண்ணங்களையும் நீக்கிவிடும். கெட்ட எண்ணங்கள் அனைத்தும் வெளியேறின, தூய எண்ணங்கள் அனைத்தும் உள் இறங்கின. நெருப்பின் சுவாலை எப்போதும் மேல்நோக்கி இருக்கும். அதுபோன்று நம் எண்ணங்களும் நோக்கங்களும் எப்பொழுதும் மேன்மையுடன் இருக்க வேண்டும். மெதுவாக கண்களைத் திறந்து கொண்டு இப் பிரார்த்தனையை சொல்லுங்கள். இறைவா என்னை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியில் வழிநடத்துங்கள்.
வகுப்பறைக் கலந்துரையாடல்
1.நீ எதைப் பார்த்தாய்?
2.நீ எங்ஙனம் உணர்ந்தாய்?
3.நெருப்பின் குணங்கள் யாவை?
[Source : Silence to Sai-lens – A Handbook for Children, Parents and Teachers by Chithra Narayan & Gayeetree Ramchurn Samboo MSK – A Institute of Sathya Sai Education – Mauritius Publications]தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது