இறை நாமத்தை உரக்க ஓதுதல்
இறை நாமத்தை உரக்க ஓதுதல்
“ஒரு உண்மையான சாதகனுக்கு, இறைநாமத்தை அன்புடனும், நம்பிக்கையுடனும் ஓதுதல் இறையருளைப் பெற்றுத்தரும் வகையில் மாபெரும் சக்தியாகும். கடலையும் தாவிக் குதிக்கும் பெரும் ஆற்றல் படைத்தது இறைவனது நாமம். கற்பனைக்கு எட்டாத சக்தியையும் துணிவையும் அளிக்கவல்லது. அனுமனுக்கு ராம நாமமே சக்தி அளித்ததா என்று வினவியபோது, ஸ்ரீராமர், சிவனையும் விஷ்ணுவையும் குறிக்கும் பீஜாக்ஷரங்கள் இரண்டும் கலந்த பெயரான ‘ராமா’ என்ற பெயரைத் தாங்கியதால் தான் ராவணனையும் அரக்கர்கள் கூட்டத்தையும் வெற்றிபெற என்ற தாகக் கூறினார். ராம நாமம் அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தது. நாம ஜெபம் செய்வதன் மூலம் இறைவனையும் அவனது குணாதிசயங்களையும் சுலபமாக அறியலாம். இறைவன் நாமத்தை ஜபிப்பதன் மூலம் ‘நா புனிதம் ஆக்கப்பட’ வேண்டும்.
ஆதாரம்: அருளுரை, 23 நவம்பர் 1969
‘ஓம் ஸ்ரீ சாய்ராம்’ என்னும் ஜப மந்திரத்தின் விளக்கவுரை
ஜபம் என்பது நமது இஷ்ட தெய்வத்தின் பெயரை பூரணமான அன்புடன் மீண்டும் மீண்டும் உரைப்பது ஆகும். தியானம் அல்லது மனம் ஒரு மித்தல் என்ற பயிற்சிக்கு ஜபம் உதவுகிறது. ஜபம் பயனுள்ளதாக அமைய நாம் ஓதும் ஜபமந்திரத்தின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு பிடித்தமான ஒருவரை அழைக்கும் பொழுது எவ்வாறு அன்புடன் பாசத்துடன் அழைக்கிறோம்; அவ்வாறே ஜபம் செய்யும் போது இறைவனை நாம் அழைக்கிறோம். ஜபத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் நாமம் நமது இஷ்ட தேவதையின் எந்த ஒரு பெயராகவும் இருக்கலாம். உதாரணமாக, ‘ஓம் ஸ்ரீ சாய்ராம்’ என்ற மந்திரத்தையும் அதன் பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஓம் – ஓம்காரம், பிரணவாகாரம் பிரணவ +ஆகாரம் ;பிரபஞ்சத்தின் முழுமையான உருவம்
ஸ்ரீ – புனிதத்துவம் அல்லது மரியாதையை காட்டுவது
சாயி – ச + ஆயி
ச – சர்வஸ்ரேஷ்டா, பரிபூரணம்
ஆயி – அன்னை
RAM- R+A+M
R- இரவி- சூரியதேவன், சூரிய ஒளி இருக்கும் இடத்தில் இருள் என்பது இல்லை; அதைப்போலவே ‘ராம்’ என்று கூறும் போது அறியாமை இருள் அகன்று ஞான ஒளி வீசுகிறது.
A- அக்னி தேவதை (நெருப்பு), தன்னிடம் இருக்கும் எந்த ஒரு பொருளையும் நெருப்பானது பொசுக்கி அழுக்கை அகற்றி மிகவும் சுத்தமான வெள்ளை சாம்பல் ஆக மாற்றுகிறது. அதைப்போல ராம நாமம் நமது மனதிலும் புலத்திலும் உள்ள தூய்மையற்ற எண்ணங்களை பொசுக்கி பள்ளி தூய்மை ஆக்குகிறது.
M- மதி (நிலவு), நிலவை பார்க்கும் பொழுது அதன் குளுமையும் இனிமையையும் நாம் உணர்கிறோம். அதைப் போலவே ராமநாமம் நமது மனதை குளிர வைத்து இனிமையான அமைதியைக் கொடுக்கிறது.
எனவே ஓம் ஸ்ரீ சாய்ராம் என்று நிதானமாக ஓதுவதால் நமது அறியாமை அகன்று, ஞானம் ஒளிர்கிறது. நமது எண்ணங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் புனித மாக்கப்பட்டு, நாம் மன அமைதி தானாக கிடைக்கப் பெறுகிறோம். நமது வாழ்க்கை இனிமை, மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் அமைகிறது.
ஆதாரம் ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் குழந்தைகளுக்கான கையேடு பிரிவு 1 ஆண்டு 1