அனுதாபம்
ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்
நீங்கள் விரும்பினால் பின்னணியில் மென்மையான இசையை இசைக்கலாம்.
இடம் இருக்குமானால் குழந்தைகளை வட்டமாகப் படுத்துக்கொண்டு மையத்தை நோக்கிக் கால்களை நீட்டச் செய்யவும்
இல்லையெனில், குழந்தைகளிடம் இப்படிக் கூறவும் –
உங்கள் நாற்காலிகளில் வசதியான விதத்தில் உட்காருங்கள் அல்லது கால்களை மடித்துத் (சம்மணமிட்டு) தரையில் அமரவும். முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தவும். நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும். இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.
இசையைக் கவனமாகக் கேட்கவும்.
உடல் நலம் குன்றிய ஒருவரை நினைவுக்குக் கொண்டுவரவும்..
அவரது துன்பத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்க..
அவர்கள் நலமடைய நீ என்ன செய்ய முடியும் என்று சிந்தித்துப் பார்.
பிறருக்கு உதவி மகிழ்விக்கும்போது நீயும் மகிழ்ச்சியடைகிறாய்..
மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்.
[புத்தகக் குறிப்புகள்:
1) மனித விழுமியங்களில் சத்ய சாயி கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’]