ஸீதாஸதீ
கேட்பொலி
வரிகள்
- ஸீதாஸதீ ஸம விஶுத்த ஹ்ருதம்புஜாதா :
- பஹ்வங்கனா: கரக்ருஹீத ஸுபுஷ்பஹாரா:
- ஸதுன்வந்தி திவ்ய நுதிபி:: ஃபணி பூஷணம் த்வாம்
- ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்
விளக்கவுரை
ஸீதாபிராட்டியார் எனும் பதிவிரதைக்கு இணையான தூய்மையுடைய இதயமெனும் தாமரை உடையவர்களான பல பெண்டிர், கையில் மேன்மையான மலர்மாலைகளை எடுத்துக் கொண்டு பாம்பாபரணமுடைய உங்களை தெய்வீகமான ஸ்துதிகளால் துதிக்கிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.
பதவுரை
ஸீதா | ஸீதா பிராட்டியார் |
---|---|
ஸதீ | பதிவிரதை |
ஸம | இணையான |
ஶுத்த | தூய்மையான |
விஶுத்த | மிகவும் தூய்மையான |
ஹ்ருத் | இதயம் |
அம்புஜாதா: | தாமரை உடையவர்கள் |
பஹு | பல |
அங்கனா: | பெண்கள் |
கர | கையில் |
க்ருஹீத | எடுத்துக்கொண்டு |
ஸு | நல்ல |
புஷ்ப | மலர் |
புஷ்பஹாரா | புஷ்ப மாலையுடையவர்களாய் |
ஸ்துன்வந்தி | துதிக்கிறார்கள் |
திவ்ய | தெய்வீகமான |
நுதிபி: | ஸ்துதிகளால் |
ஃபணி | பாம்பு |
பூஷணம் | ஆபரணம் |
ஃபணிபூஷணம் | பாம்பாபரணமுடைய |
த்வாம் | உன்னை |
ஸீதாஸதீ
விளக்கவுரை :
இந்த வரி, ஆன்மீக வாழ்வின் வேரைக் காட்டுகிறது. பக்தர்கள் முதலில் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அடுத்த நிலைக்கு வர வேண்டும். அதாவது இறைவனோடு கலத்தல் என்பதே பக்தனின் அடுத்த நிலை! பஹ்வங்கனா: என்ற வார்த்தை மனிதகுலம் முழுதையும் குறிக்கும். மேலே சொன்ன சாதனைகளால் தம்மைத் தூய்மைப் படுத்திக் கொண்ட பின்பு, அவர் கடவுளின் கருவி ஆகிறார். தர்ம ஸ்தாபனத்தில் இறைவனோடு பங்கு கொள்கிறார். இது, ஜீவனும், சிவனும் ஒன்று என்பதன் குறியீடு. அதாவது, ப்ரக்ருதி, புருஷன், ஆகியவற்றின் சங்கமம். மேலும் ஆத்மா, பரமாத்மாவுடன் இணைவது ஆகும்.
எனது சாதனையின் மூலம். எனது விழிப்புணர்வுக்கு விடியலாகி உண்மை ஒளியாக விளங்குபவரே! நான் தூய்மைப்படுத்திக் கொள்கிறேன். நான் உம் கையில் புல்லாங்குழலாகிறேன். இனிமை, ஒருமை, அமைதி, மகிழ்ச்சி, சாந்தி இவற்றை எனக்கும் என்னைச் சார்ந்தவர்க்கும் கொண்டு வருவேனாக.
இதன் குறியீடு – ஆத்மா – பரமாத்மாவின், அதாவது – ஜீவன் – சிவன் – ஆகியவற்றின் இணைப்பு. இங்கே பக்தன், ஒரு தூய பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறான். அந்தப் பெண் சரணா கதி என்ற மாலையை இறைவனுக்குக் கொடுக்கிறாள் என்பது பொருள். இப்போது நாம் உணர்வது ‘ஆனந்தமய கோசம்’.
சுப்ரபாதத்தின் குறிக்கோள் விழிப்புணர்ச்சி பெறுவது. அதாவது, நம்முள் கிடக்கும் ஒரு சக்தியை எழுப்புவது அச்சக்தியே குண்டலினி சக்தி எனப்பெறும். அந்தச் சக்தி ஷட்சக்ரங்களைத் தாண்டி 1௦௦௦ இதழ்களைக் கொண்ட ஸஹஸ்ர சக்கரத்திற்கு வருகிறது. இந்த எல்லையில்லா சக்தியை, குரு நமக்குள் எழுப்பி விடுகிறார். இந்த சக்தி நமது முதுகுத் தண்டின் கீழ் உறங்கிக் கிடக்கிறது
இந்த குண்டலினி சக்தி பற்றி மிகப் பெரிதாக விளக்காவிட்டாலும் குழந்தைகளுக்கு விளங்கு கிற மாதிரி சொல்ல வேண்டும். அதாவது இந்த சக்தி எழுப்பப் பெற்றவர் புத்தி சாலியாகவும், இதய வலிமை பெற்றவராகவும், குணசாலியாகவும் இருப்பார். இவர்கள்தாம் காம, க்ரோத, லோப, மோஹ மத மாத்ஸர்யம் என்ற பகைவர்களை வென்றவர்களாக விளங்குகிறார்கள்.
பாபா சொல்லுகிறார் “இசை, பாட்டு, தபேலா, ஸந்தூர், சிதார், என்ற இக் கருவிகளைக் கையாளுகிறவர்கள் மிகவும் சிறந்து விளங்குவதற்கு இவர்கள் தம்முடைய ஆற்றலைக் குவித்து கலையில் ஈடுபடுவதே காரணமாகும். இவர்கள் இந்த சக்தியை (குண்டலினி) எழுப்பியவர் என்று கூறலாம்” என்பார்.
இவ்விதமாக உலகியலில் அல்லது ஆன்மீகத்தில் எவரெல்லாம் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் இவ்வாற்றலைப் பெற்றவர்களே! இந்த சக்தியைப் பெறாதவர்களெல்லாம் வாழ்க்கையின் கீழ் நிலையில் விழிப்புப் பெறாதவர்கள். இப்படிப்பட்டவர்களெல்லாம், உண்பது, பருகுவது, அனுபவிப்பது என்பதோடு நின்று, மிருக குணங்களோடு வாழ்கிறார்கள். சமுதாயத்துக்கும் தேசத்துக்கும் தேவையான நற்செயல்களைச் செய்வதில் அரிய சக்தியையும் ஆர்வத்தையும் காட்டச் செய்வது இறைவனின் சக்தி. ஆகவே குழந்தைகளின் சக்தி – சிறந்த குறிக்கோள், நற்குணம் ஆகியவற்றை நோக்கித் திருப்பப்பட வேண்டும். அன்பு, அமைதி இவற்றைப் பரப்பும் கருவியாக நாம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்முள் உள்ளுணர்வை எழுப்பி, விழிப்பு நிலையில் நம் நாட்டு கடைமைகளைச் செய்ய வேண்டும். அப்போது தேவைக்காக அலைவது நின்று, ஒரு வீரனைப் போல புகழோடு திரும்பலாம்.