வெளிப்புற ஒருமை

Print Friendly, PDF & Email
வெளிப்புற ஒருமை

  1. இந்து மதத்தையும், சீக்கிய மதத்தையும் தவிர, மற்றெல்லாமதங்களும் கி.மு, ஏழாம் நூற்றண்டுக்குப் பின்னரும், கி.பி. ஏழாம்நூற்றாண்டுக்கு முன்னரும் ஸ்தாபிக்கப்பட்டன. இந்து மதத்தின்மூலமானது, அறுதியிட இயலாத பண்டைய காலத்தில் உள்ளது.சீக்கிய மதம் 16ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
  2. எல்லா மதங்களும் ஆசியாவில் தோன்றின. ஆசியாக்கண்டம் மதங்களின் தொட்டில் எனக் கூறலாம்.
  3. இந்து மதத்தைத் தவிர, மற்ற மதங்களுக்குதோற்றுவித்தவர் உண்டு. யூத மதம் மோசஸாலும், கிறிஸ்தவமதம்இயேசு கிறிஸ்துவாலும், புத்த மதம் புத்தராலும் தாவோ மதம்தாவோ அவர்களினாலும் என்றிவ்வாறு எல்லா மதங்களும்தோற்றுவிக்கப்பட்டன. இந்து மதத்துக்கென்று தனி ஸ்தாபகர்இல்லை. இம்மதத்துக்கு அடிப்படையான வேதங்கள் இறைவனால்நேராக அருளப்பெற்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது.
  4. இந்து மதத்தைத் தவிர, மற்றைய மதங்கள்ஒவ்வொன்றுக்கும் புனித நூல் என்பது ஒன்றுண்டு. அந்நூலில்உள்ள உபதேசங்கள் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாக (Revealed) நம்பப்படுகிறது. கிறிஸ்துவ மதத்தின் பைபிள், இஸ்லாத்தின் குரான். இந்து மதத்திற்கென்று தனியான புனித நூல்எதுவுமில்லை. ஆனால் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத்கீதை ஆகிய இம்மூன்றும் சேர்ந்து “பிரஸ்தான த்ரயம்” என்றுகூறப்படுகின்றன இவையே இந்துக்களுக்கு முக்கியமான மறைநூல்களாகக் கருதப்படுகின்றன.
  5. எல்லா மதங்களுக்கும் புனிதப் பயணத்துக்கான புனிதத்தலங்கள் உண்டு. இந்துக்களுக்கு காசி, முஸ்லிம்களுக்கு மெக்கா.
  6. எல்லா மதங்களிலும் உண்ணா நோன்பு நோற்பதற்கும்,ஆன்மீகப் பயிற்சிகள் புரிவதற்கும் சில புனித நாட்கள்வரையறுக்கப்பட்டுள்ளன. இந்துக்களுக்கு மகா சிவராத்திரி,முஸ்லிம்களுக்கு ரம்ஜான்.
  7. ஒவ்வொரு மதத்திலும், காலக் கிரமத்தில் பற்பல பிரிவுகள்உருவாகின்றன. கிறிஸ்தவ மதத்தில் கத்தோலிக்கர்கள்,ப்ரொடஸ்டன்ட் வகுப்பினர், இஸ்லாத்தில் ஷீயா, ஸன்னிவகுப்பினர், புத்த மதத்தில் மஹாயான, ஹீனயான வகுப்பினர்.
  8. பிரார்த்தனையும், (வேண்டுதலும்) வழிபாடும் மதங்கள்அனைத்திலும் அடிப்படையானவை; ஆனால் வழிமுறைகள் வேறுவேறாக இருக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன