நீர்
அன்பான குழந்தைகளே!!
உங்கள் கைகளை நன்கு நீட்டி மேலும் கீழுமாக அசையுங்கள். இப்பொழுது மெதுவாக கைகளைத் தளர்த்தி புன்னகையுடன் இறைவனுடைய படைப்பில் இருக்கும் அழகை ரசித்து உணருங்கள்.
நீர்
அன்பான குழந்தைகளே!!
உங்கள் கைகளை நன்கு நீட்டி மேலும் கீழுமாக அசையுங்கள். இப்பொழுது மெதுவாக கைகளைத் தளர்த்தி புன்னகையுடன் இறைவனுடைய படைப்பில் இருக்கும் அழகை ரசித்து உணருங்கள்.
இயற்கையின் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் இறைவனின் படைப்பாகும். சப்தம், உணர்தல், உருவம், சுவை ஆகிய நான்கு குணங்களும் கொண்டது. எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையும் கொண்டது. நீரில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், சோம்பேறித்தனம் இல்லாமல் எப்பொழுதும் மற்றவருக்கு உதவும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்.
இப்பொழுது கண்களை மூடிக்கொண்டு உங்களது ஒரு நாள் பொழுதை கற்பனை செய்து பாருங்கள். அதிகாலையில் எழுந்து இறைவனை துதித்து குளியலறைக்குச் சென்று, பல் துலக்கினீர்கள். பால் அருந்தி விட்டு தண்ணீரில் குளித்தீர்கள். உங்களது தாயார் நீரில் துணிகளை துவைத்து வைத்தார்கள். உங்கள் வீட்டில் வேலையாள் பாத்திரங்களை தண்ணீரில் சுத்தம் செய்தார்கள். தந்தையார் செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, கைகால்களை சுத்தம் செய்து கொண்டார். நீங்கள் அனைவரும் நீரின் உதவியால் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டியை உண்டீர்கள்.
என் அன்புக் குழந்தைகளே !! நாம் இவ்வுலகில் நீர் இல்லாமல் வாழ இயலாது. நமது தாகத்தைத் தணிப்பதற்காக நீரை உருவாக்கிக் கொடுத்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நாம் நீரை வீணாக்க கூடாது. ஒவ்வொரு துளியையும் சேமிக்கவேண்டும். இந்த அருமையான பரிசுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். இப்பொழுது கற்பனையிலிருந்து மெல்ல வெளிவந்து இந்த வரிகளைச் சொல்லுங்கள்.
தண்ணீர் தண்ணீர் தண்ணீர்!!
இறைவன் உனது படைப்பாளி; அனைவரின் வாழ்க்கையையும் ஆனந்தம் ஆக்குகிறாய்;
உன்னை தூய்மையாக வைத்திருக்க வாக்குறுதி அளிக்கிறேன்.
வகுப்பறைக் கலந்துரையாடல்: வாழ்வாதாரத்திற்கான பாதை –
நீர் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் ;
நாம் நீரைத் தாகம் தணிப்பதற்கு, நீராடுவதற்கு, பொருட்களை சுத்தம் செய்வதற்கு, தாவரங்களை வளர்ப்பதற்கு என பலவிதமாக உபயோகிக்கிறோம். ஒரு நீர்வீழ்ச்சிக் கோ நதிக்கரைக்கோ செல்வது புத்துணர்ச்சி தருகிறது. நாமும் நீரைப் போன்று புனிதமாகவும் மென்மையாகவும் இருந்து, மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவி, நாம் எங்கிருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை பரப்புவோமாக.
1. நீரின் நிறம் என்ன?
2. நீரின் உருவம் என்ன ?
3. நீரின் உபயோகங்கள் யாவை?
[Source : Silence to Sai-lens – A Handbook for Children, Parents and Teachers by Chithra Narayan & Gayeetree Ramchurn Samboo MSK – A Institute of Sathya Sai Education – Mauritius Publications]தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.