நட நில்

Print Friendly, PDF & Email

நட நில்

விளையாட்டின் நோக்கம் :

கேட்கும் திறனை வலுப்படுத்தவும், பாகுபாட்டைப் பயன்படுத்தி கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுமே இவ்விளையாட்டின் நோக்கமாகும்.

கற்பிக்கப்படும் குணங்கள்:

கீழ்ப்படிதல்

கவனிப்பு

பாகுபாடு

விளையாட்டு:
  1. குழந்தைகள் ஒரு வரிசையில் நிற்கும்படி கேட்கப்படுகிறார்கள்.
  2. குரு விளையாட்டை இவ்வாறு விளக்குகிறார்- ‘அனைவரையும் நேசிக்கவும்’ என்ற கட்டளை கொடுக்கப்பட்டால், குழந்தைகள் நடக்க வேண்டும், ‘அனைவருக்கும் சேவை செய்’ என்ற கட்டளை கொடுக்கப்பட்டால், அவர்கள் நடப்பதை நிறுத்த வேண்டும்.
  3. குரு திரும்பத் திரும்பச் சொல்கிறார்- ‘அனைவரையும் நேசி, அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்….’.
  4. தடுமாறுபவர்கள் விளையாட்டிலிருந்து நீங்கிக் கொள்ள வேண்டும்..
  5. அடுத்து, கட்டளைகள் தலைகீழாக மாற்றப்படுகின்றன. இந்த நேரத்தில் அவர்கள் ‘அனைவருக்கும் சேவை செய்’ கட்டளைக்கு நடக்க வேண்டும் மற்றும் ‘அனைவரையும் நேசிக்கவும்’ கட்டளைக்கு நிற்க வேண்டும். (தலைகீழ்).
  6. குழந்தைகளின் உற்சாகத்திற்காக இது பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படலாம்.
    விளையாட்டின் போது கட்டளைகளை சரியாக பின்பற்றாதவர்கள் விலகுகிறார்கள்.
  7. விளையாட்டின் முடிவில், கடைசிவரை கட்டளைகளை சரியாக பின்பற்றி இருப்பவர் வெற்றியாளர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன