யுகாதி
யுகாதி என்பது ஆந்திரபிரதேசம், கர்னாடகம் மற்றும் மஹாராஷ்ட்ர மக்களின் புத்தாண்டு தினமாகும். ஆந்திர பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் இது “யுகாதி” என அறியப்படுகையில், மஹாராஷ்டிரத்தில் “குடி பட்வா” என கொண்டாடப்படுகிறது. பொதுவாக மார்ச் மாதம் இது நிகழ்கிறது.
இந்து நாள்காட்டி படி முதல் மாதமான சித்திரையில், சுக்லபட்சத்தின் முதல் நாளான பிரதமையில், வருடத்தின் முதல் ருதுவான வசந்த ருதுவில் கொண்டாடப்படுகிறது.
யுகாதி என்னும் சொல் புதிய யுகம் என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறப்படுகிறது. பகவான் கிருஷ்ணர் தேகத்தை உகுத்த நாள். அதாவது துவாபர யுகம் முடிந்து கலியுகத்தின் ஆரம்ப நாள் என்று புராணங்கள் பகர்கின்றன. பிரம்மா, பிரபஞ்சத்தை படைத்த நாள் இது என்றும் நம்பப்படுகிறது. யுகாதியன்று சிறப்பு பிரசாதமான “யுகாதி பச்சடியை” உண்டு நாளைத்தொடங்குவது சம்பிரதாயமான ஒன்று. இனிப்பு, உவர்ப்பு, கசப்பு துவர்ப்பு,புளிப்பு காரம் ஆகிய அறுசுவையும் கொண்ட பண்டம் இது, அதாவது வாழ்க்கையில் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க வேண்டுமென்பதே இதன் கருத்து.
பகவானின் அருளுரையிலிருந்து சில கருத்துக்கள்:
புதிய சமாச்சாரங்களைக் கொண்டு வர புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கணமும் புதியதே. புத்தாண்டு என்ன கஷ்ட நஷ்டங்களை கொண்டு வரவுள்ளதோ என பலர் அதிசயிக்கின்றனர். நமது நடத்தை மட்டுமே பொறுப்பு. நமது செயல்கள் நல்லவையானால் விளைவுகளும் அவ்வண்ணமே நல்லவையே.. தவறான செயல்கள் தவறான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். நல்லவையும் தீயவையும் கால நேரத்தைப் பொருத்ததே. என மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் எண்ணமே காரணம்.எனவே, அவர்கள் நல்ல எண்ணங்களை மேம்படுத்த நல்ல செயல்களை செய்ய வேண்டும். நல்ல உணர்வுகளை வளர்த்து நன்மக்கள் இணக்கத்தில் இருக்க வேண்டும். காலத்தின் மதிப்பை மக்கள் உணர வேண்டும். கிடைக்கும் பெரும்பாலான நேரத்தை மக்கள் வீணடிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. காலம் எப்போதும் சரியான நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை. வீணான காலம் வீணாக்கிய வாழ்க்கைக்கு ஒப்பானதே. காலத்தின் கடவுள் தன்னிடம் அடைக்கலம் புகுந்தவனை, இறப்பின் இறைவன் காலனை எதிர்த்தும் கூட காப்பாற்றுகிறான். காலம் அதனை துஷ்பிரயோகம் செய்பவர்களை பழி தீர்த்துக்கொள்கிறது. ஒரு நாட்டின் வளம், அதன் மக்கள் நற்செயல் செய்வதில் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தேயுள்ளது
தெய்வீக அருளுரை 1997- ஏப்ரல் 7
இன்று யுகாதி. புத்தாண்டின் தொடக்கம். பண்டைக்காலம் தொட்டே மனிதன் பல யுகாதிகளை கொண்டாடி விட்டான். எனினும் தன் கெட்ட குணங்களை விட்டானில்லை. என்று தன்னுடைய கெட்ட குணங்களை கை விட்டு தன் இதயத்தை அன்பால் நிரப்பி தியாகத்தின் பாதையை தேர்ந்தெடுக்கிறானோ அன்றே உண்மையான யுகாதி ஆகும். புத்தாடைகள் அணிந்து சுவையான உணவுப்பண்டங்கள் அருந்துவதோடு யுகாதி கொண்டாட்டங்களை நிறுத்தி விடாதீர்கள். இன்று புதிய ஷர்ட்டை நீங்கள் அணியலாம், ஆனால் எவ்வளவு காலம் அது புதியதாகவே இருக்கும்? நாளை அது பழையது ஆகி விடும். யாரும் ஒரே செய்தித்தாளை தினமும் வாசிப்பதில்லை. இன்றைய செய்தித்தாள் நாளைய பழைய காகிதம் ஆகி விடுகிறது. நமது வாழ்க்கையும் செய்தித்தாள் போன்றதே. ஒரு தடவை செய்தித்தாள் படித்து முடித்து விட்டால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதனை படிக்க விரும்புவதில்லை. இந்த பிறவி ஒரு செய்தித்தாள் போல உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீங்களு பல்வேறு விதமான இன்பதுன்பங்களாலான அனுபவங்களைக் கடந்து வந்திருப்பீர்கள். போதும் போதும். இன்னுமொரு செய்தித்தாளை அதாவது பிறப்பை கேட்காதீர்கள். நீங்கள் பிரார்த்திக்க வேண்டியது” இறைவா: நீங்கள் இந்த செய்தித்தாளை வழங்கியுள்ளீர்கள். நான் பல்வேறு அனுபவங்கள இவ்வாழ்வில் கடந்து விட்டேன். எனக்கு மேலும் ஒரு பிறவி வேண்டாம்.
இந்த யுகாதி நன்னாளில் ஒரு திடமான சங்கற்பம் எடுங்கள் உங்கள் இதயத்தை சுத்தி செய்வதற்கு. கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும். அதை மீட்க முடியாது. சாலையில் நடந்து செல்லும்போது முன்னிருக்கும் பாதையை பார்க்க வேண்டும். பின்னோக்கி பார்ப்பதில் என்ன இருக்கிறது? அது போலவே, கடந்துபோனவற்றின் மீது கவலையுறுவதில் அர்த்தமில்லை. எதிர்காலம் நிச்சயமில்லை. நாளை வரை நீ உயிரோடிருப்பாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்? எனவே வருங்காலத்தைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.. நிகழ்காலத்தில் வாழ்வாய். அது சாதாரண நிகழ்காலமல்ல. நன் நிகழ்காலம் (present- omni present)அதாவது கடந்த காலத்தின் மற்றும் வருங்காலத்தின் விளைவுகள் உள்ளடங்கியது என்று பொருள். எனவே, நீங்கள் நிகழ்காலத்தை சரிவர பயன்படுத்தினால், உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும் என்பது அறுதியிடப்பட்டது.
தெய்வீக அருளுரை ஏப்ரல் 13. 2002
நாம் நல்ல எண்ணங்களை வளர்த்து, நல்ல செயல்களை செய்தால், நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை எய்துவோம். இன்று புத்தாண்டின் முதல் நாள். இன்றிலிருந்து, அனைத்து பக்தர்களும் தங்கள் புனிதப்பணியை மேற்கொள்ளவேண்டும். கடந்தது கடந்தவையே. எதிர்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டாம். அது நம் கையில் இல்லை. நாளை வரை இருப்போம் என்பதற்கு என்ன உத்திரவாதம்? எஅனவே,இந்த நிகழ்காலம் மிக முக்கியமானது. அதனை நன்கு பயன்படுத்துக. உங்கள் மனசான்றிற்கு எதிராக செல்ல வேண்டாம். அதைத்தான் நான் இங்கிருக்கும் என் மாணவக் குழந்தைகளுக்குக் கூறுகிறேன்” தலைவனை பின்பற்றுக. உன் தலைவன் யார்? உன் மனசாட்சியே உன் தலைவன். ஆகவே வேறு யார் தேவையுமில்லை. அதனையே பின் தொடர்க. அதுவே உன் கடவுள். அதுவே உன் ஆனந்தம். அதுவே உன் செல்வம். அதுவே உன் சாந்தி. ஆனந்தமும் அமைதியும் வெளியிலில்லை.
தெய்வீக அருளுரை மார்ச் 20 1996