பெருங்கடலுக்கு குறுக்கே பாலம் கட்டுதல்
பெருங்கடலுக்கு குறுக்கே பாலம் கட்டுதல்
இராமர், தனக்கு முன் இருந்த ஆற்றல் வாய்ந்த அந்தக் கடலைப் பார்த்துவிட்டு லட்சுமணனிடம் தன்னுடைய வில்லையும் அம்பையும் எடுத்து வரச் சொன்னார். இராமர் வில்லில் அம்பை பூட்டியவுடன் அதனால் என்ன விளைவுகள் ஏற்படுமோ என்று லட்சுமணன் பயந்தான். கடல் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருண்டு வந்து தங்களிடம் கருணை காட்டுமாறு பிரார்த்தனை செய்து கொண்டு, இராமரின் பாதத்தை நோக்கி வந்தன. அப்போது வானத்திலிருந்து ஒரு குரல் “கடவுளே! உங்களிடையே ஒரு முனிவரால் சபிக்கப்பட்ட நளன் நீலன் என்ற இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கிட்ட அந்த சாபத்தை தற்பொழுது பயன்படுத்தி நன்மைபெறக்கூடும்.” என்று கூறியது. மேலும் அந்தக் கடல்:
அந்த சம்பவத்தையும் எடுத்துக் கூறியது “ஒரு சமயம் நளன் நீலன் இருவரும் சிறுவர்களாக இருந்த போது, ஒரு நதிக்கரையில் பல துறவிகள் குடில்கள் அமைத்து வாழ்ந்திருந்தனர். இந்த சிறுவர்கள் இருவரும் அந்த குடில்களுக்குச் சென்று அவர்கள் வைத்து வழிபட்டு வந்த புனிதமான சாளிகிராமத்தை எடுத்து அந்த நதியில் எறிந்து விடுவர். அதனால் அவர்கள் கோபம் கொண்டு “நீங்கள் நதியில் எறியும் எந்த பொருளும் கடலில் அமிழ்ந்து போகாமல் நீரில் மிதக்கக்கடவது” என்று சிறுவர்களுக்கு சாபமிட்டனர். அதனால் அவர்களால் எறியும் பாறைகள் யாவும் பெரிய வெள்ளம் பெருக்கெடுத்தாலும் நீரிலேயே மிதக்கும்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது
பிள்ளைகள் விஷமம் செய்யும்போது பெரியவர்களின் கோபத்திற்கும் சில சமயம் சிறு தண்டனைகளுக்கும் ஆளாகலாம். குழந்தைகள் தாங்கள் செய்த தவறுகளின் அபாயங்களை புரிந்துகொண்டு அதை திருத்திக் கொள்வதற்காகத்தான் பெரியவர்கள் தண்டனை கொடுப்பது. தனது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டு திரும்பவும் செய்ய மாட்டோம் என்று உறுதிகூறும் பட்சத்தில் அந்த தண்டனையே அவர்களுக்கு, நளன் நீலனுக்கு ஆனதுபோல உதவி செய்வதாகவும் மாறிவிடுகிறது.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: பெரியவர்களை மதி. நல்லவனாக இரு, நல்லதை செய், நல்லதையே பார்.
ஒவ்வொரு பாறையிலும் உங்கள் நாமத்தைப் பொறித்து மிதக்கவிடவும். மேலும் கடல் கூறியதாவது “இராமா! உங்கள் நாமம் மிகவும் மென்மையானது, வலுவானதல்ல. அப்படி எழுதப்பட்ட பாறைகள் எவ்வளவு பெரிதாக ஏன் மலையாக இருந்தால் கூட மிதந்து பாலமாக அமையும்” என்றது. இராமர் வானரர்களிடம் பாலம் அமைக்கச் சொன்னார். ஜாம்பவான், நளன் நீலன் இருவரின் சாபத்தையும் உபயோகித்து அவர்கள் இருவரின் இதயத்தில் இராமரை இருத்தி மலைகளையும் பாறைகளையும் கடலில் எறியச் சொன்னார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
கடவுளின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டு செய்யும் எந்த வேலையும் கடினமாக இருக்காது. ஏனெனில் இறைவனின் நாமம் அவ்வளவு வலிமையுள்ளது.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி:
கடவுளின் ரூபத்தை விட அவரின் நாமம் சக்தி வாய்ந்தது. தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷணம் இவைகளால் பக்தர்கள் அடையும் அளவற்ற ஆனந்தம், சந்தோஷம் முதலியவைகளை , குருமார்கள் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறலாம்.
வானரர்கள் பல திசைகளிலும் உள்ள மலைகளை நளன் நீலன் இருவரிடமும் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்கள் உதவியுடன் வானரசேனைகள், ஐந்து நாட்களுக்குள் நூறு யோஜனைகள் தூரம் பாலம் கட்டி முடித்தனர்.
இராமர் வானரர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டினார். விபீஷணன் இராமரிடம் இராவணன் சிவனை வழிபடுபவன் என்று கூறினான். அவனின் ஆலோசனைப்படி இராமர் ஒரு இராம லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு புஜை செய்து வழிபட்டார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
எந்தக்காரியம் செய்வதற்குமுன்னும் கடவுளிடம் பிரார்த்தனை செய்த பிறகே செய்ய வேண்டும்.
இங்கு ஸ்ரீ ராமர், தான் ஒரு அவதார புருஷராக இருந்தும் கூட, பிரார்த்தனை, சரணடைதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்த, தானே அனுஷ்டித்துக் காட்டினார்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி:
பிரார்த்தனை இல்லாத செயல் இருட்டில் தடவித் தேடுதல் போல குருட்டுத்தனமானது. பிரார்த்தனையுடன் செய்யும் செயல் நேர்மையும் சக்தியும் வாய்ந்தது.
கடைப்பிடிக்க வேண்டிய மூன்று W க்கள்-வேலை (work), ஞானம்(wisdom), வழிபாடு (worship)
பிறகு வானரர்கள் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே பாலத்தின் மீது அணிவகுத்துச் சென்றனர். சீக்கிரமாகவே இராம லஷ்மணர்கள் கடலைக் கடந்து இலங்கையின் வாயிலை அடைந்தனர்.