ஸாந்தாகாரம் – செயற்பாடு

Print Friendly, PDF & Email
ஸாந்தாகாரம் – செயற்பாடு
  1. ஒரு வரைதாளில் நான்கில் ஒரு பாகம் எடுத்துக்கொண்டு, ஸ்துதியின் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனியாக ஒரு அட்டை தயார் செய்யவும். அதாவது, ஸாந்தாகாரம் புஜகசயனம் என்னும் வரியை ஒரு அட்டையிலும், பத்மநாபம் ஸுரேசம் என்னும் வரியை மற்றொரு அட்டையிலும் எழுதவும். இது போல் அனைத்து வரிகளுக்கும் தயார் செய்யவும். பாலவிகாஸ் குருமார்கள், வகுப்பு ஆரம்பிக்கும் முன்பே இந்த அட்டைகளைத் தயாராக வைத்திருக்கவேண்டும்.
  2. வகுப்பில், குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒரு அட்டை எடுக்கச்சொல்லுங்கள். இவ்வாறு, மொத்தம் 8 குழந்தைகள், ஒவ்வொருவரும் ஸ்துதியின் ஒரு வரி மட்டும் எழுதப்பட்ட ஒரு அட்டையை எடுத்திருப்பார்கள். எட்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அனைவருக்கும் ஒரு முறை வாய்ப்பு கிடைக்குமாறு இதையேத் திரும்பச் செய்யலாம்.
  3. குழந்தைகளைக் கையில் அட்டையுடன் நிற்க வைத்து, ஸ்துதி வரிகள் சரியான தொடரில் அமையுமாறுத் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.
  4. அனைவரும் சரியான வரிசையில் நின்றவுடன், ஒவ்வொரு குழந்தையையும் அவர்கள் கையில் இருக்கும் ஸ்துதி வரியைப் பாடச் சொல்லுங்கள்.

இந்த செயற்பாட்டின் ஒரு மாறுபாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்துதி வரிகளின் பொருளையும் தனித்தனி அட்டைகளில் எழுதி, குழந்தைகளை, ஒவ்வொரு ஸ்துதி வரியையும் அதற்குரிய சரியான பொருளுடன் பொருத்தச் சொல்லலாம்.

நோக்கம்

இந்த செயற்பாட்டின் மூலம் குழந்தைகள் ஸ்துதியை எளிதில் கற்றுக்கொள்ள முடியும். சற்று நீளமாக உள்ள அனைத்து ஸ்துதிகளுக்கும் இந்த செயற்பாட்டைப் பயன்படுத்தலாம்.

error: