விஞ்ஞானமும் மனிதத்தன்மையும் (இனமும்)
“டேவியுடைய பாதுகாப்பான விளக்கு” என்று போற்றப்பெறும் விளக்கை புதிதாகக் கண்டுபிடித்தவர் சர். ஹம்ப்ரிடேவி என்பவராவார். அவர் அந்த விளக்கைக் கண்டுபிடிக்கும் முன்பு, நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் பலபல தீ விபத்துகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். சுரங்கங்களில் ஒரு வித வாயு உற்பத்தியாகிறது. சாதாரண விளக்குகள் அங்கு இருந்தால் அந்த நச்சுகாற்று உடனே தீப்பற்றிக்கொண்டு பெரும் விபத்தை உண்டாக்கி விடுகிறது.
சர் ஹம்ப்ரி மிகவும் பாடுபட்டு இரவு பகலாக சிந்தித்து சுரங்கங்களில் உண்டாகும் காற்றினால் தீப்பற்றாத வகையில் ஒரு விளக்கை உருவாக் கினார் அது ஒரு புதிய கண்டுபிடிப்பாகவும். சுரங்கத்தொழிலாளிகளுக்கு ஒரு வரப்ரசாதமாகவும் அமைந்து இருந்தது.
தம்முடைய புதிய கண்டுபிடிப்பை, ஹம்ப்ரி விரும்பியிருந்தால் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து, நிறைய பொருள் சேர்த்திருக்கலாம். ஆனால் ஹம்ப்ரி அங்ஙனம் செய்ய மறுத்து விட்டார். அவர்தம் புதிய கண்டுபிடிப்பை காசு பணமின்றி மக்களுக்கு தானம் செய்துவிட்டார்.
ஒருமுறை அவரிடம் ஒரு நண்பன், “ உன் தனி முயற்சியினால் கண்டுபிடித்ததை வைத்து நீ நிறைய செல்வம் சேர்த்து விடலாமே! ஆழ சிந்தித்துப் பார்.” என்றான். “வேண்டாம் என் நண்பனே! நான் அதுபோன்று கனவில்கூட நினைத்துப் பார்த்தது இல்லை. என் ஒரே குறிக் கோள் மனிதனுக்கு சேவை செய்வதே! பெருஞ்செல்வம் ஒரு மனிதனை புகழ் வாய்ந்தவனாக்க முடியாது, அவனுக்கு நிறைந்த மகிழ்ச்சியையும் அது தராது. என்னிடம் உள்ள பொருளினாலேயே நான் மிகவும் மன நிறைவோடு இருக்கிறேன் என்று நண்பனுக்கு விடையளித்தார் சர் ஹம்ப்ரிடேவி.
சர் ஹம்ப்ரிடேவி சிறந்த விஞ்ஞானியாகவும் கொடைத் தன்மையாளராகவும் அழியா புகழ் பெற்றார்.
கேள்விகள்:
- ஹம்ப்ரி புதிதாக என்ன கண்டுபிடித்தார்?
- அது ஒரு வரப்ப்ரசாதமாக ஏன் கருதப்பட்டது?
- தோழன் அவருக்குக்கூறிய அறிவுரை என்ன?
- டேவி அதற்குத் தந்த விடை என்ன?