பஞ்சபூதங்கள்- அறிமுகம்

Print Friendly, PDF & Email
பஞ்சபூதங்கள்- அறிமுகம்

மழைக்குப் பிறகு, வானத்தில் நாம் வானவில்லைக் காண்கிறோம். அதனிடம் ஏழு நிறங்கள் உள்ளன. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு,சிவப்பு(vibgyor). ஆயினும் இவை அனைத்தும் வெண்மையான ஒளி கிரணங்களில் இருந்து தான் வெளிவந்தன. ஆனால் வெண்மையான ஒளி இல்லாமல் ஏழு நிறங்கள் கொண்ட வானவில் உருவாவது சாத்தியமல்ல. அதுபோலவே இந்த முழுபடைப்பினையும் காணும் போது நாம் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். அதேசமயம் இதற்கெல்லாம் மூலகாரணமான இறைவனைப் பற்றிச் சிந்திக்க மறந்து விடுகிறோம்.

சூரியனின் வெள்ளைக் கதிர்களை மழைத்துளிகள் ப்ரிசம் போன்று செயல்பட்டு ஏழுநிறங்களாகப் பிரிக்கின்றன. அதேபோல இறைவனின் தெய்வீக ஒளியிலிருந்து பஞ்சபூதங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. பேரண்டத்தின் பல்வகைத் தன்மையினை மகிழ்ந்தனுபவிக்க தக்கவாறு நமது மனமும் ப்ரிசம் போலச் செயல்படுகிறது.

சாதாரணமாகப் பஞ்சபூதங்களுக்கிடையே ஒரு முழுமையான இசைவு இருக்கிறது. நமது உடலும் பஞ்சபூதங்களால் தான் ஆக்கப்பட்டது. பஞ்சபூதங்களைச் சமநிலையில் நாம் வைத்திருந்தால் நாம் ஆரோக்கியமாக இருப்போம். அப்போது படைப்பிலுள்ள பஞ்சபூதங்களின் சமநிலையும் இதனால் மாறாது இருக்கும்

கதை

ஒரு பாட்டிலின் உள்ளே கடலை நிரப்பப்பட்டு, அது மேசை மேல் கிடந்தது. ஒரு சிறுவன் அதை பார்த்துப் பேராசையுடன் அதன் அருகில் வந்தான். தனது கையை அதனுள் விட்டு கை நிறையக் கடலையை அள்ளினான். கையை வெளியே கொண்டு வர முயன்றான், துரதிருஷ்டவசமாக, அந்த பாட்டிலின் வாய் மிகவும் குறுகலாக இருந்தது. அவனது கை முஷ்டி பாட்டிலில் சிக்கிக்கொண்டது. அவன் அழத் தொடங்கினான். அருகில் உட்கார்ந்திருந்த அவன் தந்தை அவனிடம் கடலைகளைக் கீழே போடு, கொஞ்சம் கடலை மட்டும் உனது கையில் எடுத்துக் கொள்” என்று கூறினார். பையனும் அவ்வாறே செய்தான். கையும் வெளிவந்தது. அவனும் மகிழ்ச்சியடைந்தான். கிடைத்த கடலையைக் கொண்டு திருப்தி அடைந்தான்.

கருத்து

கடவுள் பஞ்ச பூதங்களை படைத்தார்

ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர், நிலம் என்றவை

நாமும் பஞ்சபூதங்களால் ஆனவர்கள்

இயற்கை அன்னை எப்படியோ

அப்படியே ஒவ்வொரு உயிரும் உள்ளது

வினாடி வினா

பஞ்ச பூதங்கள் இங்கே எழுதப்பட்டுள்ன. ஒவ்வொன்றுக்கும் எதிரே நான்கு சொற்கள் எழுதபட்டுள்ளன. எது குறிப்பிட்ட பூதத்துக்குப் பொருத்தமானதோ அதை கூறு.

  1. ஆகாயம் :ப்ரபஞ்சம், வெட்டவெளி ,வானம். மேகம்
  2. வாயு : காற்று, வீசும் காற்று, தென்றல், புயல்காற்று
  3. அக்னி : புகை, எரிமலை, நெருப்பு, அக்னிக்குழம்பு
  4. ஜலம் : மழை, தண்ணீர், குளம், ஏரி
  5. பிருத்வி : பூமி, பாறை, மணல், சிமெண்ட்
பிரார்த்தனை

“உயிரையும் ஒளியையும் படைத்த இறைவா

நன்றி கூறுகிறோம் தங்களுக்கு

எழில்மிகுந்த இவ்வுலகைப் படைத்ததற்கு

ஏறுவதற்குக் குன்றுகள் உள்ளன

நீந்திச் செல்ல ஆழ்ந்த நீர் உள்ளது

வறண்ட நிலத்தில் பெய்த மழையின் சுகமான நறுமணமும் உள்ளது

ஒரு கணத்தில் இதயத்தை நிறையச் செய்து

சுவர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் இசையும் உள்ளது

நேசக்கரம் பற்றும் நண்பனும் இங்கே

இவ்வனைத்தையும் படைத்த தங்களுக்கு

நன்றி கூறுகிறோம் இறைவா நன்றி கூறுகிறோம்”

மௌனமாகஉட்கார்ந்திருத்தல்

கண்களை மூடிக்கொண்டு இயற்கையின் இன்பங்களை மனக்கண் முன்கொண்டு வரப் பின்னணியில் மெல்லிய இசை இருப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன