Around the world again – Tamil

Print Friendly, PDF & Email

Around the world again

உலகத்தைச் சுற்றி, மறுபடியும் 1899ம் ஆண்டு ஜூன் மாதம் 20ந் தேதியன்று, ஸ்வாமி துரியானந்தரும், சகோதரி நிவேதிதாவும் உடன்வர, சுவாமி கடற் பிரயாணத்துக்குக் கிளம்பினார். அவர்கள் இருவருக்கும் சுவாமியுடன் கூடப் பயணம் செய்தது ஒரு கல்வியாக அமைந்தது. சகோதரி நிவேதிதா எழுதினார். ‘ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, கதைகள் நீரோட்டமாக வந்தன. எந்தக் கணத்தில் உள்மனத் தூண்டுதல் (intuition) எவ்வாறு மின்வெட்டும், புதிய உண்மை எவ்வாறு காதில் கணீரென்று ஒலிக்கும் என்று எங்களால் அனுமானிக்க இயலாது’. விவேகானந்தர் அவர்களிடம் கூறினார், “மேலை நாடுகளின் சமூக வாழ்வு கலகலவென்ற சிரிப்பைப் போன்றது, அடித்தளத்தில் அது ஒரு ஓலம்; அது அழுகையில் முடிகிறது. இந்தியாவிலோ, மேற்புற வாழ்வு துக்கரமாகவும் இருள் கவ்வியும் இருக்கும். ஆனால் அடித்தளத்தில் அலட்சியமும் குதூகலமும் நிறைந்திருக்கும். மேலை நாடுகள் புற இயற்கையை வெற்றி கொள்ள முயன்று வந்துள்ளன. கிழக்கு அகவாழ்வுவினை வெற்றி கொள்ள முயன்று வந்துள்ளது. கிழக்கும் மேற்கும் ஒன்று சேருந்து அதனதன் சிறப்புக் குணம் அழிவுபடாது, ஒருவர் மற்றவரின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும். மேற்கு கிழக்கிலிருந்து கற்றுக் கொள்ளவும். கிழக்கு மேற்கிலிருந்து கற்றுக் கொள்ளவும், நிறைய உள்ளன. இவ்விரண்டு இலட்சியங்களும் ஒன்றைக் கலந்து அதன்மூலம் எதிர்காலம் உருவாக்கப்படவேண்டும். கிழக்கென்பதும், மேற்கென்பதும் தனியாக இல்லை, ஒரே ஒரு மனித இனம்தான் உண்டு’..

இத்தகைய இணைப்பினை அடைவதற்காக, அவர் இடைவிடாமல் உழைத்து வந்தார். வடக்கு கலிபோர்னியாவில் சாந்தி ஆஸ்ரமம் ஒன்று நிறுவினார். அதனையும், சான்பிரன்ஸிஸ்கோவில் உள்ள வேதாந்த கேந்திரத்தையும் ஸ்வாமி துரியானந்தரின் பொறுப்பில் ஒப்படைத்தார்.

ஆன்மீக ஒளி, கொழுந்து விட்டு எரிந்தது; ஆனால் உடல் சக்தி குன்றிக்கொண்டே வந்தது. விவேகானந்தர் தனது வாழ்நாள் முடியப் போகிறது என்று அறிந்தார். அவர் மிஸ் மக்டொனால்டுக்கு எழுதினர்: “ஓடம் அமைதியான துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது; இனி அது அங்கிருந்து வெளிக் கிளம்பாது.”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: