ஜபம் மற்றும் தியானம் பொதுவான கண்ணோட்டம்

Print Friendly, PDF & Email
ஜபம் மற்றும் தியானம் பொதுவான கண்ணோட்டம்
ஜபம்

மனித இனம் கற்பனை மூலமாகவோ அல்லது அறிவுத்திறன் மூலமாகவோ கண்டுணர்ந்த கோடிக்கணக்கான இறை நாமங்களில் ஏதாவது ஒரு நாமத்தை எடுத்துக்கொண்டு ஓயாமல் ஓதுவது, ஒருவரது மனதை சுத்தப்படுத்தி திருத்தி அமைக்கும் வழிகளில் சாலச்சிறந்தது ஆகும்.

SSS vol 6 P 133

பலரும் என்னிடம் வந்து, “ஏதாவது ஒரு நாமத்தை ஜெபிப்பதற்கு எங்களுக்கு உபதேசியுங்கள்” என்று கேட்கிறார்கள்.

“உங்கள் மனதுக்குப் பிடித்த அல்லது உங்கள் மனதை ஈர்க்கும் ஒரு நாமத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இறை நாமங்கள் அனைத்துமே இனிமையானவை”. என்று பாபா கூறுகிறார்.

அனைத்து யாகங்களிலும் ஜப யக்ஞமே சிறந்ததாக பகவத்கீதை கூறுகிறது. மற்ற யக்ஞங்களில் மனிதன் ஏதாவது ஒரு பொருளை தியாகம் செய்கிறான். ஆனால் ஜப யக்ஞத்தில் தன்னைத்தானே தியாகம் செய்து, தான் வழிபடும் யக்ஞ தேவதையாகவே மாறுகிறான்.

ஆரம்பத்தில் ஜபம் என்பது நுனி நாவிலிருந்து உரக்கக் கூறுதல் அல்லது ஓதுதலாக செய்யப்படுகிறது.

பிறகு தொண்டையின் நடுப்பகுதியிலிருந்து மனதளவில் பலமுறை (மீண்டும் மீண்டும்) உரைப்பதாக மாறுகிறது.

அதன்பின் ஜப மந்திரம் இதயத்தில் ஆழ்ந்து இறங்குகிறது. அடுத்த கட்டமாக நாபியின் மையத்தில் ஆழமாகப் பதிகிறது. ‘ஜ’ என்றால் பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுதல். ‘பா’ என்றால் பாவச் செயல்களில் இருந்து விடுபடுதல். எனவே தொடர்ந்து இறை நாமத்தை விடாது ஓதுவதால் நாம் பிறப்பிலிருந்தும் பாவங்களில் இருந்து விடுபடுகிறோம்.

தியானம்

“இறைவனுள் உறைவதே தன் ஒரே எண்ணமாகவும் ஒரே இலக்காகவும் இருப்பது மெய்யான தியானம். இறைவன் ஒருவனையே எல்லாமாக நினைத்து, இறைவனையே சுவாசித்து, இறைவனையே நேசித்து இறைவனே வாழ்க்கையாக வாழ்வதே தியானம்”, என்கிறார் பகவான் பாபா.

ஸ்ரீ சத்யசாயி உடன் உரையாடல்கள், பக்கம் 133.

தியானத்தின் மூலமாக உடல்ரீதியான பலவீனத்தை வெல்லலாம்; அடங்காத அமைதியற்ற மனதை மனதை கட்டுப்படுத்தலாம்; கருணையின் இருப்பிடம் நோக்கி முன்னேறுவது சுலபமாகிறது. ஆதி சக்தியை அடைந்து ஆனந்தத்தைப் பெறலாம். ஒருமுகப்படுத்துதல் என்னும் தியானம், மனோபலம் மற்றும் ஆற்றலை அதிகரித்து, அனைத்து முயற்சிகளிலும் வெற்றிப் பெற்றுத் தரும்.

SSS அருளுரைகள், p 13

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: