மொழிகள்
பல்வேறு மொழிகள் பேசப்படும் நாடு நம் நாடு. தனக்கென்று தனி வரலாறு படைத்துள்ள 14 மொழிகளை அதிகாரபூர்வமாக இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சமஸ்கிருதம், கிரேக்க, லத்தீன் மொழிகளை விடப் பழமையானது; அதுவே பல இந்திய மொழிகளுக்குத் தாய்மொழியாகும். மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. வங்காளி, ஹிந்தி, குஜராத்தி, மராத்தி மொழிகள், சமஸ்கிருதத்திலிருந்து உருவானவை. இவை ஆரிய மொழிகள் எனப்படும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகள் தெற்கே பேசப்படுகின்றன. அவற்றிற்குத் திராவிட மொழிகள் என்று பெயர். தமிழறிஞர், தமிழ், சம்ஸ்கிருதம் போன்ற பழமை வாய்ந்தது என்று கூறுகின்றனர். திராவிட மொழிக்கு மூலம் சம்ஸ்கிருதம் போன்று பழமை வாய்ந்தது என்று கூறுகின்றனர். திராவிட மொழிக்கு மூலம் சமஸ்கிருதம் இல்லையென்றாலும் ஒரு மொழியின் சார்பினை மற்றொரு மொழியில் பல இடங்களில் காணலாம்.
எல்லா இந்திய மொழிகளும் சிறந்தவையே; ஒவ்வொன்றும் இலட்சக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது. ஆகவே, மொழிவெறி ஆபத்தினை விளைவிக்கும். மொழிவெறி, மொழிவாரியான பிரிவினைகளை ஏற்படுத்தும்; அதன் மூலம் மொழிவாரிப் போராட்டங்கள் ஏற்படும். இதன் முடிவில் நாட்டில் ஒற்றுமை குலைந்து, குழப்பம் ஏற்படும். ஆகவே நமது குழந்தைகளை எவ்வளவு இந்திய மொழிகளை கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு ஊக்குவித்தல் வேண்டும். பல மொழிகளைக் கற்றுக்கொள்ளுதல் மூலம் மனம் வளம் பெறுவதுடன் கூட, இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மை சமூக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக ஆக்கும். மொழி வேறுபாடுகள் நமக்கு ஒருவகையில் கெடுதல் விளைவிப்பவை அல்ல. அவை நாம் பெருமைப்படத் தகுந்தவளமிக்கக் கலாசார மரபின் கருவூலமாக விளங்குகின்றன. அகநோக்கில் காணும்போது, பாபா கூறியவாறு: “ஒரே ஒரு மொழியே உலகில் உண்டு. அது இதயம் பேசும் மொழியாகும்”. அன்பு மிகுந்த இதயம் எல்லோருடனும் ஒரு ஐக்கிய பாவத்தை ஏற்படுத்தும்.