வாய்மை கடவுளின் அருளைப் பெற்றுத் தரும்
இந்த காலத்தில் செயலைவிட பேச்சு மிகுதியாகி விட்டிருக்கிறது. ஆனால் யாரும் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் எல்லாவற்றையும் விழிப்பாக கவனித்து வருகிறார். நடப்பதை யெல்லாம் அறிந்தவரும் அவரே.
ஒருமுறை ஒரு சிவராத்திரி நன்னாளில் பரமேச்வரரும் பார்வதியும் வாரணாசியின் மேல் ஆகாயத்தில் உலவிச் சென்றனர் இலட்சக்கணக்கில் மக்கள் ஆற்று ஓரத்தில் அந்த புனித நகரின் சந்துகளிலும் கூட்டம் கூட்டமாக நிறைந்து சென்றனர். இறைவன் விச்வேச்வரரது கோவிலைச் சுற்றிலும் பெண்களும் ஆண்களுமாக பக்தர் கூட்டம் சிவனுடைய புகழைப் பண்ணிசைத்துப் பாடியபடி நிறைந்திருந்தனர்.
அப்போது பார்வதி சிவனைப்பார்த்து “இலட்சக்கணக்கில் குவிந்து இருக்கும் இந்த பக்தர்களைப் பாருங்கள். இவர்கள் அனைவரும் கட்டாயம் சுவர்க்கத்துக்குத்தான் செல்வார்கள். ஏனெனில் அவ்வளவு ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் இவர்கள். ஆனால் இவ்வளவு பேருக்கும் சுவர்க்கத்தில் தங்க இடம் போதுமா என்பது தான் இப்போது என் ஐயம்” என்று கூறினாள்.
அவளது மேதையைக் கண்டு சிவன் வாய்விட்டுச் சிரித்தார். பிறகு “சிவராத்திரி நாளில் வாரணாசிக்கு வருவோர் எல்லோருமே சுவர்க்கம் புகுந்தவர்களானால் வாரணாசியே ஒரு சுவர்க்கமாகி விடுமே. இங்கு குழுமியிருப்பவர் எல்லோருமே பலவித ஆசைகளை மனதில் நிரப்பிவைத்திருப்பவர்கள். தாம் சுவர்க்கம் ஏகுவதைப்பற்றி நினைக்கக்கூட மாட்டாதவர்கள்” என்று கூறினார்
மேலும் “ஒரு திருடன் தான் திருடிய பணத்தில் பயணச்சீட்டு வாங்கி வாரணாசி வந்தவன் சுவர்க்கம் புக முடியுமா? தூய்மை,அன்பு, வாய்மை இவை தான் பேரின்பத்தின் வாயிற் கதவுகளைத் திறக்க வல்லவை. இவர்களில் மிகச் சிலரே சுவர்க்கத்தை எட்ட முடியும் என்பதை உனக்குத் தக்க சான்றோடு விளக்கிக் காட்டுகிறேன் என்னுடன் வா, நாம் இந்த நகரத்திற்குள் வயதாகி நலிந்த பிச்சைக்காரர் போல நுழைவோம் .” என்று கூறி வாரணாசியினுள் பார்வதியுடன் நுழைந்தார் பரமசிவன்.
கோவிலுக்குச் செல்லும் ஒரு சந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் புனிதமான கங்கை நீரை கைகளில் ஏந்திச் சென்றனர். அந்த புனித நீரை வழிபாட்டுச் சடங்குடன் விச்வேச்வரர் கோவிலில் உள்ள இலிங்கத்தின்மீது பொழிய எடுத்துச்சென்றனர். அவர்கள் கண்களில் படும்படியான இடத்தில் ஒரு வயோதிகன் தன் வயதான மனைவியின் மடிமீது தலைவைத்துப் படுத்துக் கொண்டு தாகத்தினால் வரளும் தன் நாக்கைப் புரட்டிப் புரட்டி விட்டுக் கொண்டிருந் தான். அவனது மனைவியோ, நீர் முகந்து செல்பவர்களிடம், இறக்கும் நிலையிலிருக்கும் தன் கணவனுக்காக, பரிதாபமாக மன்றாடிக் கேட்டாள்,” தண்ணீர் தாருங்கள்! எனக்காக இவரைக் காப்பாற்ற இவருக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுங்கள்” என்று இறைஞ்சி வேண்டினாள் . பக்தர்கள் என்று எவரும் விரைந்து அவளது துன்பத்தைத் தீர்க்க முன் வரவில்லை, தங்களைப் போக விடாமல் கீச்சுக்குரலில் அவள் கெஞ்சுவதைக் கண்டு பலர் அவளை வைதனர். சிலர் வழியை விட்டு விலகிச் செல்லும்படி கோபமாக கட்டளையிட்டனர். மிகச்சிலர் பூசையை முடித்துக் கொண்டு திரும்பும் போது அவனுக்கு பருக நீர் தருவதாகச் சொல்லினர். பெரும் பான்மையினர் இங்ஙனம் பிச்சை எடுப்பது பெருங்குற்றமாக கருதப்பட வேண்டுமென்றும் காவல் துறையினர் இத்தகைய தொல்லைகளை நீக்கி பாதையைச் சீராக்க வேண்டுமென்றும் கூச்சலிட்டனர். ஓரிருவர் அந்தக் கிழவி எல்லோருடைய கவனத்தையும் கவர ஒரு நாடகம் ஆடுகிறாள் என்று எள்ளி நகையாடினர் யாருமற்ற அனாதைகளாகக் கிடந்த அவர்களுக்காக எவர் மனமும் சிறிது கூட இளகவேயில்லை.
கடின மனம் பெற்றிருந்த அந்த திருடன், நெகிழ்ந்துபோய், ”அம்மா! நான் இதுவரை ஒரு நற்செயல் கூட ஆற்றியதில்லை.ஒருவரது துன்பத்தைக் கண்டு என் மனம் இளகுவது இது தான் முதல் தடவையாகும். அதோ இருக்கும் வாரணாசி கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் விச்வேச்வரனே என் செயலுக்குச் சாட்சி”. என்று கூறியவாறு அந்த சூழ்நிலையில், விலை மதிப்பற்றிருந்த அந்த நீரை கிழவரது வாயில் விட்டான். உடனே இறைவன் தமது சுய உருவில் அவனுக்குக் காட்சி தந்தார் பார்வதியும் அங்ஙனமே அன்னை பராசக்தியாக உருப்பெற்று விளங்கினாள். வரண்ட இதயத்தோடு பலவகையான மக்கள் இலட்சக் கணக்கில் நெருக்கமாகத் திரண்டு வந்திருந்த வாரணாசியில், அவன் ஒருவன்தான் சுவர்க்கத்தில் புக அருகதை உள்ளவன் என்று அவனை வாழ்த்தினர் இருவரும்.
வாய்மையும் அன்பும் அவனுக்குக் கடவுளின் கருணையைப் பெற்றுத் தந்தன.
கேள்விகள்:
- சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற உரையாடலை விவரித்துக்கூறு.
- அருள்மிகு எந்தையும் அன்புமிகு அம்மையும் கூடிப் பேசியதிட்டம் என்ன?
- அவர்களுக்கு உதவ முன்வந்தது யார்?
- அவன் எங்ஙனம் செயலாற்றினான்?