உண்மையைப் பேசி மகிழுங்கள்
ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்
நீங்கள் விரும்பினால் பின்னணியில் மென்மையான இசையை இசைக்கலாம்.
முதலில், உங்கள் நாற்காலிகளில் வசதியான விதத்தில் உட்காருங்கள் அல்லது கால்களை மடித்துத் (சம்மணமிட்டு) தரையில் அமரவும்.
முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தவும்.
நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும்.
கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும்.
இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.
இப்போது நீங்கள் பொய் சொன்ன ஒரு சம்பவத்தை நினைத்துப் பாருங்கள்.
எப்படி உணர்ந்தீர்கள்?…
உங்களிடம் யாரோ பொய் சொன்ன சம்பவத்தை நினைத்துப் பாருங்கள்….
எப்படி இருந்தது?…
நீங்கள் உண்மை பேசிய தருணத்தை நினைத்துப் பாருங்கள்….
எப்படி இருந்தது?…
உண்மை பேசியதற்காக முதுகில் தட்டிக் கொள்ளுங்கள்.
மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்….
கலந்துரையாடல்:
- உண்மை சொல்வது எப்படி இருந்தது?
- சுயநலத்துக்காக நீங்கள் எப்போதாவது ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறீர்களா?
- யாராவது உங்களிடம் பொய் சொன்னால், எப்படி உணர்கிறீர்கள்? கோபம் வருகிறதா?
புத்தகக் குறிப்புகள்: 1) மனித விழுமியங்களில் சத்ய சாயி கல்வி, 2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’