நெருப்பு-1

Print Friendly, PDF & Email
நெருப்பு-1

அறிமுகம்

நெருப்பு என்ற மூலக்கூறு ஒளியைக் குறிக்கிறது. நெருப்புக்கு அக்னிதேவன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் நெருப்பை வழிபடுகிறோம். ஹோமங்கள் செய்கிறோம். தீயைக் கொண்டு நாம் அனைத்து கடவுளருக்கும் ஆரத்தி எடுக்கிறோம்.

குணங்கள் (இயல்புகள்)

நெருப்புக்கு சப்தம், ஸ்பரிசம், உருவம் ஆகிய மூன்று இயல்புகள் உண்டு. நெருப்பு தான் எரிந்து கொண்டு பிறருக்கு ஒளிதருகிறது. அது சக்தியினையும் பரப்புகிறது. சூரியனும் ஒருவிதத்தில் நெருப்பு கோளமாகும். அது சக்தியும் ஒளியும் தருகிறது. ஒளி, அறிவினைக் குறிக்கும் சின்னம். ஒளி இருட்டை விலக்குவது போல் அறிவும் அறியாமை என்னும் இருட்டை விலக்குகிறது. நெருப்பு அனைத்திலும் உள்ள மாசினை எரித்து அவற்றைத் தூயதாக்குகிறது. (உ-ம்) தங்கம். அது தூய்மையின் சின்னம் கூட. அறிவின் ஒளி ப்ரகாசிக்கும் போது வெறுப்பு, பொறாமை, பேராசை போன்ற கெட்ட குணங்கள் விலகி நற்குணங்கள் வெளிப்படுகின்றன. நெருப்பில் தீ எப்போதும் மேலே செல்கிறது, அது போலவே நாமும் உயர்ந்த சிறந்த இலட்சியங்களையும் எண்ணங்களையும் எப்போதும் கொள்ள வேண்டும்.

கதை

ஒரு நாள் இளைஞன் ஒருவன் கம்பிவாத்தியத்தில் கீழ்த்தரமான சினிமாப்பாடல் இசைத்துக் கொண்டு இருப்பதை, ஒரு சாது கேட்டார். அங்கு நின்று அழுதுகொண்டே “இறைவா, நீங்கள் மிகவும் உயர்ந்தவர். உங்களது விருப்பமில்லாமல் ஒரு இலை கூட அசையாது” என்று கூவினார். அந்த இளைஞனுக்கு கோபம் அதிகமாயிற்று. சாதுவின் தலையில் தனது கம்பி வாத்தியத்தால் அடித்தான். அந்த வாத்தியம் உடைந்தது. சாது சிரித்துக்கொண்டே சென்றார். தனது குடிசையை அடைந்ததும் சாது தனது சீடனிடம் முழு சம்பவத்தையும் கூறி அந்தப் பையனிடம் கம்பி வாத்தியத்தின் விலையையும் கொடுத்து இனிப்புப் பண்டங்களையும் கொடுக்கச் சொன்னார். ‘கோபமடைதல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல்’ என்றும், அவன் கோபம் அடைந்ததற்குத் தான் காரணமானதற்கு மிக வருந்துவதாகவும் அந்த பையனிடம் சொல்லும்படியும் கூறினார்.. இந்த பொருட்களையெல்லாம் இளைஞன் பெற்றுக் கொண்டு சாதுவிடமிருந்து அறிவுரையும் கேட்ட போது, தான் செய்த தவறை உணர்ந்தான். அவனது கண்களில், வருத்தத்துடன் கண்ணீர் ததும்பியது. அவன் சாதுவிடம் சென்று அவரை எரிச்சல் மூட்டியதற்கு மன்னிப்புக் கேட்டான்.

பொன்மொழி

‘நெருப்பு வலுவாக ஒளி வீசுவதுபோல
எனது எண்ணங்களும் எப்போதும் தெளிவாக உயர்ந்திருப்பதாக’

மௌனமாக அமர்ந்திருத்தல்

குழந்தைகளை நேராக நிமிர்ந்து உட்காரும்படி கூறவும். மௌனமாக இருந்து கீழ்க்கண்டவாறு அவர்களைச் சிந்திக்கும்படி கூறவும்: உனக்கு முன்னால் ஒரு ஏற்றப்பட்ட விளக்கு இருப்பதாகக் கற்பனை செய்து கொள். மூடிய கண்களுடன் அந்த ஒளியை உனது நெற்றிக்குக் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அதை உன் தலைக்குள் பரவச்செய். ஒளி இருக்குமிடத்தில் இருட்டு இருக்காது என்பதைக் கற்பனை செய்துகொண்டு இவ்வாறு கூறிக்கொள் ”எல்லாக் கெட்ட எண்ணங்களும் வெளியே சென்று விட்டன நல்ல எண்ணங்கள் எல்லாம் உள்ளே வந்துவிட்டன. என்னிடம் எப்போதும் நல்ல எண்ணங்களே நிறைந்திருக்கும்”

செயல்முறை

மூன்று வகையான அட்டைகளைத் தயார் செய்யவும். குழந்தைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையினை கொடுக்கவும், இவை குறிப்பது

  1. தொழில் செய்பவர்.
  2. அவர்கள் செய்யும் வேலை
  3. அவர்களுக்குத் தேவையான நெருப்பு எங்கிருந்து வருகிறது.

இவற்றை அவர்கள் ஒன்றுகூடி பொருத்த வேண்டும்.

கேள்விகள்
  1. உடலுக்குள் நெருப்பு இருக்கிறது. (தெர்மாமீட்டரைக் கொண்டு உடல் வெப்பத்தை அறியலாம். இறந்ததும் உடல் குளிர்கிறது.)
  2. சூரியனிடம் நெருப்பு இருக்கிறது. (வெறும் காகிதத்தில் லென்ஸ் மூலமாகக் கிரணங்களைக் குவியச் செய்தால் அந்த காகிதம் சூட்டினால் எரியும்.)
  3. விறகு மற்றும் கற்களில் நெருப்பு உள்ளது. (இரு மரக்கட்டைகளைக் கடைந்தாலும் கற்களை உரசினாலும் நெருப்பு உண்டாகிறது.)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன