உத்திஷ்டோத்திஷ்ட
கேட்பொலி
வரிகள்
- உத்திஷ்டோத்திஷ்ட பர்த்தீஶ உத்திஷ்ட ஜகதீபதே
- உத்திஷ்ட கருணா பூர்ணா லோக மங்கள ஸித்தயே
விளக்கவுரை
புட்டபர்த்திநாதனே! உலகநாயகனே! கருணை நிறைந்தவரே! உலக மங்களத்தை உண்டாக்குவதன் பொருட்டு பள்ளி எழுந்தருள்வீராக
பதவுரை
உத்திஷ்ட | பள்ளி எழுந்தருள்வீராக |
---|---|
ஜகத் | உலகம் |
ஜகத்பதே- ஜகதீபதே | உலகநாயகனே |
கருணா | கருணை |
கருணா பூர்ணா | கருணை நிறைந்தவரே |
ஸித்தயே | உண்டாக்குவதன் பொருட்டு |
விளக்கம்
உலக நாயகனுக்கு உலகைக் காப்பாற்றும் கடமையை உதறித்தள்ள முடியாது என்று பொருள் தோன்றுவது போலும் ஜகதீபதே என்றார். பள்ளியெழுந்தருள்வாய், பள்ளியெழுந்தருள்வாய் என நான்கு முறை பாடுதல் ஸத்யத்தைக் காக்க, தர்மத்தைக் காக்க, சாந்தியைக் காக்க பிரேமையைக் காக்க எழுந்தருள்வாய் என்பது போல் தோன்றி நிற்கிறது.
அண்ட நாயகனானாலும், அளவற்ற அன்பு கொண்டவன். ஆட்டிப்படைப்பவனாலும், உயிர்கள் பால் இரக்கம் கொண்டவன் என்ற உண்மைகளை உணர்த்த கருணாபூர்ண என்கிறார். கர்மத்தால் அவதிப்படும் உயிர்களைக் கண்டு கலங்கிக் கருணை கொண்டாலும், அனைவரின் அவதியையும் நீக்கும் ஆற்றல் எங்களுக்கில்லை. கருணையும், ஆற்றலும் பெற்ற நீ உலக மங்களத்தை உண்டாக்குவதன் பொருட்டு எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாய் என்கிறார் கவி.
த்திஷ்ட + உத்திஷ்ட
என் ஆத்மாவாக இருப்பவரே எழுவீர். என் உயர் கடமைகளை ஏற்பீர். புற்றுகள் நிறைந்த பாம்புகள் வசிக்கும் புட்டபர்த்தி என்ற சாதாரண இடத்தை வளமும் அழகியதுமாக ஆக்கி அமைதியும், முன்னேற்றமும் உடைய ப்ரசாந்தி நிலையமாகச் செய்தவரே, எனது மோஹம், லோபம், மதம், மாத்சர்யம் காம்ம், க்ரோதம் என்ற நாகன்களை அடக்கி என் மேல் கருணையைப் பொழிந்து மங்களகரமாக ஆக்கி என்னை சார்ந்தவர்களுக்கு மங்களத்தை பொழிவீராக.
ஜகத்பதே – ஜ = ஜனனம் கதி = இறப்பு பதே + கடவுள் நம்முடைய ஆத்மாவின் பிறப்பு இறப்பிற்கு பதியாக இருப்பவர்.
சத்குரு நம்மை எழுப்பியதும் அறியாமை இருள் நீங்கி மங்களம் என்ற விடியல் தொடங்கியது. சத்குகு நம்மை எழுப்பி தரிசனம்,ஸ்பர்சம்,ஸம்பாஷணை என்று பலகாரியங்களை நடத்துகிறார் மற்றும் நம்முள் பொதிந்துள்ள தெய்வீக உணர்ச்சியை தனது அருளால் எழுப்புகிறார் சுப்ரபாதத் தின் உட்பொருள் தெரிந்து தியானத்தோடு ஒவ்வொரு நாள் காலையிலும் பாடும்போது நாம் தெய்வீகக் குறிக்கோளை அடைவது உறுதி.
சுப்ரபாதத்தில் எழுப்புவது என்பது ஒரு ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டது, தீரஜன் என்ற அரசன் தனது அரசு உரிமையால் எவ்வளவு பெரிய கருவூலத்தை வைத்திருந்தான் என்பதை குருசன் எடுத்துக்காட்டினார் என்பது அந்த கதையில் வரும். இங்கே குரு என்பவர் இறைவன் நாமெல்லாம் இறைவனின் குழந்தைகள். ஏசு கிறிஸ்து “ இறைவனின் பேர்ரசு உங்களிடம் உள்ளது என்றார்.
நம்மிடமிருந்து தீனம் அறியாமை இவற்றை விரட்ட்த்தேவையான எல்லா சக்திகளும் குணங்களும் உண்மையில் நம்மிடம் உண்டு. குருவினுடைய அன்பும்,அருளும் நமக்கு நல்வழிகாட்டியாக இருக்கும். குரு(பாபா) சொல்கிறார்” நான் இறைவன். நீ கூட இறைவன் தான் என்று தெரிந்து கொள். நீ ஒரு அடி எடுத்து என் அருகில் வந்தால் நான் 100 அடி வைத்து உன்னிடம் வருவேன். என்கிறார்
நமக்கு 6 பகைவர்கள் உண்டு. ஆசை கோபம்,பேராசை,பற்று பெருமை,பொறாமை என்ற பகைவர்களோடு நாம் போராட வேண்டும் நாம் மேலும் ந்ல்லெண்ணம் கொண்டு நம் மனத் தின் ஆழம் வரை சென்று சாதனையை பெருக்க வேண்டும் சாதனை மேலும் ஆழப்பட வேண்டும் சமுதாய நன்மைக்காகப் பற்பல சேவைகள் செய்ய வேண்டும் இறைவனின் படைப்பில் எல்லோரும் ஒன்றுதான் என்ற உணர்வோடு எளியோர்,தாழந்தோர்,பிணியாளர் என்ற இவரெல்லாம் கூட நம்மை ஒத்தவரே என்று நினைக்க வேண்டும்.
இந்த நாள் பொழுது புலர்ந்தது.அறிவு என்ற சூரியன் அறியாமை என்ற இருளி லிருந்து. எழுப்பி விழிப்புறச்செய்கிறது. இறைவன் என்ற சத்குரு(சத்யசாயி பாபா) நம் வாழ்வின் வழிகாட்டியாக இருக்கிறார், நம் மனத்தின் தீமைகள் கெட்ட குணங்கள் அதாவது காம,குரோத,லோப,மோஹ மத மாத்சர்யம் என்ற இத்தீமைகளை விரட்டி நற்குணங்களான உண்மை ஒழுக்கம் அமைதி, அன்பு இவற்றை எங்களுள் நிறைக்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் விடியலில் சுறுசுறுப்பு அடைந்து பகலொளியைத் தாங்காமல் விரைகின்றன.
நமது பத்து அறிவும் நமது அலைபாயும் மனத்தில் செலுத்தப்படாமல் நல்லறிவாக நடத்தப்படும்.
இப்போது நாம் நமது ஆத்மாவை நோக்கிய உண்முகப்பயணத்தை அன்னமய கோசத்திலிருந்து தொடங்கியுள்ளோம்