படைப்பு – தெய்வீகத் தின் வெளிப்பாடு

Print Friendly, PDF & Email
படைப்பு – தெய்வீகத் தின் வெளிப்பாடு
பஞ்ச பூதங்கள்

ஓரே ஒரு தெய்வீகப் பேருண்மையினைக் கருவாகக் கொண்டு பல்வேறு பொருட்களை இயற்கை வெளிப்படுத்துகிறது. ஒற்றை வெள்ளைக் கிரணத்திலிருந்து ஒரு வானவில் வெளிவருகிறது. ஆயினும் ஆகாயம், மேகங்கள் இவற்றின் பின்னணியில் ஒரு நிற வரிசையைக் காணும் போது, அது அழகின் சின்னமாக என்றும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏழு ஸ்வரங்களும் இசைவாக ஒண்றிணையும் போது, அவை பரவசமூட்டும் இசை தருகின்றன. ஆயினும் ஸ்வரங்கள் அனைத்தும் காற்றிலுள்ள அதிர்வுகளின் அழுத்தங்கள்தாம். அதுபோலவே படைப்பு முழுவதுமே பஞ்சபூதங்களாலான தெய்வீக வானவில். பல்வகைத் தன்மைதான்(Diversity) இயற்கையின் குணாதிசயமாகும்.

For the entire creation, God is the seed. Out of this seed, out of God, qualities have originated. The seed grows into a sapling. The various stages of blossoming – the sapling, the thorns, the leaves, the flowers and fruits – lie in the seed.’

– Sri Sathya Sai (13th January 1992)

படைப்பின் அனைத்து வடிவங்களிலும் அணுவிலும் நுண்ணிய அண்ட பேரண்டங்கள் வரை – தெய்வீகம் உறைகின்றது. அது என்றுமுள்ள சாட்சியாகப், படைப்பு அனைத்திலும் வியாபித்திருக்கிறது.

– ஸ்ரீ சத்ய சாயி(15-5-2000)

ரிக் வேதத்தில், சிருஷ்டி பற்றிய பாடல் கூறுகிறது. “முழுவதுமே காற்றில்லாத வெறுமையினில் தானாக இருந்த ஒன்று மூச்சுவிட்டது அதற்கப்பால் எதுவுமே இல்லை இருள் இருளால் மறைக்கப்பட்டிருந்தது பூரணமான நான் மட்டுமே தொடக்கத்தில் தனித்திருந்தேன் வேறு எதுவுமே இல்லை. பிரம்மன் சங்கற்பித்தது “நான் இவ்வுலகங்களைப் படைப்பேனாக”- என்று

‘ஓம்’ என்பதன் இதயத்திலிருந்து ஸத்தியம் வெளி வந்தது. மகிமை பொருந்திய ஒளியுடன் இவ்வுலகங்களும் வெளி வந்தன. அனைத்துமடங்கிய கடலிலிருந்து காலம் வெளி வந்தது. காலம், இரவு பகல் ஆகியவற்றை நிர்ணயித்தது.இறைவனது முதல் ஒலி ‘ஓம்’ என்பது. அதுவே படைப்புக்கு முதற் காரணமாயிற்று. அந்த ஒரே ஒப்பற்ற ஆற்றல் தத்துவமான ஓம் என்பதிலிருந்து பிரபஞ்ச முழுவதும், இடம், காலம் இவற்றின் பரிமாணங்களோடு இந்த முதல் படைப்பிலிருந்து தொடங்கின. பாபா- “இறைவன், இடம், காலம், குணங்கள் இவற்றைக் கொண்டு பல்வகைத் தன்மையுடையதாக இப்பிரபஞ்சத்தை(பிரக்ருதியை)ப் படைத்தார்” என்று கூறுகிறார். இக்கால விஞ்ஞானம் Big Bang Theory (பெருஞ்சத்தக் கோட்பாடு) என்பதைப் படைப்பின் தத்துவமாகக் கூறுகிறது. இதன் படி ஒரு மாபெரும் அணு(அளவற்ற கனம் கொண்டது) 15 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் (1500 கோடி) வெடித்தது. தனித்தன்மை வாய்ந்த இந்தச் சூழ்நிலை (Singularity- தனி நிகழ்ச்சி) காரணமாக, இந்த Big Bang நிகழ்ச்சிக்கு முந்தியது எதைப் பற்றியும் விஞ்ஞானத்தால் கூற இயலவில்லை. இந்தப் பெரும் சத்தத்துடன், இடம், காலம் என்ற பரிமாணங்களும் தொடங்கின. அந்த வெடிப்பின் சிதறல்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகி வேகமாக ஓடிக் கொண்டே இருக்கின்றது. இவ்வாறு படைப்பு, வெளியினில் விரிந்து செல்லும் பிரபஞ்சத்தைச் சித்தரிக்கிறது. தொடக்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு (Explosion) ஒன்றுமில்லாத நிலையில் பெரும் அதிர்வுகளுடன் தொடங்கியது. ஆகவே முழுப் பிரபஞ்சத்திலும் வெடிப்புச் சத்தத்தின் அதிர்வு நிறைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு சூட்சமமான வெளியிலிருந்து ஸ்தூலமான பூமி வரையில் பிரபஞ்சம் உருவாகியுள்ளது. அத்துடன் பல்வகைத் தன்மையினுள்ளும் ஒருமைத்தன்மை, தெய்வீகத்தன்மை இவற்றை பிரபஞ்சம் வெளிப்படுத்துகிறது. ஐந்து இயல்புகளும், ஐந்து புலன்களும் படைப்பினை அனுபவிப்பதற்காக ஏற்பட்டவை. சப்தம் என்பது வெட்ட வெளி (Space)யின் ஒரே குணம். அது எங்கும் நிறைந்துள்ளது. பூமி பஞ்சபூதங்களில் மிக முக்கியமானது. ஏனெனில் அதுதான் சுமந்திருக்கும் அனைத்து உயிர்களையும் போஷிக்கிறது. இவ்வாறு அதிர்விலிருந்து(Vibration) பரவுதல்(Radiation) மூலமாக, உருவம்(Materalisation) பெரும் வரை, படைப்பு அனைத்திலும் தெய்வீகத்திற்கு சாட்சியாக நிற்கிறது.

பேரண்டம்(Cosmos) முழுவதும் வெளி(Space) காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களாலானவை. ஒலி, ஊறு, வடிவம், சுவை, நாற்றம் ஆகியவை அவற்றின் இயல்புகள். இவை அனைத்தும் ஆதிகாரணமான சத்-சித்-ஆனந்தத்திலிருந்து வெளிப்பட்டவை.

– ஸ்ரீ சத்ய சாயி (15-05-2000)

மஹா பூதங்கள் இயல்பு புலன் கருவி
வெட்டவெளி (ஆகாசம்) சப்தம் (ஒலி) காது
காற்று (வாயு) தொடுகை (ஸ்பரிசம்) தோல்
நெருப்பு (அக்னி, தேஜஸ்) வடிவம் (ரூபம்) பார்வை (கண்கள்)
தண்ணீர் (ஆபஸ், ஜலம்) சுவை (ரஸம்) நாக்கு
பூமி (ப்ருத்வி) நாற்றம் (சுகந்தம்) மூக்கு
  • பல்வகைத் தன்மையே இயற்கையின் விசேஷங்கள்.
  • ஒன்று பலவகைகளாக மாற சங்கற்பித்தது.
  • படைப்பு முழுவதும் தெய்வீகத்தின் நிழல் வடிவம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: