வரிசைப்படுத்து

Print Friendly, PDF & Email

வரிசைப்படுத்து

விளையாட்டின் நோக்கம்:

இந்த விளையாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் சமூகம் சார்ந்த திறன்களை மேம்படுத்துகிறது.

கற்பிக்கப்படும் பண்புகள்:
  • பிரச்சினைகளை தீர்க்கும் முறை
  • முடிவெடுத்தல்
  • கால நிர்வாகம்
குருவிற்கான ஆயத்த வேலைகள்:
  1. குரு தனது வகுப்பில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல அட்டைகளைத் தயார் செய்யவும்.
  2. ஒவ்வொரு அட்டையிலும் இராமாயணக் கதாபாத்திரங்களின் பெயர்களை எழுதவும். எடுத்துக்காட்டு: தசரதர், வாலி, வால்மீகி, கௌசல்யா, கைகேயி, மைதிலி, விபீஷணன்
விளையாட்டு:
  1. அட்டைகளை நன்றாகக் கலந்து விட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அட்டையைக் கொடுக்கவும்.
  2. குரு, வகுப்பில் உள்ள குழந்தைகளை இரு குழுக்களாகப் பிரித்து, செயற்பாட்டை விளக்கவும்.
  3. இரு குழுக்களிலும் உள்ள குழந்தைகள், அட்டையில் உள்ள பெயருக்கேற்ப அகர வரிசைப்படி (alphabetical order) நிற்க வேண்டும். (அகராதியில் உள்ள படி) குறைந்த நேரத்தில் இதைச் செய்யக் கூடிய குழு மதிப்பெண்ணை பெறுகிறது.

பல்வேறு மகான்கள், புகழ்பெற்ற தலைவர்கள், வரலாற்றில் இடம்பெறும் பல ஞானிகள் பெயர் கொண்ட அட்டைகளைக் கொண்டும் இந்த விளையாட்டை விளையாடலாம்.

குருமார்களுக்குக் குறிப்புகள்:

விளையாட்டின் நிலையை மேலும் உயர்த்த, ஒரே எழுத்தில் தொடங்கும் பல சொற்களைப் பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன