ப்ரஹ்மார்ப்பணம் – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ப்ரஹ்மார்ப்பணம் – மேலும் படிக்க
ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக்னெள ப்ரஹ்மணாஹீதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதினா

(அத்.04, பதி.24)

பொருள்: அர்ப்பணம் செய்தல் பரம்மம். அர்ப்பணம் செய்யப்படும் யாவும் ப்ரம்மமே. ப்ரம்மாகிய அக்னியில் ப்ரம்மத்தால் கொடுக்கப்படுகிறது. ப்ரம்மத்திடம் தம் மனதை முழுவதும் லயிக்க வைத்து தம் செயல்பாடுகளை நிறைவேற்றுபவன் ப்ரம்மத்தை அடைகிறான்.

யக்ஞம் (வேள்வி) என்றால் தியாகம் என்று பொருள். கடவுளை மனநிறைவு கொள்ளச் செய்யவே இத்தியாகம் நடத்தப்படுகிறது. வேத முறையான யக்ஞத்தில் யாகத் தீ வளர்க்கப்பட்டு நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. யாகத் தீயில் சமர்பிக்கப்படும் ஒவ்வொன்றும் கடவுளரைச் சென்றடைவதாகவே நம்பிக்கை கொள்ளப்படுகிறது.

“ஒரு யக்ஞம் (வேள்வி) என்பது அஞ்சல் முறையைப் போன்றது. புனிதமான வேள்வித் தீயானது அஞ்சல் பெட்டியைப் போன்றது. அர்ப்பணம் செய்யப்படும் யாவும் கடிதத்தில் உள்ளவையாகும். வேத மந்திர கோஷங்கள் யாவும் முகவரியைப் போன்றது. வேள்வி நடத்துபவரின் நம்பிக்கையே உறையின் மீதான அஞ்சல் தலைகளாகும். கடவுளை இக்கடிதம் சென்றடைகையில் அவர் மானிடர் அனைவரையும் அமைதியும் அபிவிருத்தியும் பெற வாழ்த்துகிறார். “என நம் பேரன்பு மிக்க பகவான் உரைக்கிறார்.

இறைவனின் நிலையான முன்னிலையில் தம் அனைத்து செயல்பாடுகளையும் அவருக்கு அர்ப்பணித்து வாழும் ஒவ்வொருவரும் (வேள்வியை) யக்ஞத்தை ஆற்றுகின்றவர்களே! ஒவ்வொரு நாளும் ஆணவத்தால் எழும் ஆசைகளை, மன எழுச்சியினை, தீவிர உணர்வுகளை, உணர்வுகள் மற்றும் செயல்களை வேள்வித் தீயினால் எழும் அர்ப்பணம் மற்றும் பக்தியாகிய சுவாலையில் இடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன