கட்டுப்பாடு

Print Friendly, PDF & Email
கட்டுப்பாடு

Discipline1

ஒழுக்கம் என்பது மக்கள், விதிகளை மதிக்கவும், நல்ல நடவடிக்கையை பின் பற்றவும் செய்யும் பயிற்சியாகும். இவை நம்முடைய சுய நன்மைக்காகவே வரையறுக்கப்பட்டுள்ளன. ஒழுக்கமில்லாது புகழில்லை (ந ஸ்ரேயோ நியமம் வினா) ஒழுக்கம் ஒருவரது நன்னடத்தையையும், குணங்களையும் வளர்க்கிறது ஒழுக்கம் கெட்ட பழக்கங்களிலிருந்து நம்மை விடுவித்து நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நாம் நல்லொழுக்கம் பயில சில யுக்திகளை கற்றுத்தருகிறார்.

எண்ணங்கள் செயல்களைத் தோற்றுவிக்கின்றன
செயல்கள் பழக்கங்களை உண்டாக்குகிறது
பிறகு பழக்கங்கள் நடத்தையை உருவாக்குகின்றன
நடத்தை வாழ்வின் இலக்கை தீர்மானிக்கிறது
நல்லொழுக்கம் இல்லா வாழ்க்கை. ஒளியிழந்த கோவிலைப்போன்றது.

((சாயி அருளமுதம் தொகுப்பு 8 பக்கம் 227)

இயற்கையிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்வோமாக!

Discipline2

இயற்கையிலுள்ள ஒவ்வொரு பொருளும் தன் நியதியின்படி நடக்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் கோள்கள் மற்றும் வாழும் உயிரினங்கள் அனைத்தும் சில விதிகளுக்கு கட்டுப்பட்டவையே. (குருமார்கள் சூரியக்குடும்பம், சூர்யோதயம் மற்றும் ஒழுங்கான சாலை போக்குவரத்து இவற்றைப் பற்றி விவரித்து இவற்றில் ஒழுங்கு முறை தவறினால் விளைவு என்னவாகும் எனக் கூறலாம்.)

“உங்களிடம் பக்தி இருக்கலாம். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் செவ்வனே செய்யலாம். ஆனால் ஒழுக்கக்குறைபாடாகும் பட்சத்தில் மற்ற இரண்டும் பயனற்றுப் போகின்றன. ஒழுக்கம் உங்கள் ஒவ்வொரு செயலையும் வரன்முறைப்படுத்துகிறது.” –பகவான் பாபா.

நம் வாழ்வை ஒழுக்கத்துடன் நடத்த பகவான் பாபா கீழ்க்கண்ட குறிப்பை கொடுத்துள்ளார்:

  1. தெய்வ நெறியை பின்பற்றுக: தீயதைப் பார்க்காதே, நல்லதையே பார், தீயதைக் கேட்காதே, நல்லதையே கேள், தீயதை பேசாதே, நல்லதையே பேசு, தீயதை எண்ணாதே, நல்லதையே எண்ணு, தீயதை செய்யாதே, நல்லதையே செய்.
  2. ஆசைக்கு வரையறை-பயிற்சி: நேரத்தை வீணாக்காதே, சக்தியை வீணாக்காதே, பணத்தை வீணாக்காதே, உணவை வீணாக்காதே.
  3. ஆன்மீக ஒழுக்கத்தில் முதல்படி நம் வார்த்தை சுத்தம். கோபமில்லாமல் இனிமையாகப் பேசுக. தன் மேதாவித்தனத்தின் மீதும் சாதனைகள் மீதும் தற்புகழ்ச்சி பாராட்ட வேண்டாம், எளிமையாகவும் சேவையாற்ற ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்; பேச்சைக் குறைத்து மெளனமாக இருக்க பயிலவேண்டும். இது நம்மை சச்சரவுகளிலிருந்தும் தீய எண்ணங்களிலிருந்தும் காப்பாற்றும்.

    (சாயி அருளமுதம் வால்யும் 2 பகுதி 6)

  4. ஒரு நாளில் ஒருமணி நேரமாவது மெளனமாக இருக்கப் பழக வேண்டும். இது நம்முடைய ஆத்மசக்தியை பாதுகாத்து மன அமைதியை உண்டாக்குகிறது எளிய வாழ்வு, உயர்ந்த எண்ணம் என்னும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.

    (அருளமுதம் வால்யும்-30 பகுதி- 17)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: