இந்தியக் கலாசாரமும் பழக்க வழக்கங்களும்:
மக்களிடையே பற்பல வெவ்வேறான சமயச்சடங்குகளும், பழக்கங்களும், பரவியிருக்கலாம். ஆனால் நம் நாட்டுச் சமயங்களனைத்தும், கடவுள் ஒருவரே என்ற உண்மையை ஏகமனதாகப் பிரகடனம் செய்கின்றன என்பதை மறந்து விடலாகாது. இந்துக் கோயிலாயினும் சரி, முஸ்லிம் மசூதியாயினும் சரி, நாம் காண்பது கடவுளிடம் மக்கள் கொண்டுள்ள பக்தியையும் நம்பிக்கையையும் அது பிரதிபலிக்கிறது என்பதுதான். கலைப்பாங்கும் மரபும் கிறிஸ்தவத்தை, இஸ்லாத்தை, ஹிந்து மதத்தினைச் சார்ந்திருக்கலாம்; ஆயினும் எந்த நுண் கலைவண்ணமும் கூறுவது ஒன்றே: ‘கடவுள் ஒருவரே ‘ என்பதாம் அது.
சமயத் தொடர்புள்ள பழக்கங்களும் சடங்குகளும்:
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இவர்களிடையே குழந்தைக்குப் பெயரிடுதல் ஒரு முக்கியமான சம்பவமாகும். சில இடங்களில் இந்துக்கள் குழந்தைக்கு மூன்று பெயர்களைச் சூட்டுகிறார்கள். ஒருபெயர், குழந்தை பிறந்த நட்சத்திரத்தையோ, அதன் குலப்பெயரையோ குறிக்கும். இரண்டாவது பெயர் குடும்பத்திலுள்ள பெரியவர்களையோ அல்லது தந்தையினையோ குறிக்கும். மூன்றாவது பெயர் குழந்தைக்கென்று வைக்கப்பட்ட பெயராகும். இந்தியக் கிறிஸ்தவர்கள், மற்றைய கிறிஸ்தவர்களைப் போல, பாதிரியர் ஞானஸ்நானம் செய்வித்து பெயரிட்டு அழைக்க குழந்தைகளை சர்ச்சுக்கு கொண்டு செல்கிறார்கள்.
இந்தியாவில் சிற்சில பகுதிகளில், சிறுவர்களை, மத வழிபாட்டில் ஈடுபடுத்துவதற்காக சடங்குகள் உண்டு. முதியவர்களோ, புரோகிதர்களோ, பாதிரிமார்களோ, வாழ்க்கையில் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி, தத்தம், கிறிஸ்தவ, முஸ்லீம், ஹிந்துசமய மரபின்படி கூறப்பட்டுள்ள அறிவுரைகளை சடங்குகள் மூலமாக சிறுவர்களுக்கு வலியுறுத்துகின்றனர்.
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பாரசீகர்கள் இவர்களெல்லாரும், குழந்தைகள் பிறப்பினையோ, அவர்களுக்குப் பெயரிடுவதையோ, அவர்களைத் தத்தம் சமய வழிபாடுகளில் ஈடுபடுத்துவதையோ பல்வேறு விதங்களில் கொண்டாடுகிறார்கள். இந்தச் சடங்குகள் வெளிநோக்கில் வேறானவையாக இருக்கலாம். இவையெல்லாவற்றின் சாரம் ஒன்றேயாகும். பாபா கூறியவாறு,”நகைகள் வெவ்வேறாகத் தோன்றலாம்; ஆனால் அனைத்தும் தங்கத்தால் ஆக்கப்பட்டவையேயாகும்”.
இந்தியர்களுக்கு, குழந்தைகளிடம் மிக்க ஈடுபாடு உண்டு. அவர்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களுக்கிடையில் மிக மகிழ்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் தம் குழந்தைகளைக் கொஞ்சுவதையும், சீராட்டுவதையும் போல, மேனாட்டினர் செய்வதில்லை. இவ்வாறு பெரியவர்கள், குறிப்பாக பெற்றோர்கள், மகிழ்வினை அவர்களது குழந்தைகளிடம் வெளிப்படுத்துவது, உள்ளத் தொடர்பினையும், ஆன்மீகத் தொடர்பினையும் வலுப்படுத்துகிறது.

எச்சமயத்தினராயினும் சரி, மணமகளை வண்ண வண்ண உடைகளில் அலங்கரித்து மணமேடைக்கு இட்டுச் செல்கின்றனர். வெளிநோக்கில் திருமணத்தில் கொண்டாட்டம், கேளிக்கை, விருந்துபசாரம் இவை முக்கிய இடம் பெறுகின்றன. அதேசமயத்தில் திருமணச் சடங்கு ஆழ்ந்த கருத்தும், உணர்வும் நிரம்பியது. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் முன்னிலையில், எத்தகைய துன்பம் நேரினும் நாங்கள் மனம் ஒருமித்து அதனை எதிர்கொள்வோம் என்று மணமகனும் மணமகளும் உறுதி கூறும்வகையில், திருமணச் சடங்கு அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தில் திருமணம் மிகப் புனிதமானது. கணவனும், மனைவியும் வாழ்க்கை முழுவதும் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே திருமணத்தின் இலட்சியம், குடும்பத்தை நடத்தும் நட்புறவுடன் கூட, கணவனும் மனைவியும் ஆன்மீகப் பாதையில் செல்லும் சக பிரயாணிகள், தோழர்கள், ஆன்மீக முன்னேற்றத்துக்கு இருவரும் சேர்ந்து முயற்சி செய்யவேண்டும்.

உட்பொருள் புரிந்து கொள்ளாது, மூட நம்பிக்கையுடன் பின்பற்றுவதற்காக சடங்குகள் அமைக்கப்படவில்லை. அவற்றிற்கென்று உட்பொருளும் நோக்கமும் உண்டு. அவை வாழ்க்கையின் துன்பத்தைக் குறைத்து, மகிழ்ச்சியை அதிகப்படுத்த ஏற்பட்டவை. கடவுளுடன் மனதை இணைத்து, நற்பழக்கங்கள் மூலம், தார்மீக வழியில் நம்மை நடத்திச் செல்வதற்காக அவை அமைக்கப்பட்டவை. உட்பொருள் புரிந்த பின், இதெல்லாம் எளிதாகும்.