முடிவுரை

Print Friendly, PDF & Email
முடிவுரை

எல்லாச் சமயங்களுமே, பேதமில்லாது, உயர்ந்தவையும்,உண்மையுமாகும். ஒரே இலட்சியத்தை அடைவதற்கானவெவ்வேறு வழிமுறைகள். அனைத்தும் “மனிதர் யாவரும் சகோதரர்,இறைவனே தந்தை” என்ற கருத்தினை வலியுறுத்துகின்றன.அனைத்தும், மனிதன் சக மனிதர்களையும், படைப்பு முழுவதையும்நேசிக்க வேண்டும் என்ற உபதேசிக்கின்றன. எல்லாச் சமயங்களும்மக்களிடம் “நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்,நல்லதையே காணுங்கள்” என்று மன்றாடுகின்றன.

ஆகையால், மனித குலத்தில் ஆன்மீக, அறநெறிவாழ்க்கையினைப் போற்றி வளர்க்கும் ஒப்பற்ற பணியில்உதவிபுரிகின்ற நேசமுள்ள பங்காளர்களாக மதங்களனைத்தையும்கருதவேண்டும். வெவ்வேறு மதங்களானவை ஒன்றுக்கொன்றுஉயிருட்டம் கொடுக்கின்றன என்பதை மக்களெல்லோரும் உணரும்நிலை ஏற்படும்போது, உலகம் நாடுகின்ற அக ஒருமைப்பாடு தானாகஉருவாகும். எல்லா மரபுகளும் நம் எல்லாரையும் வளம் பெறச்செய்கின்றன என்பதை நாம் அறிய வேண்டும். ஒரு குறிப்பிட்டசமயத்தின் மரபுக்கோ நாட்டின் மரபுக்கோ மட்டுமல்ல மானிடகுலத்தின் எல்லா மரபுகளுக்கும் நாம் சந்ததிகளாக வாழ்வோமாக.இதயங்களின் ஒருமைப்பாட்டினை நாம் நாடி நிலைநிறுத்துவோம்.அதற்காகவே எல்லா மதங்களினுடைய ஒன்றிய கருத்துகள்,இசைவு, ஒருமைப்பாடு, இரண்டற்ற நிலை ஆகியவற்றைஆழ்ந்துணர வைக்கும் சர்வ மதச் சின்னத்தை ஸ்ரீ சத்ய சாயி நமக்குஅளித்துள்ளார்.

“எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்போமாக; எல்லோரும் நோயில்லாமல் வாழ்வோமாக’; “எல்லோரும் வளம் பெற்று வாழ்வோமாக; யாவரும் தீய வழியில் செல்லாதிருப்போமாக”

“அஸதோமா ஸத் கமய

தமஸோமா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதங்கமய”

மனிதன் இறைவனின் உருவத்தில் படைக்கப்பட்டான்என்பதும் பகவான் பாபா நம்மைத் திவ்யாத்ம ஸ்வரூபிகளேஎன்றழைப்பதும், பிரபஞ்சத் தெய்வீகத் தத்துவமே நமது இருப்பின்மையமும் உண்மையுமாகும் என்பதை உணர்த்துவனவாகும்.ஆனால் நம்மில் பலரிடம், நாம் திருந்தாத இந்நிலையில், கடவுள்தத்துவமானது உள்ளுறைந்த நிலையில் இருக்கிறதே தவிரநம்மிடமிருந்து வெளிப்படவில்லை.அது செயலற்றுமறைந்திருக்கின்றது. அது செயற்படும் தத்துவமாக இருப்பதற்குப்பதிலாக, நமது அகங்காரத் தன்மை செயற்பட்டு, அதனிடத்தைஆக்கிரமித்து வருகிறது. எல்லாச் சமயங்களினுடையவும்முக்கியமான ஒரே குறிக்கோளானது, நாம் புத்துயிர் பெற்று, நம்மைஆக்கிரமித்துள்ள அகங்கார உணர்வினைப் புனிதப்படுத்தி, உயரியநிலையில் கரையச் செய்து, அதற்குப் பதிலாக தெய்வீகத்தன்மையினை நம்மை ஊக்குவிக்கும் சக்தியாக மாற்ற வேண்டும்என்பதாகும். மறைந்துள்ள தெய்வீகமானது நமது எல்லாஎண்ணங்கள், சொற்கள், செயல்கள் இவற்றில் வெளிப்படும்படிசெய்ய வேண்டும் இவ்வாறு தெய்வீகத் தன்மையானது தமதுஎல்லாச்செயல்களையையும், நடத்தைகளையும்,கட்டுப்படுத்துகின்ற வழிநடத்திச் செல்கின்ற சக்தியாகமாறும்போதுதான், நாம் தெய்வீகத்தின் உண்மையாகதிருவுருவங்கள் என்றும், நமது தெய்வீக மரபின் சந்ததியாளர்கள்என்றும், கூறிக் கொள்ள அருகதை உள்ளவர்களாகிறோம்.மதங்கள் எல்லா வற்றினுடைய உண்மையான குறிக்கோள் இதுவேஅதாவது, மனிதன் தெய்வமாக மாறுதல் என்பதாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன