விளையாட்டு (கட்டுப்பாடு)

Print Friendly, PDF & Email
விளையாட்டு (கட்டுப்பாடு)
1. விதிமுறைகள்/ அல்லது விதிமுறைகளற்ற விளையாட்டுக்கள்

இப்போது குருமார்கள், குழந்தைகளை கேரம் போர்டு அல்லது ஏதாவது பலகை வைத்து விளையாடும் விளையாட்டு விளையாடச் சொல்லலாம்.ஒரே ஒரு நிபந்தனை – இந்த விளையாட்டுக்கு எந்த விதிமுறைகளும் வகுத்துக்கொள்ளக்கூடாது முதலில் இது மிகவும் பிடித்தமானதுபோல் தோன்றினாலும், விளையாட ஆரம்பித்தபிறகு நெறிமுறைகள் இல்லாத விளையாட்டில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்னும் போது சுவாரஸ்யம் இல்லை என்பதை உணர்வர். இப்போது குரு குழந்தைகளிடம் ஒரு விவாதத்தை உருவாக்கலாம். விதிமுறைகள் நமது நண்மைக்காகவே ஏற்பட்டவை. விதிகள் மற்றும் நெறிமுறைகள் இல்லாத எந்த செயலிலும் ஒரு சவால் இல்லை என்னும் போது வாழ்க்கையும் அப்படியே

2. ஒரு விளையாட்டு- சரியான கேள்வி-தவறான பதில்

குருமார்கள் சில கேள்விகளை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் முதல் கேள்விக்கான பதில் சாய்ராம் என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். இரண்டாவது கேள்வி கேட்கப்படும்போது முதல் கேள்விக்கான பதிலை கூற வேண்டும்..மூன்றாவது கேள்வி கேட்கப்படும்போது இரண்டாவது கேள்விக் கான பதிலைக் கூற வேண்டும். இது மிகவும் வேடிக்கையாக இருக்கும் குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.

மாதிரி வினா விடைகள்:
1. நீ எப்போது பல் துலக்குவாய்? சாய்ராம்
2. எத்தனை மணிக்கு டி.வி.பார்ப்பாய்? காலையில் எழுந்தவுடன்
3. எப்போது கராக்ரே ஸ்லோகம் கூறுவாய்? மாலையில் பள்ளியிலிருந்து வந்தவுடன்
4. பிராமர்ப்பணம் எப்போது கூறுவாய்? காலையில் எழுந்தவுடன் நாளை துவங்கும் முன்
5. உன் அலமாரியை சுத்தம் செய்ய நேரம் ஒதுக்குவாயா?எப்போது? தினமும் சாப்பிடும் முன்
6. நகரசங்கீர்த்தனம் செல்வதுண்டா/எப்போது? ஆம்.ஞாயிறு மாலை 3-4 மணி வரை

வேடிக்கையாக உள்ளதல்லவா?

கற்றல்

குருமார்கள் இதைப்பற்றி குழந்தைகளிடம் விவாதிக்க வேண்டும்.இது ஏன் வேடிக்கையாக உள்ளது. இப்படி தினசரி வாழ்வில் நடந்தால் என்ன ஆகும்?ஒழுங்கீனமாக இருந்தால் நாமும் நகைப்பிற்கிடமானவராக ஆக நேரிடும்.அல்லவா?இது ஒரு முக்கியமான ஆராய்ச்சி, ஏன் எனில் “ஒழுக்கம் இல்லையென்றால் நம் வாழ்வு வால் அறுந்த காற்றாடி தானே”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன