ஶ்ருத்வா தவாத்புத
கேட்பொலி
வரிகள்
- ஶ்ருத்வா தவாத்புத சரித்ரமகண்ட கீர்த்திம்
- வ்யாப்தாம் திகந்தர விஶால தராத லேஸ்மின்
- ஜிக்ஞாஸு லோக உபதிஷ்டதி சாஶ்ரமேஸ்மின்
- ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்.
விளக்கவுரை
இந்தப் பரந்த உலகின் எல்லாதிசைகளிலும் பரவியுள்ள தங்களுடைய அற்புதமான வாழ்வையும் அளவற்ற புகழையும் கேட்டு இந்த ஆஸ்ரமத்தில் (பிரஸாந்தி நிலையத்தில்) ஞான நாட்டம் கொண்ட மக்கள் நெருங்கி நிற்கிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.
பதவுரை
ஶ்ருத்வா | கேட்டுவிட்டு |
---|---|
தவ | உன்னுடைய |
அத்புத | வாழ்வை (நடத்தைகள்) |
அகண்ட | இடையீடற்ற. எல்லையற்ற |
கீர்த்திம் | புகழை |
வ்யாப்தாம் | பரவியுள்ள |
திகந்தர | பல திக்குகளிலிருந்து |
அந்தர | நடுவில், இடையில் |
விஶால | அகன்ற, பரந்த |
தராதலே | பூலோகத்தில் |
தரா | தரை |
தலம் | இடம் |
அஸ்மின் | இந்த |
ஜிக்ஞாஸு | ஞான நாட்டம் கொண்ட |
லோக | மக்கள் |
திஷ்டதி | நிற்கிறார்கள் |
உப | பக்கத்தில் |
உபதிஷ்டதி | பக்கத்தில் நெருங்கி நிற்கிறார்கள் |
ஆஶ்ரமே | ஆஸ்ரமத்தில் |
அஸ்மின் | இந்த |
ஸ்ருத்வாதவாத்புத
விளக்கவுரை :
பகவான் பாபாவின் வாழ்க்கை முழுவதும் அற்புதம் நிறைந்தது. இறை உண்மை, உலக உண்மை, இவற்றைத் தெரிந்து ஆன்மீக வாழ்க்கையைத் தேடுவோர், உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்து பகவானின் தெய்வீகக் காட்சியைப் பெறுகிறார்கள்.
தெய்வீகம், ஒருவரை ஏன் இழுக்கிறது? பகவானின் புண்ணிய சரிதமும் தம் பக்தர்கள் பெற்ற நேரடி அனுபவமும், ஸாதனையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளச் செய்கின்றன என்பதை இந்த வரிகள் நினைவுபடுத்துகின்றன.
“என் உயிருக்கு விடியலாக இருந்து, ‘ உண்மை ‘ என்ற அழியா ஒளியை வீசி, எனது உள்ளுணர்வைப் பெருக்கி, உமது புகழை என் நினைவில் நிறுத்தி, எந்நாளும் எனக்கு ஊக்கம் அளித்து, என்னை உமது உடைமையாக ஆக்கிக் கொள்ளும்.”
நம்மை நாம் மாற்றிக் கொள்ளவும், திருத்தி அமைத்துக் கொள்ளவும், புதுமைப் படுத்திக் கொள்ளவும் இந்த தெய்வீகம் நம்மை இழுக்கிறது. இந்த அவதாரத்தின் காட்சியில் ஒவ்வொரு நாளும் மக்கள் ஆறுதல் பெறுகிறார்கள். நம் புத்தியில் தெளிவு ஏற்படுகிறது. அவரின் புகழ் மிகு லீலைகளைக் கேட்பதால், நம்முடைய எண்ணங்கள் உயர்கின்றன. நற்காரியங்கள் செய்யவும், அனைவரையும் நேசிக்கவும் நமக்கு ஊக்கம் அளிப்பதால் மேலும் மேலும் நாம் கேட்க விரும்புகிறோம். பின்பு நாம் அவரின் கருவியாக மாறி அவரின் விருப்பப்படிப் பணி செய்கிறோம். அவரது அருள் பெறக் காத்திருக்கிறோம். நாம் தவம் செய்ய முற்படுவதால் நம் வாழ்க்கைத் தெளிவாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆகிறது. தெய்வீக ஒளி பெறுகிறவரை நாம் தியானத்தில் ஈடுபட்டு நம் மனம் உறுதிப்படுகிறது.
நாம் புட்டபர்த்தி சென்று பார்த்தால், எல்லா தேசத்திலிருந்தும் வந்த அயல் நாட்டவரைக் காணலாம். அவர்களில் முஸ்லீம், கிருஸ்துவர், புத்த மதத்தினர், சௌராஷ்டிர மதத்தினர் ஆகி யோரையும் காணலாம். இவர்கள் அனைவரும் ஸாயி லீலைகளைக் கேள்விப் பட்டவர்கள். மற்றும் ஸாயியின் அருளாசியையும், புத்துணர்வையும், ஸ்பரிஸத்தையும் பெற்றவர்கள். குரு வின் அருளால், தம்மை மாற்றமடையச் செய்கிற ஆன்மீக சக்தி உள்ள ‘ பாரதத்திற்கு ‘ அவர்கள் வருகிறார்கள். இனம் – சாதி – என்ற வேறுபாடுகள் இல்லாமல் உண்மையைத் தேடுகிறவருக்குக் குரு வழிகாட்டியாக இருந்து யாவரையும் ஈர்க்கிறார்.
இந்த வரிகள் ஆனந்தமய கோசமான ‘ உயிர் அனுபவிக்கின்ற நல்லின்பத்தைக் காட்டு கிறது. நம் மனத்துக்கு அருள் கிடைக்கின்றது. நம் பகவானின் நற்கதைகளைக் கேட்பதில் நமக்குப் பெரு விருப்பம் உண்டு. நம் உணர்வுகள் மேலோங்கி, நல்மனிதராகிறோம். நமது இறைவன் (ஸ்வாமி) ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உறைவதாக உணர்கிறோம்.