தேசிய விலங்கு – புலி
- அழகும், பலமும், சுறுசுறுப்பும், அளவிடமுடியாத வலிமையும் கொண்டு விளங்கும் விலங்கான புலி, எல்லோராலும் மதிப்பு மிக்கதாகவும் உயர்வாகவும் கருதப்படுகிறது.
- நம் வாழ்க்கைக் குறிக்கோள்களை அடைய உழைக்கும்போது நாம் புலியைப்போல விழிப்போடு, துரிதமாகச் செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.
கூட்டுச் செயல்பாட்டுகளுக்கான குறிப்பு:
புலிகள் மற்றும் மயில்களின் எண்ணிக்கை, வேகமாகக் குறைவதன் காரணங்களையும், அவற்றைப் பராமரிக்க மேற்கொண்டுள்ள ‘புலிப் பாதுகாப்புத் திட்டம்’ போன்ற முயற்சிகளையும் பற்றி விவாதிக்கவும்.