அமைதியை அனுபவித்தல்
ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்
பின்னணியில் மென்மையான இசையை இசைக்கவும்.
உங்கள் நாற்காலிகளில் வசதியான விதத்தில் உட்காருங்கள் அல்லது கால்களை மடித்துத் (சம்மணமிட்டு) தரையில் அமரவும். முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தவும். நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும். இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.
இப்போது இசையைக் கேட்கவும், (சற்று நேரம் நிறுத்தவும்)
நீல வானில் பறந்து திரியும் ஒரு பறவையாக உன்னைக் கற்பனை செய்துகொள்
திறந்த வெளியில் பறக்கும்போது மிக அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.
கீழிருந்து வரும் வண்டி வாகனங்களின் சப்தத்தை உற்றுக் கேள்…
வேறு என்னென்ன சப்தங்களைக் கேட்க முடிகிறது?..
அவற்றை எல்லாம் கேள். (சற்று நேரம் அமைதி)…
இப்போது கீழ் நோக்கிப் பறந்து பூமிக்கு வந்து சேர்.
மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்.
கலந்துரையாடல்:
(அடுத்த முறை இப்பயிற்சி செய்யும்போது குழந்தைகளின் மனக்குவிப்பை அதிகரிக்க)
- ஏன்னென்ன விதமான ஒலிகளைக் கேட்டாய்? அப்போது எப்படி இருந்தது?
[புத்தகக் குறிப்புகள்:
1) மனித விழுமியங்களில் சத்ய சாயி கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’]