கடவுள் பக்தி

Print Friendly, PDF & Email
கடவுள் பக்தி

Devotion

அன்பு என்பது பலவிதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது, உணரப்படுகிறது

  1. நம் நண்பனிடம் காட்டும் அன்பு– நட்பு
  2. நம் அம்மா நம்மிடம் காட்டும் அன்பு– பாசம்
  3. ஏளியவரிடம் நாம் காட்டும் அன்பு– இரக்கம்
  4. பெரியோரிடம் காட்டும் அன்பு– மரியாதை
  5. நாட்டின் மீதான நம் அன்பு– தேசபக்தி
  6. கடவுள் மீதான நம் அன்பு– கடவுள்பக்தி
தெய்வத்தின் மீதான அன்பே கடவுள் பக்தி

நாம் எல்லோரும் நம் பெற்றோரை நேசிக்கிறோம் அல்லவா? நாம் நம் தேக மாதாவிற்கு (தேகத்தை தந்த அன்னை) நம் அன்பை எவ்வாறு தெரிவிக்கிறோம்? அவள் விரும்பும் செயல்களை செய்தேயல்லவா? கடவுள் லோகமாதா-ஐம்பெரும் பூதங்கள், ஐம்புலன்கள், ஐந்து குண மேம்பாடுகள், ஐந்து வளங்கள்- இவற்றையெல்லாம் நம் மகிழ்ச்சிக்காகவே உண்டாக்கியுள்ளார். கடவுள் மீதான நம் அன்பை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்?

  • பிரார்த்தனையின் மூலமாக– கடவுளைபோற்றி துதித்து, அவரது குணங்களைப் புகழ்ந்து பாடி- தொடர்பு கொள்கிறோம். இறை நாமங்களை உச்சரிப்பதால் அமைதி, ஒத்திசைவு, மற்றும் சம நிலை கிடைக்கிறது எந்த காரியத்தை தொடங்கும் முன்பும் தர்மத்தின் உருவமான இறைவனிடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்?
  • நம் பக்தி உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் இறைவன் நம்மை காப்பாற்ற விரைந்தோடி வருவார்.
  • உண்மையான பக்தி பரிசுத்த அன்பினையும், ஆழ்ந்த நம்பிக்கையையும் நல்ல நடத்தையையும் உயரிய சிந்தனையையும், அர்ப்பணிப்பு குணத்தையும் வளர்க்கிறது.
  • இறைவனின் திரு நாமம் அன்புடனும், நம்பிக்கையுடனும் உச்சரிக்கப் படும் போது, பக்தர்களுக்கு, இறைவனின் அருளைப் பெற்றுத்தரும் வலிமையைக் கொண்டிருக்கிறது.

(தெய்வீகப்பேருரைகள்- 23 நவம்பர் 1968)

குருமார்கள், ப்ரஹ்லாதன், திரௌபதி, கஜேந்திரன், நாரதர், சபரியின்பக்தி, அனுமான் ஆகியவர்களின் கதைகளையும், நவவித பக்தியைப்பற்றி விளக்கும் கதைகளையும் சொல்லலாம்.

  • நன்றி பாராட்டல் மூலமாக– அன்பெனும் மலர்களையும், நன்றிகளையும் இறைவன் தாமரை மலர்பாதங்களில் அர்ப்பணித்தல் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்குமுன் இறைவனை நினைந்து பிரார்த்தனையுடன் ஆரம்பித்தோமே, அது போல் அச்செயல் நன்கு நிறைவுற்றதற்கு நன்றி செலுத்த வேண்டாமா?
  • பெற்றோர்க்கு மதிப்பளித்தல் மூலம்– ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ என்பது தைத்ரீய உபநிஷத்தின் வாக்கியங்கள். பூமியில் கடவுளின் உருவமாக கண்கண்ட தெய்வமாக விளங்கும் அவர்களை நாம் மதித்து நடத்த வேண்டும்.
  • செய்யும் செயல் அனைத்தையும் அர்ப்பணிப்புடன் செய்தல் மூலமாக– ‘செய்யும் தொழிலே தெய்வம்’ நாம் நமது பணிகளை முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் செய்யும்போது அதுவும் பக்தியாகாவே கருதப்படுகிறது. ஏனெனில் “கடமையே கடவுள்: செய்யும் வேலையே வழிபாடு.”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: