பக்தியோகம்

Print Friendly, PDF & Email
பக்தியோகம்

பாபா ஒருமுறை கீழ்க்கண்ட கதையைக் கூறினார். ஞானதேவரும், நாமதேவரும் ஒருமுறை புனித யாத்திரை சென்றார்கள். ஞானதேவர் பக்தராக இருந்தாலும், ஞானமார்க்கத்தில் அதிகம் ஈடுபட்டார். நாமதேவர் உணர்ச்சிகள் மிகுந்தவர். அவர் மிகவும் பக்தியில் ஈடுபட்டார். பண்டரிபுர விட்டல விக்ரகந்தான் அவருக்குச் சகலமும், அதுவே அவருக்குத் தாய், தந்தை, மற்றும் எல்லாம்.

அவர்கள் பல இடங்களுக்குச் சென்றார்கள். ஒருநாள் அவர்கள் மிகவும் களைப்படைந்து தாகமுற்றார்கள். வழியில் ஒரு கிணற்றைக் கண்டார்கள். மிகவும் ஆழத்தில் சிறிது தண்ணீர்இருந்தது. மற்றபடி அது வறண்டிருந்தது. தாகத்தைத் தணிக்க அந்தத் தண்ணீரை எவ்வாறு வெளியே கொண்டு வருவது? பாத்திரம், கயிறு, வேறு எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

ஞான தேவர் தியானத்தில் அமர்ந்தார். யோக சக்தியால் தன்னை ஒரு பறவையாக மாற்றிக்கொண்டு, கிணற்றுக்குள் சென்று, தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக்கொண்டு பறந்து வெளியே வந்து, மனிதவுருவமாக மறுபடி மாறினார்.

நாமதேவர் முதிர்ந்த அத்தகைய யோகியல்ல. யோக சித்திகளும் அவர் அதிகம் பெறவில்லை. அவரால் கதறியழ முடியும். விட்டலனை உதவிக்கு அழைக்க முடியும். விட்டலனைக் கூவியழைத்து அழுதார். கிணற்றுத் தண்ணீர் மேலே பெருகிவந்தது. கிணற்று உச்சிவரை வந்தது. நாமதேவர் கையைநீட்டி தண்ணீரை முகந்து பருகினார். இதைக்கண்டு ஞானதேவர் ,பக்தியின் பிரபாவத்தை நன்கு உணர்ந்து கொண்டார். அது மற்ற யோகங்களுக்குச் சிறிதும் தாழ்ந்த தல்ல என்றும் அறிந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன