ராமகிருஷ்ண மிஷினின் உதயம்

Print Friendly, PDF & Email

ராமகிருஷ்ண மிஷினின் உதயம்

அழுத்தமான அடிப்படையில் தொண்டினை உருவாக்க விவேகானந்தர், பரமஹம்சரின் சீடர்கள் யாவரையும் (துறவிகள், மற்றவர் உட்பட) வரவழைத்து, ஒன்று கூட்டினார். ராமகிருஷ்ண மிஷன் இவ்வாறு 1897ம் ஆண்டு மே மாதம் 1ந் தேதி உருவாயிற்று. மிஷனின் நோக்கங்களும் இலட்சியங்களுமென அவரால் விள்ளக்கபட்டவை முழுவதும் ஆன்மீக மயமானவை, ஆன்மீகத் தன்மை நிறைந்தவை. தனது கருத்துகளை நிறைவேற்றத் தகுந்த அமைப்பினை அவர் துவக்கிவைத்தார். அடுத்த ஆண்டில் கல்கத்தாவில் பிளேக் பரவியபோது மடத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள சீடர்களின் உதவியைக் கொண்டு நிவாரணப் பணியினைச் சீரமைத்து, அதிகமான அழிவினைக் கொண்டு வராதவாறு பிளேக் தொல்லையினைக் கட்டுப்படுத்தியதன் மூலம் ஏழை மக்களுக்குப் பேருதவி செய்தார். ஸ்வாமியின் பற்பல வெற்றிகளில், குருபாயிக்களின் தனிப்பட்ட ஆன்மீக வாழ்வினை, சமூக ஆன்மீக வாழ்வாக மாற்றி, அதில் சமூக நலனும், மானிடசேவையும் முதல் அங்கமாக வகிக்கும் படி செய்தது மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்றாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: