தண்ணீர்-2

Print Friendly, PDF & Email
தண்ணீர்-2

கதை

ரமேஷ் என்று ஒரு பையன் இருந்தான்.அவன் தனது ஓய்வு நேரத்தை தோட்டத்தில் கழிக்க ஆசைப்பட்டான். ஒருநாள் கடைத் தெருவில் இருந்து சில பூச்செடிகள் வாங்கி வந்து தோட்டத்தில் நட்டான். அவற்றை அக்கறை யுடன் கவனித்துப் பராமரித்தான். சில நாட்கள் கழித்து அவனது பெற்றோர்கள் தெற்கே சில இடங்களுக்கு சுற்றுலா சென்ற போது ரமேஷும் அவர்களுடன் செல்ல நேரிட்டது.அவர்கள் 15நாட்களுக்குப் பிறகு திரும்பினார்கள்.வந்து பார்த்தபோது, ரமேஷ் செடிகளெல்லாம் கருகி இருப்பதைக்கண்டான்.

கேள்விகள்
  1. தாவரங்களை கருகச் செய்தது எது?
  2. ரமேஷ் என்ன செய்திருக்கவேண்டும்?
  3. தண்ணீர் இல்லாவிடில்,உனக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்ப்படும்?
குழுச் செயற்பாடு

மாணவர்கள் 5,6 குழுக்களாகப் பிரிந்து,தண்ணீரின் பயன்களைப் பட்டியலிட்டு விவாதிக்கவேண்டும்.தண்ணீரின் பயன்களைத் தெரிவிக்கும் சாதாரண வரைப்படங்கள் (rough sketch)எழுதி ஒவ்வொரு வரைப்படத்திற்கும் தலைப்புத் தரவேண்டும்.ஒவ்வொரு குழுவும் தான் செய்த வேலையை, வகுப்பினர் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும்.முடிவில் ஆசிரியர் அனைத்தையும் தொகுத்து பலகையில் எழுதுவார்.வரைப்படங்கள் சுவர்களில் பதிக்கப்பட்டு அனைவரது பார்வைக்கும் படித்து தெரிந்து கொள்ள வைக்கப்படும்.

குழுப்பாடல்

நீரே நீரே தண்ணீரே
கடவுள் உன்னைப் படைத்தாரே
நீயில்லாமல் நானில்லை
என் வாழ்க்கை ஜீவாதாரம் நீயே.
அனைவர் வாழ்விற்கும் இன்பம் தருகிறாய்
உன்னை என்றும் தூய்மையாக
வைப்பேன் என்று உறுதிகூறுகிறேன்
நீரே நீரே தண்ணீரே -இறைவன் உன்னைப் படைத்தாரே

கதை

பகீரதன், அரசன் திலீபனின் மகன்,பகீரதன் அரசனாகப் பட்டம் ஏறியதும்,வானத்திலுள்ள புனித கங்கையினை கொண்டு வருவதாக விரதங் கொண்டான், பிரம்மாவையும்,சிவனையும் குறித்து நீண்ட கால தவம் செய்தான் அவனது திடவுறுதியும் பக்தியும் தெய்வங்களை மகிழ்வித்தன. வானிலிருந்து இறங்கிய கங்கையின் வேகத்தை தடுக்க சிவபெருமானை சடைமுடியில் கங்கையை தேக்கி,பிறகு பூமியில் வடிய விட்டார், புனித கங்கை பூமியில் ஓடியது.புனித கங்கையின் தூய்மையான நீர் ஓடிய இடமெல்லாம்,நல்வளமும்,மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்தன.நிலம் செழித்தது.நதியின் கரைகளில் நாகரீகங்கள் வளர்ந்தன. கங்கை அன்னை வாழ்க்கை, தூய்மை, தெய்வீகம் இவற்றின் சின்னமாக விளங்குகிறாள்.

மௌனமாக உட்காருதல்

நான் காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருந்தேன். இறைவனுக்கு பிரார்த்தனை செய்தேன். படுக்கையை விட்டுச் சென்று,முகத்தை தண்ணீரால் கழுவினேன்.பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கினேன். பிறகு பல் தேய்த்து, நல்ல நீரில் குளித்தேன். தண்ணீரால் என் துணிகளை துவைத்தேன். என் அன்னை பாத்திரங்களை தண்ணீரினால் அன்றாட அலுவல்களை முடித்துக்கொண்டார். எனது தாய் தண்ணீரினுதவிக்கொண்டு உணவு சமைத்தாள்.பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியபிறகு நான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன்; பிறகு என் கைகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவிக்கொண்டேன். தண்ணீரின் உதவிக்கொண்டு தான் நான் சிற்றுண்டியும் அருந்துகிறேன் தண்ணீரே! நீ இல்லாமல் நான் உலகில் வாழமுடியாது. நீ உண்மையிலேயே மிகச்சிறந்தவன்.எங்களுக்காகஉன்னைப் படைத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். நான் ஒரு பொழுதும் உன்னை வீணாக்கமாட்டேன். உன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருப்பேன் என்று உறுதி அளிக்கின்றேன். தேவ நதியாகப் போற்றப்படும் கங்கை ஆற்றில் செய்யப்படும் இரு வித நிகழ்வுகள் கீழே சித்தரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை விவாதிக்கச் சொல்லலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன