காற்று -1

Print Friendly, PDF & Email
காற்று -1

அறிமுகம்

காற்று இறைவனால் படைக்கப்பட்ட மிக முக்கியமான மூலக்கூறு. காற்று இல்லாமல் சிறிதுநேரம் கூட, ஜீவராசிகள் உயிர்வாழ இயலாது. காற்றினை நமது முன்னோர்கள் வாயுதேவன் என்று வழிபட்டுவந்தனர்.

இயல்புகள்

காற்றுக்கு இரு குணங்கள் உண்டு. ஒன்று ஒலி. மற்றொன்று தொடு உணர்வு . அது பற்றில்லாது இருக்கும் இயல்புடையது. அது எங்கும் அசைந்து செல்வது. ஆனால் அது எந்த இடத்தையும் பற்றிக்கொள்வது இல்லை. ஏழையோ, பணக்காரனோ மனிதனோ, விலங்கோ தாவர இனமோ. பிராணிகள் இனமோ எல்லோரிடமும் எந்த சுயநலமுமில்லாமல் எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் தன்னை வழங்குகிறது. அனைவருக்கும் அன்பாய் காற்றாக வந்து வீசுகிறது, காற்றில்லாது. இனிய இசை உருவாகாது.

கதை

பண்பில் உயர்ந்த ஓர் அரசன் இருந்தான். அவன் மக்களுக்கு எப்போதும் நன்மை செய்தான். ஒரு முறை கடையில் விலைபோகாத எந்த பண்டத்தையும் தான் வாங்கிக் கொள்வதாகப் பறைசாற்றினான். ஒரு சமயம் ஒருவன் சனீசுவரனின் சிலையைக் கடைத் தெருவில் விற்க முயன்றான். அந்த சிலையை யாரும் வாங்க முன் வரவில்லை. தனது வாக்கினைக் காப்பாற்றும் பொருட்டு அரசன் அந்த சிலையை வாங்கித் தன் அரண்மனையில் வைத்தான். இரவில், லஷ்மி தேவி அவனுக்கு முன்பு தோன்றி சனி இங்கு இருப்பதால் நான் இங்கிருந்து செல்கிறேன் என்று கூறினாள். அரசனும் பழைய பதிலையே அவரிடமும் கூறினான்.சற்று நேரங்கழித்து தருமராசன் அவன் முன் தோன்றி சனிதேவன் இங்கு இருப்பதால் தானும் செல்வதாக அறிவித்தார். அதைக் கேட்ட அரசன் பழைய பதிலையே கூறி அவன் விரும்பியபடி செய்யலாம் என்று கூறினார். பிறகு சத்யதேவன் அவன் முன்வந்து தானும் விலகப்போவதாகச் சொன்னான். அரசன் அவர் கையைப்பிடித்துக் கொண்டு “நான் உங்களைச் செல்ல அனுமதிக்க மாட்டேன். தங்களை முன்னிட்டு தான் நான் லஷ்மிதேவி தர்மதேவன் ஆகிய இருவரையும் செல்ல அனுமதித்தேன்” என்றான்.ஆகவே சத்யதேவன் தங்க இசைந்தான். அவன் செல்லவே இல்லை. அவன் தங்குவதைக் கண்டு லஷ்மியும் தர்மதேவனும் திரும்பி வந்தனர்.

பாடல் –காற்று

காற்று எவ்வளவு குளிர்ச்சியாக புத்துணர்வு தருகிறது
எனது புன்னகையும் புத்துணர்வு தரட்டும்
இறைவனின் தாமரை பாதம் அப்போது
நம்முடனே இருக்கும்
நானே உன் வாழ்வின் ப்ராணசக்தி
மூச்சுக்காற்றும் நானேயாவேன்
கொளுத்தும் வெயிலில் நான் வீசி
குளிர்ந்த தென்றலை உனக்குத் தருகின்றேன்
மலரின் மரத்தின் நறுமணத்தை
நானே சுமந்து வருகின்றேன்
பறவை பாடும் பாட்டிசையும்
நானே கொணர்ந்து தருகின்றேன்
நாணலும் மூங்கிலும் நான் வீசுவதாலே
புதிய இசை யொலியைத் தருமே.

மௌனமாக உட்காருதல்

நறுமணமலர்கள் நிறைந்த தோட்டத்துக்கு குழந்தைகளை இட்டுச் செல்லுங்கள். அங்கு அவர்கள் அமைதியாக உட்காரட்டும். கண்களை மூடிக்கொண்டு கீழ்க்கண்டவாறு அவர்கள் கற்பனை செய்து கொள்ளட்டும். “நான் ஒரு அழகிய தோட்டத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது.மலர்களின் நறுமணத்தை நுகர்கிறேன்.எனது முழுஉடலும் இந்த மெல்லிய காற்றால் குளிர்ந்து புத்துணர்வு பெறுகிறது.யாரோ ஒருவர் அருகில் புல்லாங்குழல் இசைக்கிறார்.அந்த இசையை கேட்கும் போது நான் அமைதியடைகிறேன். பறவைகளும் மரத்தில்உட்கார்ந்து பாடுகின்றன. இந்த சூழ்நிலைமுழுவதும் எனக்கு புதிய சக்தியைத் தருகிறது”.

செயல்முறை

நல்லகாற்றும் கெட்ட காற்றும்:

இரு வரிசைப் படங்களைப் பாருங்கள். உங்கள் குழுவினருடன் இவற்றை விவாதியுங்கள். காற்றின் தன்மையைச் சிறப்பாக்க என்ன வழி என்பதற்கான கருத்துக்களைக் கூறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன