ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்-வாழ்வும் உபதேசங்களும்

Print Friendly, PDF & Email

முகவுரை

“ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்வு அனுஷ்டானத்தில்உள்ள சமயத்தின் வரலாறாகும். அது நாம் கடவுளை நேருக்கு நேர்பார்ப்பதற்கு உதவுகிறது. இறைமைத் தன்மை, தெய்வீகம்இவற்றின் வாழும் திருவுருவமாக அவர் விளங்கினார்.”
– மகாத்மா காந்திஜி

ராமகிருஷ்ணர் தம் வாழ்வில் சமய உண்மையையும் கடவுள்இருப்பையும் நிரூபித்தார். ஏறக்குறைய நம்பிக்கையற்ற ஆனால்ஆர்வமுடைய இளைஞனான நரேந்திரநாத் தத்தர்,ராமகிருஷ்ணரை, “மஹாசய (ஐயா), நீங்கள் கடவுளைப்பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்டபோது ராமகிருஷ்ணர் ‘ஆம்நான் இங்கு இப்போது உன்னை எப்படிப் பார்க்கிறேனோ அப்படிஅவரைப் பார்க்கிறேன்’ ஆனால் இன்னும் நன்கு ஆழ்ந்துபார்க்கிறேன் என்றார். பின்னால் ராமகிருஷ்ணர் இறைவனுடையகாட்சியையும்,அருளையும் நரேந்திராநாத்துக்குக்காட்டியருளினார். நரேந்திரநாத் பின்னால் உலகமனைத்துக்கும்மதநம்பிக்கையைப் பற்றி பறைசாற்றுபவராக ஆனார்.

‘எல்லா சமயங்களும் உண்மையானவை, அவை கடவுளைஅடைவதற்குரிய பல்வேறு பாதைகள்தாம். சமயம் என்பது வெறும்நம்பிக்கையில் இல்லை, ஆனால் அனுபூதியில் இறைவனைஉணர்வதில் இருக்கிறது.’ என்பதை ராமகிருஷ்ணர் நிரூபித்தார்.

லோகாயத வாதத்தால் குருடாக்கப்பட்ட உலகத்தை உயர்த்தவல்ல பலம் வாய்ந்த ஆன்மீக சக்தியாக ராமகிருஷ்ணர் விளங்கினார். இந்தியக் கலாசாரம், ஆன்மீகம் இவற்றின் திருவுருவமாகவும் சின்னமாகவும் அவர் விளங்கினார். இந்துகளின் நம்பிக்கை பெருமளவிற்கு அசைக்கப்பட்டு நாட்டில் ஐரோப்பியக் கலாசாரம், நாகரீகம் நுழைந்ததின் விளைவாக உண்டானநீதிநெறிக்குலைவு ஆன்மீகத் தாழ்ச்சி என்னும் சகதியில் நாடுஅமிழ்ந்து கொண்டிருந்த போது, அவர் இந்து மதத்தின் அழகு,பெருமை, பலம் இவற்றை இந்துக்கள் காணும்படி செய்தார்.

ராமகிருஷ்ணர் இந்து மதத்தைப் பேரழிவிலிருந்துகாப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் விஞ்ஞானத்தின் அதிசயமான முன்னேற்றத்தால் ஏற்பட்ட பொருள் வளர்ச்சியால் பிரமித்து உலகைஆட்கொண்டு வளர்ந்து வரும்சமயஅவநம்பிக்கை,தொன்மையான கொள்கைகளில் சந்தேகம் இவற்றுக்கு எதிராகஎல்லா சமயங்களையும் புனருத்தாரணம் செய்வதற்கும் உதவினார்ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்று போற்றப்பட்டது மிகவும்பொருத்தமானதாகும்.

எல்லாமதங்களைச்சேர்ந்தநூல்கள்தம்உண்மைநிரூபணத்தையும் நிறைவையும் இராமகிருஷ்ணரில் கண்டன. பரமஹம்ஸர் என்பவர் தன் உய்த்துணரும் காட்சியால் உடலில் வேறானதும் தனியானதுமான ஆத்மாவை, புறப் பொருளுக்குப்பின்னுள்ள ஆத்மாவை, உலகத் தோற்றத்துக்குப் பின்னுள்ளகடவுளை உய்த்துணர்பவர். கடவுளது அனுபவத்தில் மட்டுமேஅவர்ஆனந்தப்படுபவர் ஆவார். ஓர் அன்னமானது நீரிலிருந்துபாலைப்பிரித்து, குடித்து, பாலை மட்டும் அனுபவிக்கவல்லது என்றுசொல்லப்படுவதுபோல் அவர் கடவுளை அனுபவித்தார். எல்லாமதங்களின் சாஸ்திரங்களும், அவை ஒன்றையும் இராமகிருஷ்ணர்படித்திராவிட்டாலும், அவரில் நிறைவினையும் காரணத்தையும்பெற்றன. அவர் எல்லா சாஸ்திரங்களின் ஒளிமிக்க ஞானத்தின்திருவுருவாக இருந்தார். அவரது வாழ்வு, வைராக்யமென்ற துறவு,பக்தி, ஞானம் ஆகிய மூன்று நீரோட்டங்களின் புனித (திரிவேணி)சங்கமமாக இருந்தது.

Our Funky HTML Page

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன