குழுமச்செயற்பாடுகள்- முன்னுரை
குழுமச்செயல்கள்- முன்னுரை
பாலவிகாஸ் வகுப்புகளில் உபயோகப்படுத்தும் ஐந்து கற்பிக்கும் உத்திகளில் முதன்மையான ஒன்று தான் குழுமச்செயல்கள். குழுமச்செயல்கள் என்பது ஒரு செயலை எண்ண அளவிலோ அல்லது உணர்வு பூர்வமாகவோ அல்லது செயல் அல்லது காரிய அளவிலோ ஒரு குழுவாக பல நபர்கள் சேர்ந்து ஆற்றுதலாகும்.
வார்த்தைகளில் “ஒருவரைப் பற்றி ஒரு வருட உரையாடல்களில் அறிந்து கொள்வதைவிட ஒரு மணி நேர விளையாட்டில் அதிகம் அறிந்து கொள்ளலாம்” என்று கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ கூறுகிறார். நம்முடைய பாலவிகாஸ் வகுப்புகளில் ஒரு வகுப்பு நடத்தும் போது ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட முறையில் அடுத்தவரின் இருத்தலை உணர்ந்திராத வகையில் வகுப்பை கவனிக்கிறார்கள். ஆனால் குழுமச் செயல்கள் அறிமுகப்படுத்தியவுடன் அக்குழந்தையிடம் மாறுபட்ட நடத்தையைக் காணலாம். அவ்விடம் முழுவதும் உற்சாகமும் பரபரப்பும் நிறைகிறது.
கற்பிக்கும் உத்திகளில் குழுமச்செயல்களின் தனித்தன்மை:
- குழுச்செயல்பாடுகளில் பங்கேற்கும்போது, குழந்தைகளுக்கு ஒரு சுதந்திரமான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.
- குழந்தைகளுக்கு தங்கள் எண்ணங்கள், யோசனைகள், மற்றும் கருத்துக்களை தாராளமாக வெளிப்படுத்த மிகுந்த வாய்ப்புகளை இச்செயல்பாடுகள் அளிக்கின்றன.
- அனைத்துக் குழந்தைகளுக்கும் இவற்றில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
- இச்செயல்பாடுகள் விளக்கவும், கலந்துரையாடவும் வாய்ப்பளித்து அனைத்து கோணங்களில் இருந்தும் கற்க வாய்ப்பு அளிக்கின்றன.
- கற்கவும், தவறாகப் புரிந்து கொண்டவைகளை உணர்ந்து, மீண்டும் சரியாக புரிந்து கற்றுக் கொள்ள உதவுகின்றன.
- குழந்தைகளின் தார்மீக வளர்ச்சியையும் தார்மீக பகுத்துணர்வின் அளவையும் அறிய சிறந்த முறையாகும்.
- கற்கும் மதிப்பீடுகளை வாழ்வில் ஒருங்கிணைத்து ஆளுமைத்திறன் வளர்ச்சியடைய உதவுகிறது
குழந்தைகளுக்கு நற்பண்புகளை நடைமுறையில் செயல்படுத்தும் வாய்ப்பைக் கொடுத்து அப்பண்புகள் சாத்தியமற்ற, வெறும் கருத்துக் குறிப்பீடுகளாக இல்லாமல் ஆக்குகிறது. - இந்த குழுச்செயல்பாடுகளை வகுப்பு நடத்தும் இடத்திலும் மற்றும் வெளியிடத்திலும் நடத்தலாம்.
- வெளியில் நடத்தும் குழுச்செயல்பாடுகள் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்துகின்றன.
குழுமச்செயல்கள் நடத்தும் முறை– குருமார்களுக்குச் சில குறிப்புகள்:
- பயிற்றுவித்து பழக்கப் போகும் மதிப்பீடும் அதற்குத் தகுந்த செயல்பாட்டையும் முன் திட்டமிட்டுச் செயலாற்றவேண்டும்.
- குழுமச் செயலின் போது, குரு ஒரு கவனிப்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க வேண்டுமே தவிர விமரிசிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது.
- குருமார்கள் அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- குழுமச் செயலின் முடிவில், அதன் தாக்கம் குறித்து, குருமார்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
- குழந்தைகள் தாங்கள் பழக்கப் போகும் மதிப்பீட்டைப் படிப்படியாக ஏற்றுக் கொள்ள, முழுமையான தீர்க்கமான கலந்துரையாடலே வழி வகுக்கிறது.
குழுச் செயற்பாடுகள்- விளையாட்டுகள்:
- குரூப் -1 இல் உள்ள குழந்தைகளை தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை கொண்டு வரச் சொல்லவும்.
- ஒரு செய்தித் தாள் மடலைத் தரையில் விரிக்கவும்.
- விளையாட்டுப் பொருட்களை அதில் வைக்கச் சொல்லவும்.
- அடுத்து பொம்மைகளை நீக்கித் தாளை பாதியாக மடிக்கவும்.
- மடித்த தாளில் பொருட்களை வைக்கச் சொல்லவும். தாள் பாதி அளவு ஆனதால் குறைந்த பொருட்களைக் கொண்ட குழந்தைகளால் வசதியாக வைக்க இயலும். நிறைய பொருட்கள் கொண்ட குழந்தைகள் தங்கள் பொருட்களிலிருந்து இடத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டை நீக்கும்படி ஆகும். (ஏதேனும் குழந்தை தன் அனைத்துப் பொருட்களையும் வைக்க மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுகிறதா என்று குருமார்கள் கண்காணி்க்க வேண்டும்)
- மறுபடியும் அனைத்துப் பொருட்களையும் எடுத்து தாளை இன்னும் பாதியாக மடிக்கவும். தாள் இன்னும் சிறியதாகி விட்டது. மீண்டும் குழந்தைகளை விளையாட்டுப் பொருட்களை வைக்கச் சொல்லவும். இன்னும் சில பொருட்களை நீக்கும் படியாகும்.
- விளையாட்டை இப்படியாக தொடரவும். ஒவ்வொரு குழந்தையின் ஒரே ஒரு பொருள் கொள்ளும் வரை தொடர்ந்நு விளையாடவும். கற்றுக் கொள்ளுதல்-
குரூப்- 1 வகுப்பிற்கான சில குழுமச் செயல்கள்:
- நடித்துக் காட்டுதல்
- மனப்பாங்கு சோதனைகள்
- வினாடி வினா
குழுமச் செயல்களின் பயன்கள்:
- குழுமச் செயல்கள் குழந்தைகளிடத்தில் ஒருமை பாவத்தைத் தோற்றுவிக்கிறது. குழு உணர்ச்சியை வளர்க்கிறது.
- மற்றவர்களை மதிக்கவும், சச்சரவுகளை தீர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்களின் தேவைகளை அவர்கள் வெளிப்படுத்தும் முன்பே தெரிந்து கொள்ளும் கூரறிவு கொண்டவர்கள் ஆகிறார்கள்.
- குழுமச் செயல்கள் மூலம், பகிர்ந்து கொள்ளுதல், உதவுதல், ஒத்துழைத்தல் ஆகியவைகளை தானாகவே செயல்படுத்தி, ஆரோக்யமான போட்டிக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
- குழந்தைகள் மற்றவர்களிடம் கலந்து பழகும் போது தங்கள் ஆற்றல்களையும் பலவீனங்களையும் தெரிந்து கொள்கிறார்கள்.
- குழுமச்செயல்கள், எண்ணம் மற்றும் மனப்பாங்கில், தற்சார்பையும், பக்குவத்தையும் வளர்க்கிறது. அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்களாக ஆகிறார்கள்.