பகுதி 2
இளம் சாயியின் வாழ்க்கையில் …
எனது வாழ்வே என் செய்தி
பகுதி 2
சத்யாவுக்குப் பாடல்கள் புனைவதில் சிறந்த திறமை இருந்தது. கடைக்காரர்கள் தமது பொருட்களை விளம்பரப்படுத்த அவரது சந்தப் பாடல்களைப் பயன்படுத்தினர். பாடல்கள் கேட்பவர் கவனத்தைக் கவர்ந்தன. சிறுவர்களால் மிக உற்சாகத்துடன் பாடப்பட்டன. விற்பனை வெகுவாக உயர்ந்தது. ஆகவே சத்யாவின் பாடல்களுக்கு எப்போதும் தேவை இருந்தது.
சத்யாவின் சில பாடல்கள் சமூகத்தில் உயர்மாற்றங்களை ஏற்படுத்த இயற்றப்பட்டன. உதாரணமாக, கர்ணம் (கிராம கணக்குப்பிள்ளை), பணம் அதிகமாகச் சேர்த்திருந்தார். அத்துடன் ஒழுக்கமற்ற, விரும்பத்தகாத பல பழக்கங்களும் கொண்டிருந்தார். அவர் ஹிட்லர் மீசை வைத்துக் கொண்டு பெருமையாக வலம் வந்தார். சாதாரணமாக கிராமத்தில் அணியவேண்டிய உடைக்குப் பதில் மிகவும் விலையுயர்ந்த பட்டுடைகள் உடுத்துவார். பளபளக்கும் பட்டைகொண்ட தங்கக்கடிகாரம் அணிந்துகொண்டு அதனால் மிகவும் பெருமிதப்பட்டார்.
ஒரு நாள் சுப்பம்மா சத்யாவிடம் வந்து புன்னகையுடன் கேட்டார்: “ராஜு, பல பேருக்கு நீ அறிவுரை கூறுகின்றாய். என் கணவர் (கர்ணம்) தவறான வழியில் செல்கிறார். அவரை நீ ஏன் திருத்தக்கூடாது?” கர்ணம் ஒவ்வொரு நாள் மாலையிலும் வீட்டுக்கு முன்னால் இருந்த துளசிச் செடியின் அருகில் உட்காருவது வழக்கம். சத்யா இனிமையான சந்தத்தில் பாடலை இயற்றி, அதைச் சிறுவர்களுக்குச் சொல்-க் கொடுத்தார். அச்சிறுவர்கள் கர்ணத்தின் வீட்டு வழியாகச் செல்லும்போது கீழ்க்கண்டவாறு பாடுவர்: “இக்காலத்தில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன நேர்ந்தது? ஆண்கள் தோலால் செய்த பட்டையை இடதுகையில் சுற்றிக் கொண்டு கர்வத்துடன் நடமாடுகிறார்கள். இக்காலத்து ஆண், பெண் தோற்றத்தைப் பற்றியோ, அவர்களது உடைகளைப் பற்றியோ ஒன்றும் கௌரவமாகப் பேச இயலவில்லை. ஒருவர் ஒழுக்கங்கெட்ட நடத்தையைக் கைவிடவில்லையென்றால், ஊரிலுள்ள மக்களால் வெளியே விரட்டப்படுவார். நண்பர்கள், அவரைக் காலணியால் அடிப்பார்கள்.” அந்தப்பாடல் ஹிட்லர் மீசையைப் பற்றிய குறிப்புடன் முடிந்தது. கர்ணம் அதனைக் கேட்டு எரிச்சல் அடைந்து வீட்டுக்குள்ளே சென்றார்.
பிறகு சிறுவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார். “இந்தப்பாடலை யார் எழுதியது?” என்று கேட்டார். “ராஜு எழுதினான்” என்று குழந்தைகள் கூறினார்கள். இந்த நாடகத்துக்குப் பின்னணியில் இருந்தது சத்யா தான் என்று கர்ணத்துக்கு நன்றாகத் தெரியும். மறுநாள் சத்யாவை அழைத்துக் கூறினார். “ராஜு குழந்தைகளுக்கு இந்தப் பாடல்களையெல்லாம் கற்பிக்காதே”. சத்யா பதில் கூறினார்:
“அய்யா, நீங்கள் இந்த கிராமத்துக்குத் தலைவர். நீங்கள் இவ்வாறெல்லாம் செய்வதும் சரியல்ல.” கர்ணம் ஹிட்லர் மீசையை எடுத்து, இனி தான் ஒழுங்காக நடந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார். சத்யாவும் தான் இனி எந்தத் தொந்தரவும் தருவதில்லை என்று வாக்குறுதி கொடுத்தார். சுப்பம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
சூழ்நிலைக்குத் தகுந்தபடி சத்யாவுக்கு பாட்டு எழுதும் திறமை உண்டு என்பதற்கு உதாரணமாக இன்னொரு மனம் மகிழும் சம்பவம் ஏற்பட்டது. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அக்காலத்தில் கூட்டங்கள் பல இடங்களில் நடைபெற்றன. பிரிட்டிஷ் போலீஸôர் அந்தக் கூட்டங்களைக் கலைப்பது வழக்கம். இரண்டு காங்கிரஸ்காரர்கள் சத்யாவிடம் வந்து “நீ என்ன வேண்டுமானாலும் எழுது. இப்பொழுதுள்ள சூழ்நிலையை உனக்கு இஷ்டமான முறையில் வருணித்து எழுது. புக்கப்பட்டணத்தில் நடக்க இருக்கும் கூட்டத்தில் நாங்கள் இதனைப் பயன்படுத்துவோம்” என்று கேட்டுக் கொண்டனர். சத்யா பாடல்களை எழுதினார்.
காங்கிரஸ்காரர்கள் பாடலை மட்டுமல்ல சத்யாவையும் கூடக் கூட்டிச் செல்ல விரும்பினார்கள். சத்யாவுக்குப் பெண் போல உடை உடுத்தினார்கள். அவருக்கு புடவை அணிவித்து, ஒரு ஜூலா (ஊஞ்சல்) தயார் செய்து, அதில் ஒரு ரப்பர் பொம்மையை வைத்தார்கள். சத்யா மேடையில் நின்று கொண்டு, குழந்தைக்கு ஒரு தாலாட்டுப் பாடினார்.
“அழாதே குழந்தாய் அழாதே!
சிரிக்கத் தெரியாமல் அழுது கொண்டிருந்தால்
பாரத நாட்டு மகன் என்று எவ்வாறு உனைக் கூறுவர்”.
குழந்தையை நோக்கி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
“குழந்தாய்!
ஹிட்லர் ரμயா மீது படையெடுத்தான் என்று அழுகிறாயா?
அழாதே குழந்தாய் அழாதே!
ரμய சிவப்புச்சேனை திரும்பத்தாக்கி,
பழியும் தீர்த்துக் கொள்ளும்.
நம்நாட்டில் ஒற்றுமை இல்லையே என்று அழுகிறாயா?
அழாதே. எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கும் காலம் வரும்.
ஒற்றுமைக்கு உதாரணமாக பாரதநாடு திகழும்.
எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்பது உண்டு.
ஆகையால் குழந்தாய் அழாதிருப்பாய் நீ”.
போலீஸ்காரர்கள் பாடலை ரசித்தனர். கைகளைக் கொட்டிக் கொண்டு, சேர்ந்து பாடினர். பிரிட்டிஷ்காரர்களும் அங்கு வந்து, பாடலைக் கேட்டனர். சத்யா பாடியவிதம் மிக இனிமையாகவும், மனதைக் கவர்வதாகவும் இருந்தது. தெலுங்கு விளங்காத போதிலும் சந்தத்தினால் கவரப்பட்டு, கைகளைக் கொட்டி கா-னால் தாளம் போட்டு பாட்டை ரசித்தார்கள். அந்தக் கூட்டம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது.
போலீஸ்காரர்கள் பாடலை ரசித்தனர். கைகளைக் கொட்டிக் கொண்டு, சேர்ந்து பாடினர். பிரிட்டிஷ்காரர்களும் அங்கு வந்து, பாடலைக் கேட்டனர். சத்யா பாடியவிதம் மிக இனிமையாகவும், மனதைக் கவர்வதாகவும் இருந்தது. தெலுங்கு விளங்காத போதிலும் சந்தத்தினால் கவரப்பட்டு, கைகளைக் கொட்டி கா-னால் தாளம் போட்டு பாட்டை ரசித்தார்கள். அந்தக் கூட்டம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது.
ரிஷ்யேந்திரமணி நிகழ்த்தும் சில நிகழ்ச்சிகள் மிகவும் கடினமானவை. அவள் தன் தலைமேல் ஒரு பாட்டிலை வைத்துக்கொள்வாள். அதன் வாய்ப்புறத்தில் ஒரு தட்டு வைக்கப்படும். தட்டின் மேல் விளக்குகள் எரியும். அவள் நடனமாடிக் கொண்டே வளைந்து, இந்தப் பொருள்கள் எதுவும் தரையில் விழாதபடி சமாளித்துக் கொண்டே தரையி-ருந்து கைக்குட்டையை எடுப்பாள்.
சத்யா ஒரு நடனமாது போன்று புடவை உடுத்திக் கொண்டு, சலங்கைகள் கட்டிக் கொண்டார். கிராமத்தி-ருந்து ஒரு பழைய காரில் அழைத்துக் கொண்டு வரப்பட்டார். அதே சமயம் ரிஷ்யேந்திரமணி வந்து கொண்டிருக்கிறாள் என்று அறிவிக்கப்பட்டது. சபையோர் அனைவரும், தூங்கிக் கொண்டிருந்தவர் உட்பட, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு சுறுசுறுப்பாயினர்.
இனிய இசை ஒ-க்க கால்களில் சிலம்பு கொஞ்ச சத்யா மேடை வந்து நின்றார். ஓர் ஆசிரியர் சத்யா தலைமீது ஒரு பாட்டிலை வைத்தார். அதன் மேல் தட்டு வைக்கப்பட்டது. தட்டில் விளக்குகள் ஏற்றப்பட்டன. இவையனைத்தும் அனைவர் கண்ணுக்கு முன்னால் வைக்கப்பட்டன. சத்யா நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார். கைக்குட்டையைப் பொறுக்கி எடுப்பதற்குப் பதிலாக கண்களின் இமைகளினால் தரையி-ருந்த ஊசியைப் பொறுக்கி, ரிஷ்யேந்திரமணியை மிஞ்சி விட்டார். கரகோஷம் வானைப் பிளந்தது. பிரிட்டிஷ் கலெக்டர் மேடைக்கு வந்து ரிஷ்யேந்திரமணிக்கு ஒரு மெடல் குத்திவிட ஆசைப்பட்டார். சத்யா இதனை எவ்வாறாவது தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். தனது மதிநுட்பத்தைப் பயன்படுத்தி அவர் கூறினார்: “நான் பெண்ணாக இருப்பதால் இது மரபுக்கு விரோதமானது, தயவு செய்து மெடலைக் கையில் கொடுங்கள்.”
மறுநாள் பரிசு வழங்கும்போது, மாவட்ட போர்டு தலைவர் ராமசுப்பம்மா ரிஷ்யேந்திரமணிக்கு புடவை பரிசளிக்க விரும்பினார். அவர் ரிஷ்யேந்திரமணி என்று அழைத்தார். அனைவரும் சுற்றிப் பார்த்தார்கள். சபையி-ருந்து காற்சட்டை அணிந்த ஒரு சிறுவன் முன்வந்தான். போலீஸர் அந்த சிறுவனை “குறுக்கே வராதே, ரிஷ்யேந்திரமணி வருகிறாள்” என்று ஒரு பக்கம் தள்ளினார்கள். அப்போது தலைமை ஆசிரியர் முன்வந்து சத்யாவை மேடைக்கு கூட்டி வந்து “நேற்றைய ரிஷ்யேந்திரமணி இந்தச் சிறுவன்தான்” என்று அறிவித்தார். ராமசுப்பம்மா மிக மகிழ்ச்சியடைந்தார். அவர் சத்யாவை தூக்கிக் கொண்டு நீ இந்த பள்ளிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே நன்மை தருபவன் என்று கூறினார். அன்றி-ருந்து, அவருக்கு சத்யாவிடம் மிகுந்த மரியாதை ஏற்பட்டது. எங்கு சென்றாலும் இந்த நிகழ்ச்சியை அவர் கூறுவதுண்டு.