கவி காளிதாசரின் கதை
இந்த கதை, ஸமஸ்க்ருத இலக்கியத்தின் அரசரான கவி காளிதாசரைப் பற்றியது. அவர் பிறப்பினால் அறிவுக்கூர்மை ஆனவர் அல்ல. உண்மையில் அவர் ஒரு முட்டாளாகவே இரு தார்.
அப்போது அந்த நாட்டின் அரசர், ஒரு அதிசிறந்த முட்டாளை, அதாவது கவி காளிதாசரைத் தேடி அரண்மனைக்கு அழைத்து வந்தார். அவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார்.
அரசகுமாரி மிகவும் படித்த, அறிவுள்ளப் பெண்ணாக இருந்தாள். தன் கணவனைத் திருத்த முயன்றாள். பலன் முன்னைவிட மோசமாகி விட்டது. இறுதியில், அவள் மிகவும் வேதனை அடைந்து, அவனை மிகவும் பழித்துரைத்தாள். இதனால், காளிதாசர் மிகவும் மனம் நொந்து, அரண்மனையை விட்டு வெளியேறி அரண்மனைக்குத் திரும்பி வருவதில்லை எனத் தீர்மானித்தார். அரண்மனையை விட்டு வெளியேறி, நகரத்திற்கு அப்பாலிருந்த சரஸ்வதி கோவிலுக்குச் சென்றார்.
தேவியை மனமார வணங்கினார். “ஒன்றுக்கும் உதவாத முட்டாளாக என்னை ஏன் படைத்தாய்? எனக்குக் கொஞ்சமாவது அறிவைத் தரக்கூடாதா என்று திரும்பத் திரும்பக் கூறி அழுதார். ஒரு பயனும் கிடைக்காமல் போகவே, நீ என்னுடைய உயிரையாவது எடுத்துக் கொள் என்றுக் கதறிய வண்ணம் கத்தியை எடுத்துக் கழுத்தை அறுக்க முயன்றார் .
அந்தக் கணமே சரஸ்வதி தேவி தோன்றி, அவனுடைய பரிசுத்தமான பண்பையும், நேர்மையையும் பாராட்டி அவனுக்கு அறிவையும், ஞானத்தையும் அருளினாள். மேலும், “இன்று முதல் நீ காளியின் பணியாளனாக, “காளிதாசன்” என்று அறியப்படுவாய். நீ எல்லோராலும் போற்றப் படுவாய். இனி, என் பணி செய்வாயாக” என்றும் கூறினாள். அவர் வீடு திரும்பியதும், மனைவி, “நீ என்ன சாதித்தாய்?” என்று சமஸ்க்ருதத்தில் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியின் மூன்று வார்த்தைகளில் துவங்குமாறு மூன்று கவிதைகள் பாடினார். இப்படியாக, சமஸ்க்ருத இலக்கியத்திற்கு, குமாரசம்பவம், மேகதூதம், ரகுவம்சம், அஜாவிலாபம் ஆகிய நான்கு அரிய காப்பியங்கள் கிட்டின.
[Illustrations by Sree Darshine. H, Sri Sathya Sai Balvikas Student.]
[Source: Sri Sathya Sai Balvikas Guru Handbook Group I.]