வெட்டவெளி-2

Print Friendly, PDF & Email
வெட்டவெளி-2

குரு

என் அன்பான குழந்தைகளே! இன்று நாம் பஞ்சபூதங்களைப் பற்றிப் பேசுவோம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வெட்டவெளி (earth, water, fire, air, space) இவையே பஞ்சபூதங்கள். இவை கடவுளால் படைக்கப்பட்டவை. இப்போது மூன்று மூலக்கூறுகளை உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். பாருங்கள் – இது களிமண் உருண்டை- நிலம் என்ற மூலக்கூறு அல்லவா? இது நீருள்ள தம்ளர்- தண்ணீர் என்ற மூலக்கூறு. இது ஓர் எரியும்மெழுகுவர்த்தி-நெருப்பு என்ற . மூலக்கூறு ஐந்துபூதங்களில் மூன்றினை உங்களுக்குக் காண்பித்தேன். ஆனால், மற்ற இரண்டையும் என்னால் உங்களுக்குக் காண்பிக்க இயலாது. அவற்றை நீங்களும் கண்ணால் பார்க்க இயலாது. இந்த இரண்டுமூலக்கூறுகளைப் பற்றி மேலும் அறிய, ஒரு சிறிய பயிற்சி செய்வோமா?

முதலில் நல்ல காற்றினை நாம் மூக்கினால் சுவாசித்து உள்ளே இழுக்க வேண்டும். (இதற்கு பூரகம் என்று பெயர்)

உள்ளிருக்கும் அழுக்குகள் சேர்ந்த கெட்ட காற்றை மூக்கின் வழியாக வெளிவிடவேண்டும் (இதற்கு ரேசகம் என்று பெயர்)

இவ்வாறு காற்றை சுவாசித்தால் தான் நாம் உயிர் வாழமுடியும்.

(குரு குழந்தைகளுக்கு முன் சுவாசித்துக் காட்டி அவர்களையும் சுவாசிக்கும்படி கூறவேண்டும்.)

மூச்சை வெளிவிடும் போது நீங்கள் காற்றைக் காண்பதில்லை. ஆனால் காற்று உங்களைத் தொடுவதை உணர்கிறீர்கள். வகுப்புக்கு வெளியே செல்லும் போது உங்கள் உடலிலோ முகத்திலோ, கைகளிலோ காற்றுபடுவதை உணர்வீர்கள். காற்று வீசும் போது சப்தம் எழுகிறது.
எனவே காற்றின் இயல்பு சப்தம், தொடு உணர்வு மட்டும்தான்.

இப்போது நாம் வெட்டவெளி என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். ஆகாயம் (வெட்டவெளி) அனைத்து மூலக்கூறுகளிலும் மிகவும் நுட்பமானது. கடவுளால் முதலாவதாகப் படைக்கப்பட்டது. ஒலி மட்டுமே இந்த ஆகாசத்தின் இயல்பு. அது படைக்கப்பட்ட போது முதலில் வந்த ஒலி ஓம் எனப்படுவது. இந்த ஓம் இறைவனின் குரல் என்று கூறப்படுகிறது. ஓம் என்ற ஒலியிலிருந்து மற்ற ஒலிகள் படைக்கப்பட்டன. வெட்டவெளியிலிருந்து வாயு, அக்னி, நீர், நிலம் என்ற மற்ற மூலக்கூறுகள் வரிசைக் கிரமமாக படைக்கப்பட்டன. இப்போது இன்னொரு பயிற்சி செய்வோம். எல்லோரும் சேர்ந்து சப்தமாக ‘ராமா’ என்று சொல்லுவோமா? ராமா என்று சொல்லி முடித்து விட்டு சிறிது நேரம் மௌனத்திற்குப் பிறகும் ராமா என்ற ஒலியைக் கேட்கிறீர்களா? இல்லையே! அந்தஒலி எங்கு சென்றது? வெட்டவெளி எங்கும் வியாபித்திருப்பதால் அந்த ஒலி வெட்ட வெளியுடன் கலந்து விட்டது. நாம் பக்தியுடன் ‘ஓம்’ என்று உச்சரிக்கும் போதெல்லாம் இறைவன் மகிழ்ச்சி அடைந்து, உடலாரோக்யம், மனநலம், ஆன்மீகநலம் இவற்றை அருளுவார்.

பிரார்த்தனை

ஓம்காரம் பிந்து ஸம்யுக்தம்
நித்யம் த்யாயந்தி யோகின:
காமதம், மோக்ஷதம் சைவ
ஓங்காராய நமோ நம:
உண்மையான பக்தனால் இறைவனின் திருநாமம் உச்சரிக்கப்பட்டால் அது எப்போதும் வெட்டவெளியில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

கதை
ஜனாபாயின்கதை

ஜனாபாய் எளிய அன்புள்ள பெண்மணி. அவள் பாண்டுரங்கனின் பக்தை.அவள் எப்போதும் வீட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் போது, ரங்கா, ரங்கா பாண்டுரங்கா! என்று கூறிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் ஜனாபாய் சாது நாமதேவரிடம் தனது பசுஞ்சாணி வறட்டிகள்(cowdungcake) திருடப்படுகின்றன என்று புகார் செய்தாள்.அதற்கு நாமதேவர் அவளிடம் உனது வறட்டிகள்தான் அவை என்று எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வாய் என்று கேட்டார். அதற்கு அவள் நான் எப்போதும் இறைவன் நாமத்தை கூறிக்கொண்டே இருப்பேன். அந்த வரட்டிகளில் நான் கூறும் அந்த நாமம் பதிந்திருக்கும் என்று கூறினாள் அவள் வீட்டிற்கு ஓடிச்சென்று, ஒரு வரட்டியை நாமதேவரின் காதின் முன் வைத்தாள். ரங்கா, ரங்கா, பாண்டுரங்கா என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. நாமதேவர் அந்த வரட்டியிலிருந்து ஒலி வருவதை கேட்டார். அவருக்கு இது உண்மைதானா என்ற சந்தேகம் வந்தது .ஜனாபாயிடம் இன்னொரு வரட்டி தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டார். பசுஞ்சாணி கொண்டு வந்து ரங்கா,ரங்கா.பாண்டுரங்கா என்று கூறிக்கொண்டே வறட்டி தட்டினாள்.நாமதேவர் அதனைத் தன் காதருகில் கொண்டு வந்தார் மறுபடியும் இறைவன் திருநாமம் அதிலிருந்து ஒலித்துக் கொண்டே யிருந்தது. இறைவனின் நாமம் காலம், இடம் இவற்றை கடந்தது என்று புரிந்து கொண்டார் .மனிதன் அங்கு இல்லையென்றாலும் அவனது எண்ணங்களும் சொற்களும் தொடர்ந்து எல்லா இடங்களிலும் வெட்ட வெளியில் நிலைத்திருந்து பயன்தரும்.

பாடல்

அருமைக்குழந்தைகளே, வெட்டவெளி பற்றி ஒரு பாடல் பாடுவோமா?
குரு கரும்பலகையில் தெளிவாக எழுதுகிறார்.அவர் பாட, குழந்தைகள் பின்பற்றி பாடுகிறார்கள்.
ஓம், ஓம், ஓம் என்று நாம்
உரத்த குரலில் கூறுவோம்
எண்ணங்களும் சப்தங்களும்
ஆகாயத்தில் அடக்கம்
அனைத்து மற்ற பூதங்களும்
ஆகாயத்தில் அடக்கம்.
நல்லதே நினை, நல்லதே கேள், நல்லதே பேசு
ஆகாயத்தை தூய்மையாக வைத்திருக்கும் இவையே
இறைவனது அருளாசி பொழியும் உன் மேலே
இதைப்பற்றி சிறிதளவும் பயம் வேண்டாம் உனக்கே
வெட்டவெளி, வெட்டவெளி, வெட்டவெளி,
அனைத்து ஒலியின் மூலமும் அதுவே,
வெட்டவெளி, வெட்டவெளி, வெற்றுவெளி,
அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதும் அதுவே
வெட்டவெளி, வெட்டவெளி, வெட்டவெளி
இதுவே இறைவன் தந்த திருப்பரிசு
தூய்மையாக அதனை வைத்திருங்கள்,
வாழ்க்கை அதனால் ஒளிவீசும்.

செயற்பாடு

(இயற்கைக்கலை) வரைதலும் வண்ணம் பூசுதலும்

  1. வான்மேகம், வானவில், பறவை போன்றவை
  2. கருத்தவானம், நட்சத்திரங்கள், சந்திரன்
அமைதியாக உட்கார்ந்திருத்தல்

உன் கண்களை மூடிக்கொள். சித்திரத்தை தியானம்செய்.இயற்கையிலிருந்து மகிழ்ச்சியை கிரகித்துக்கொள்.

எழில் மிகுந்த ஒன்று என்றும் ஆனந்தம் தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: