உடைப் பழக்கங்கள்
உடைப்பழக்கங்கள் ஓரளவுக்கு சீதோஷ்ண நிலையையும், ஓரளவுக்கு சமூக – மதக் கண்ணோட்டங்களையும் சார்ந்ததவை. இந்தியாவில், ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கென்ற பாணி உண்டு. அந்தப் பகுதி ஒன்றினுள்ளும், ஜாதி, தொழில் முறை வேற்றுமைகள் இவற்றைச் சார்ந்து, உடைப் பழக்கங்கள் அமைகின்றன. அந்நியராட்சியும் உடைப்பழக்கத்தை ஓரளவு பாதித்துள்ளது. நாடெங்கும் பெண்களுக்குப் புடைவையும் ஆண்களுக்கு வேட்டியும், ஜிப்பாவும் பொதுவான உடைப்பழக்கங்கள், பஞ்சாபிலுள்ள மக்கள் ஸல்வார் அல்லது தொள தொளப் பானகால்சராய்(Baggy Trousers) பொதுவாக அணிகிறார்கள். முகம் மதிய, ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகும் வங்காளத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் வேட்டியே ஆண்களின் முன்னுரிமை பெற்ற உடையாகும். சீக்கியர்கள், தொள தொள சட்டைகள். கால்சராய்கள், தலைப்பாகைகள் இவற்றை அணிகிறார்கள். அவர்கள் அணியும் தலைப்பாகை மதச் சின்னமாகும். தலையணி இடத்துக்கிடம் வேறுபடுகிறது. பற்பல இடங்களில், தலையணி யாரும் அணிவதில்லை. நாட்டின் சில இடங்களில், தமது அந்தஸ்தின் சின்னமாக சிலர் ‘ஹாட்'(hat) அணிகிறார்கள். ‘ஷர்வாணி ‘யும் ‘ஜோத்புரி’யும் அரசு அலுவலகத்தில் உயர்ந்த அதிகாரிகள் அணியும் உடைகள்.
நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் அணியும் உடைகள், பற்பல வகையின. பற்பல நிறத்தன; இவற்றின் அழகினையும், பயனையும் உய்த்துணரப் பழக வேண்டும், மரபின்படி அணியும் உடைகள் அனைத்தும் சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு அமைந்துள்ளன. இது புரியாமல், மேனாட்டு நாகரிகத்தில் மூழ்கியிருக்கும் இக்கால யுவ, யுவதிகள், வயதானவர் அணியும் மரபு வழியான உடைகளை எள்ளி நகையாடுகிறார்கள்.
இத்தகைய அலட்சிய பாவம் பண்பாடற்ற அலட்சியமான செயலாகும். உடலுக்கு அணியாக அமைந்து, வெட்பதட்பத்திலிருந்து உடலைக் காப்பதே உடையின் பயன். கண்ணைக் கவரும் மேனாட்டுப் பாணி உடைகளை விட, பயனுள்ள அழுக்கற்ற உடைகளே சாலச் சிறந்தவை. தவிர, ஒருவர் எவ்வாறு இருக்கிறார். அவரது உட்பண்பு என்ன, என்பதே அவர் எவ்வாறு உடுத்துகிறார் என்பதை விட முக்கியமானது. ஹிந்து ஆசார்யர்கள் கூறுவது போல், நற்பண்பே தலைசிறந்த உடையாகும்.