மனப்பாங்கு தேர்வு (கடமை)

Print Friendly, PDF & Email
மனப்பாங்கு தேர்வு (கடமை)

வினா 1 – வீட்டுப் பாடம் செய்யும்போது

  1. அ. நீங்களாகவே செய்வீர்களா?
  2. ஆ. பெற்றோரின் அறிவுறுத்தலின் பேரில் செய்வீர்களா?
  3. இ. வீட்டுப்பாடம் செய்து முடிக்க வேண்டும் என்பது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பீர்களா?
  4. ஈ. அம்மா அல்லது சகோதரி செய்ய எதிர்பார்ப்பீர்களா?

வினா 2– உன் வீட்டில் பூச்செடிகள், தொட்டியில் அல்லது தோட்டத்தில் உள்ளது. உன் அம்மா அவசரமாக சில நாட்களுக்கு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அம்மா இல்லாத அந்த நேரத்தில்,

  1. அ. நீ செடிகளுக்கு தண்ணிர் ஊற்றுவாய்
  2. ஆ. அப்பாவைக் கூப்பிட்டு தண்ணீர் ஊற்றச் சொல்வாய்
  3. இ. செடிக்கு தண்ணீர் ஊற்றாதது பற்றி அக்கறை கொள்ளமாட்டாய்
  4. ஈ. வீட்டில் பூச்செடிகள் உள்ளது பற்றியே தெரியாது

வினா 3 – உன்அண்ணா மின்விசிறியை மறதியாக ஓடவிட்டுவிட்டு சென்றுவிட்டார். இதைக்கண்டு

  1. அ. உடனடியாக ஸ்விட்சை அணைப்பாய்.
  2. ஆ. புகார் சொல்வதற்காக அம்மாவைத் தேடுவாய்.
  3. இ. விசிறியை நிறுத்திவிட்டு பிறகு புகார் சொல்லுவாய்.
  4. ஈ. விசிறி ஓடுவதைப்பற்றி கவலையே படாமல் நண்பர்களுடன் விளையாடப் போய்விடுவாய்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன