நிலம் -2

Print Friendly, PDF & Email
நிலம் -2

அறிமுகம்

பூமியே நமது தாய்.பெரும்மலைகள், ஆழ்ந்த கடல்கள், நீண்ட அகன்ற காடுகள்,நதிகள்,ஏரிகள் அனைத்தையும் தாங்குகிறாள். விவசாயம், சுரங்கம், தொழில்கள் இவற்றிற்காக தனது மேற்புறம் சின்னாபின்னமாக்குவதால் ஏற்படும் வலியையும் தாங்குகிறாள். அதே சமயம் நமக்கு உணவு, இருப்பிடம், இனிய சூழ்நிலைகள், கட்டிடங்கள் ஆகியவற்றையும் தருகிறாள்.

கதை

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனது பேரன் தினமும் அவனுடன் வயல்களுக்குச் செல்வதுண்டு. அவன் வெளியில் காண்பது அனைத்தையும் பற்றி ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பான். அவனது தாத்தா வயலில் நெல்லை விதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அது பற்றியும் கேள்விக்கேட்டான். தாத்தா நெல் விதைப்பது பற்றி விவரமாகக் கூறினார். ஏன் நெல் விதைக்க வேண்டும்? எனக் கேட்டான்.தாத்தா அவனிடம் 6 மாதங்கள் காத்திருக்கச் சொன்னார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, நெல்லை மூட்டைகளாக கட்டி மூட்டைகள் வீட்டுக்கு வந்த பிறகு,அவை எங்கிருந்து வந்தன என்று பேரன் கேட்டான். அதற்கு தாத்தா பதிலாக, ஆறு மாதங்களுக்கு முன்பு நெல் விதைத்ததன் பலனாக இப்போது பல மூட்டை நெல் கிடைத்தது என்றார். பேரன் சில நேரம் யோசித்தான். பிறகு கூறினான். குறைந்த காலத்தில் அதிக வட்டி தரும் வங்கி போன்றது நமது வயல் என்று கூறினான்.

பாடல்

நானே பூமி, பூமி என்று என்னைத்தான் அழைப்பார்.
உலகினுக்குச் சேவை செய்ய என்னைப் படைத்தார்.
பிரதியுபகாரம் எதுவும் எனக்குத் தேவையில்லை.
எனது வாழ்க்கையே இறைவனுக்கு அர்ப்பணம்.
அனைவரையும் சகித்துக்கொள்ள நான் படைக்கப்பட்டேன்.
அனைவருக்கும் இடங்கொடுக்க நான் பயிற்சி பெற்றேன்.
அனைவருக்கும் வசதிதர நான் கற்பிக்கப்பட்டேன்.
மகிழ்ந்து புன்னகைத்து அனைவரையும் அணைக்கிறேன்.
கனத்து உயர்ந்து மலைகள் என் மேலே தாங்கும்.
நீண்ட பெரும் நதிகள் என் மேலே ஓடும்.
உயர்ந்த கோபுரம் மாளிகை என் மேலே நிற்கும்.
உயிரூட்டும் பயிர்களோ என்மேலே வளரும்.

மௌனமாக உட்காருதல்

பூலோக உருண்டை (GLOBE) குழந்தைகள் பார்க்க வைக்கப்பட வேண்டும். இந்த உருண்டயினை கூர்ந்து கவனிக்கும்படி அவர்களிடம் கூறவேண்டும். கூர்ந்து ஓரிரு நிமிடங்கள் கவனித்த பிறகு, குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டு நிலப்பரப்பு, நாடுகள், கண்டம் அவற்றின் நீளம், அகலம், இவற்றை மனக்கண்ணில் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறவேண்டும்.

கேள்விகள்
  1. பயிர்கள் எங்கே விளைகின்றன?
  2. செங்கற்கள் எதிலிருந்து உருவாக்கப்படுகிறது?
  3. தண்ணீர் கிடைப்பதற்கு நாம் எங்கே தோண்டவேண்டும்?
  4. தாதுப் பொருட்கள் கிடைக்கும் சுரங்கங்கள் எங்கே இருக்கின்றன?
  5. நாம் எங்கே காய்கறிகளை உற்பத்தி செய்யமுடியும்?
கதை

ஒரு கிராமத்தில் பெரும் பணக்காரன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள்.அந்த பணக்காரன் முதுமை அடைந்தான்.அவன் காலமாவதற்கு முன் தனது சொத்துக்களை மகன்களுக்கிடையே பிரிக்க ஆசைப்பட்டான்.அவனிடம் நிறைய நிலமும்,பசுக்களும்,எருமை மாடுகளும் தங்க நகைகளும் இருந்தன.மூத்த மகன் தங்க நகைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நகரத்தில் வசிக்க ஆசைப்பட்டான். இரண்டாமாவன் பசுக்களிடமும்,எருமைகளிடமும் மிகவும் அன்பாக இருந்தான்.ஆகவே அவன் கால்நடைகளையும் அவற்றைப் பராமரிக்கும் வேலையாட்களையும் கூட இட்டுச் சென்றான்.மூன்றாவது மகன் நிலத்தை எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. பணக்காரன் காலமடைந்தான்.

மகன்கள் அவர்கள் விருப்பப்படி வாழ்ந்தனர். ஒரு சமயம் அவர்களது மாவட்டத்தில் பெரும் வெள்ளம் வந்தது. கால்நடைகளைக் காப்பாற்ற வழியே இல்லை. கால்நடைகள் வைத்திருந்த மகன், சில பசுக்களையும்,எருமை மாடுகளையும் இழந்தான். உயிரோடிருந்த கால்நடைகள், உணவில்லாமல் பட்டினி கிடந்தன. அவற்றில் சில பின்னால் இறந்தன.இரண்டாவது மகனுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.செய்வதற்கு வேலையும் இல்லாமல், உணவும் இல்லாமல் கிராமத்து மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்றனர்.சிலர் திருடவும் தொடங்கினர். மூத்தவன் நகரத்தில் இருந்தபோது அங்கு ஒரு திருட்டு நடந்தது.அவனும் பல நகைகளைப் பறிகொடுத்தான்.

வெள்ளம் வடிந்தபிறகு, கிராம மக்கள் அடுத்த பயிர் விளைச்சலுக்கான முழு முயற்சி செய்தனர். நல்ல விளைச்சல் கிடைத்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். மூன்றாவது மகன் நிலம் தந்த விளைச்சலுக்காக நன்றி கூறினான்.

குழுச்செயல்

மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்க வேண்டும்.ஒரு குழு ஒரு கருத்துச் சொல்லைக் கூற அடுத்த குழு அதனால் கிடைக்கும் பயன்களைக் கூற வேண்டும். இதற்கு மதிப்பெண்கள் தரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன