சுகாதாரம்
ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்…
பின்னணியில் மென்மையான இசையை இசைக்கவும்.
உங்கள் நாற்காலிகளில் வசதியான விதத்தில் உட்காருங்கள் அல்லது கால்களை மடித்துத் (சம்மணமிட்டு) தரையில் அமரவும். முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தவும். நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும். இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்…
உன் நண்பர்களுடன் நீ கால் பந்து விளையாடுவதாகக் கற்பனை செய்துகொள்..
மைதானம் மண்ணும் புழுதியுமாக இருப்பதால் உனது உடையும் அழுக்காகிறது….
விளையாடி முடித்து வீடு திரும்புகிறாய்….
புழுதி படிந்த காலணியை வெளியிலேயே கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்கிறாய்..
குளியல் அறைக்குச் சென்று, அழுக்குத் துணியைக் களைந்து, நன்றாகக் குளித்துவிட்டு வருகிறாய்…
புத்துணர்ச்சியுடன் சுத்தமாக இருப்பதை உணர்கிறாய்….
அழுக்குத் துணியை எங்கே போட வேண்டும் என்று அம்மாவிடம் கேட்கிறாய்.
குளித்து நீ சுத்தமாக இருப்பதைக் கண்டு உன் தாய் மகிழ்கிறாள்.
(சற்று நேரம் நிறுத்தவும்).
மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்..
கலந்துரையாடல்:
- இப்பயிற்சி செய்யும்போது எப்படி எல்லாம் இருந்தது?
[புத்தகக் குறிப்புகள்: 1) மனித விழுமியங்களில் சத்ய சாயி கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’]