ஓவியம்
ஔரங்காபாதில் அஜந்தா குகை ஓவியங்கள் மிகப் பழங்காலத்தவை; அவை, புத்தக் கலைஞர்களால் வரையப்பட்டவை. பழங்காலத்தில் இந்தியாவில் ஓவியக்கலை எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு அவையே சான்று, பழங்கால ஓவிய வழிமுறைகளில்(School of Painting) காங்கக்ரா பள்ளத்தாக்கு வழிமுறையும், ராஜஸ்தானி வழிமுறையும் மிகவும் பிரசித்தமானவை. இந்துஸ்தானி சங்கீதத்தில் பாரசீக இசைப்பாங்கினைப் புகுத்தியது போல, மொகலாய ஓவியக் கலைஞர்கள் இந்திய ஓவியத்தில் பாரசீகக் கருத்துகளையும் புகுத்தினர். புத்த, இந்து, மொகலாய ஓவிய வழிமுறைகள் ஓவியர்கள் எவ்வாறு சமய உணர்வில் தோய்ந்துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.