கூழாங்கற்கள்(அ) சில்லறைக் காசுகள்
குழுமச் செயற்பாட்டு நோக்கம்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கையிலுள்ள சக்கரம், சங்கு மற்றும் கதை இவை முறையே காலம், சப்தம் மற்றும் சக்தி இவற்றை உணர்த்துவதால், அவற்றை வீணாக்கக்கூடாது என குரூப் 1 குழந்தைகள் அறியும் பொருட்டு.
தேவைப்படும் பொருட்கள்
கூழாங்கற்கள், சில்லறைக் காசுகள், ஒரு தகர டப்பா
- குழந்தைகள் வட்ட வடிவில்; அமர்ந்திருக்கவேண்டும். குரு வட்டத்தின் நடுவில் அமர்ந்திருக்க, குழந்தைகள் குருவிற்கு முதுகைக் காண்பித்து அமர வேண்டும்.
- குழந்தைகள் கண்களை மூடி, அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும்.
- குரு, கூழாங்கற்களை ஒவ்வொன்றாய்த் தகர டப்பாவில் போட வேண்டும்.
- டப்பாவில் போடும் போது அவற்றை எண்ணுமாறு கூற வேண்டும்.
- முதலில் அனைவரும் ஒன்றாக உரக்க எண்ணுவார்கள்.
- அவர்களை, மனதிற்குள்ளேயே எண்ணச் சொல்ல வேண்டும். பிறகு குரு, சில கூழாங்கற்களை டப்பாவிற்கு அருகில் கொண்டு சென்று மெதுவாகப் போடவேண்டும்.
- குழந்தைகளின் கவனமும், ஒருமனக்குவிப்பும் அதிகரித்திருக்கும் சமயத்தில், டப்பாவில் போடும் கூழாங்கற்களின் எண்ணிக்கையையும், போடும் வேகத்தையும் சற்று அதிகரிக்கவேண்டும்.
- குழந்தைகளிடம், அவர்கள், பிறருடன் போட்டி போட்டு செய்ய வேண்டியது இல்லை. தனக்குத்தானே தான் போட்டி என்று கூற வேண்டும்.
சில மாதிரி வினாக்கள்
- இந்தச் செயற்பாடு உங்களுக்கு பிடித்ததா? ஏன்?
- முதலில் ஏன் விதவிதமான விடைகள் வந்தன?
- பேச்சைக் குறைத்து அதிக ஒன்றிப்புடன் கவனித்த காரணம் என்ன? மன ஒருமுகப்படுத்தல் என்பது அவ்வளவு கடினமா?
- அமைதியாக இருத்தல் என்பது மன ஒருமுகப்படுதலுக்கு அவசியமா?
- நாம் எவ்வாறு பல்வேறு வழிகளில் சக்தியையும், நேரத்தையும் வீணாக்குகிறோம்?
- வருங்காலத்தில் நாம் சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க மாட்டோம் என உறுதி கூற முடியுமா?
முடிவில், காலம், சப்தம் மற்றும் சக்தி ஆகியவை கடவுளால் நமக்கு வரமாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் எவ்வாறு பயனுள்ள வழிகளில் செலவழிக்கலாம் என்பது பற்றிக் கூற வேண்டும்.