குமரியம்மனின் காலடியில் – அவரது பெருமுயற்சியைப் பற்றிய தரிசனம்

Print Friendly, PDF & Email

குமரியம்மனின் காலடியில் – அவரது பெருமுயற்சியைப் பற்றிய தரிசனம்

கன்னியாகுமரி விஜயம், விவேகனந்தரின் வாழ்க்கையின் ஒரு மைல் கல் போன்றது . கோவிலிலுள்ள லோகமாதவின் திருவுருவத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபின், நிலப் பகுதிலிருந்து சிறிது தொலைவிலுள்ள கடலினால் சூழப்பட்ட பாறைக்கு நீந்திச் சென்றார். இந்தியாவின் தென் கோடியிலுள்ள இந்தப் பாறை மீதமருந்து தாய் நாட்டின் முக்காலத்தைப் பற்றியும், அவளது வீழ்ச்சியின் காரணங்கள் பற்றியும், அவள் புத்துயிர் பெருவதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆழ்ந்த தியானம் செய்தார்; இந்த சம்பவத்தைப் பற்றி அவர்கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

குமரிமுனையில், குமர்யம்மன் கோயிலில் உள்ள பாறை மீதமர்ந்து, ஒரு திட்டம் வகுத்தேன், துறவிகளாகிய நாங்களனைவரும் அங்குமிங்கும் அலைந்து சென்று மக்களுக்கு வேதாந்தம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். “வெறும் வயிற்றுக்கும் சமயத்துக்கும் வெகு தூரம்” என்று நம் குருநாதர் கூறவில்லையா. இந்த ஏழை மக்கள் மிருக வாழ்க்கை வாழ்வதற்க்குக் காரணம் அறியாமையே. தியாக உணர்வு மிகுந்த துறவிகள் கிரமங் கிராமமாகச் சென்று கல்வியைப் பரப்பிக் கொண்டே சென்றும், சாண்டளனிலிருந்து எல்லா மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த பல வழிகளில் முயற்சி செய்தும், வாய்மொழிமூலமாகவும், காமிராக்கள், மற்ற உபகரணங்கள் மூலமாகவும் அறிவு புகட்டவும் முயன்றால், நல்ல பலன்கள் கிட்டாமல் போகுமா? தனிப்பட்ட தேசம் என்ற முறையில் நமது தனித்தன்மையை நாம் இழந்து விட்டோம், அதுவே இந்தியாவின் எல்லாக் கெடுதல்களுக்கும், துன்பத்துக்கும் காரணம். இழந்த தனித் தன்மையை நாட்டிற்கு அளித்து, மக்களை முன்னேற்றுவது நம் கடமை”.

இவ்வாறு கன்னியாகுமரியில் தான், ஸ்வாமி விவேகானந்தர் தன்னை இந்தியாவின் சேவைக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பட்டினியால் வாடுகின்ற, ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டார். இங்கு தான் அவர் தேசபக்தி மிகுந்த துறவியாக உருமாற்றம் அடைந்தார். அவரது மத அனுஷ்டானத்தில் வேத ஆராய்ச்சி போலவும், யோகப் பயிற்சி போலவும், தியானம் போலவும், இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் ஒரு அம்சமாக விளங்கியது. சுருங்கச் சொன்னால், கன்னியாகுமரியில் தான், விவேகானந்தர் வாழ்க்கையில் ஒரு பெரிய இலட்சியம் நிறைவேற இருக்கிறது என்ற தன் குருநாதரின் தீர்க்க தரிசனத்தை மெய்ப்பித்தார். இங்கு தான் அவருக்கு, அமெரிக்கா செல்ல வேண்டும், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் போன்ற பயனுள்ள நிறுவனங்கள் கட்டுவதற்காக நிதி திரட்ட வேண்டும். மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தகுந்த பயனுள்ள திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாயிற்று . சிகாகோவில் நடைபெருவதாகப் பிரகடனம் செய்யப்பட்ட சமயங்களின் மகாநாட்டில் விவேகானந்தர் கலந்து கொள்ள வேண்டும் என்று இராமநாதபுரம் ராஜா கருத்து தெரிவித்த போது, மேற்கூரிய எண்ணம் அதிக வேகமும் வலுவும் பெற்றது . அவர் சென்னையில் இருந்த போது, உற்சாகமுள்ள பல இளைஞர்கள் அவரைப் பின் பற்றினர். அவர்கள் பணம் திரட்டி, அவர் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், இந்தப் பணிக்கு அன்னை சாரதா தேவியர் நல்லாசி வழங்குவார்களா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. இவ்வேளையில் குருநாதர் கனவில் தோன்றி, கடலின் மேல் நடந்து சென்று, இவரைப் பின்பற்றும்படி சைகை காட்டினார். அதேசமயம், அன்னை சாரதா தேவியரின் கனவிலும் குருநாதர் தோன்றி விவேகாநந்தர்க்கு ஆசி வழங்கி அவரை இந்த இலட்சியப் பணிக்கு வெளிநாட்டுக்கு அனுப்பும்படிக் கூறினார்.

கேத்ரி ராஜா அவரை உபசரித்து, அவரது பிரயாணத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன